துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவுக்கு கொரோனா தொற்று உறுதி
டெல்லி: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அறிகுறிகள் இல்லாமல் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதால் வீட்டில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தனிமைப்படுத்திக் கொண்டார்.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 61 லட்சத்தை தாண்டியுள்ளது. கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 96, 671 ஆக உயர்ந்திருக்கிறது.

அதேநேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குண்மடைந்தோர் எண்ணிக்கை 51,27,600 ஆகவும் உயர்ந்திருக்கிறது. இந்த நிலையில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக துணை ஜனாதிபதி அலுவலகத்தின் ட்விட்டர் பக்கத்தில், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவுக்கு வழக்கமான கொரோனா பரிசோதனைகள் இன்று காலை மேற்கொள்ளப்பட்டன. இதில் வெங்கையா நாயுடுவுக்கு கொரோனா தொற்று உறுதியானது.

அறிகுறிகள் இல்லாமல் கொரோனா தொற்று உறுதியானதால் அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டார். வெங்கையா நாயுடு தற்போது நலமுடன் இருக்கிறார். அவரது மனைவி உஷா நாயுடுவுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என பரிசோதனையில் தெரியவந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
2047ல் இந்தியா வல்லரசு.. வாய்ப்பில்லை ராஜா! இன்னும் 34 வருஷமாகும்.. உண்மையை உடைத்த ஆய்வறிக்கை! -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா












Click it and Unblock the Notifications