செக்க செவேலென அழகிய ரோஜாப்பூ.. உள்ளே உற்று பார்த்தால் நீல நிறத்தில் பயங்கரம்.. வைரலாகும் வீடியோ

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஒரு ரோஜா தோட்டத்தில் அழகான மலரில் நீல நிறத்திலான கடுமையான விஷத்தன்மை கொண்ட பாம்பு ஒன்று இருந்த வீடியோ வைரலாகி வருகிறது.

பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என்பது பழமொழி. அந்த வகையில் தற்போது இணையதளத்தையே நடுங்கும் அளவுக்கு ஒரு சம்பவம் நடந்துள்ளது. ஒரு ரோஜா திட்டத்தில் அழகான மலர் பூத்துள்ளது.

அந்த மலரை பறிக்கச் சென்றவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. காரணம் ஒரு பூவில் ஒரு சிறிய நீல நிற பாம்பு நெளிந்து கொண்டிருந்தது. ஒரு பாம்பில் என்ன விஷயம் இருக்கிறது என நீங்கள் கேட்கலாம்.

சமூகவலைதளம்

சமூகவலைதளம்

அது நீல நிறத்தில் இருந்தது. அந்த பாம்பு மிகவும் விஷத்தன்மை வாய்ந்தது என ட்விட்டர்வாசிகள் தெரிவித்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் போட்ட சில மணி நேரங்களில் ஏராளமானோர் பார்த்துள்ளனர்.

இந்தோனேஷியா

இந்தோனேஷியா

இந்த பாம்பு கொடிய விஷம் கொண்டது. தீண்டினால் அடுத்த நொடியே இறப்புதான் என்கிறார்கள். இந்த பாம்புகள் இந்தோனேஷியாவில் உள்ள சுந்தா தீவுகளில் அதிகம் காணப்படுகிறது.

சிவப்பு நிறம்

சிவப்பு நிறம்

இது தீவுகளில் வசிக்கும் என்பதால் கொடூரமாக வேட்டையாடும். பாலியில் உள்ள தெருக்களில் இந்த பாம்பு அதிகம் காணப்படும். இந்த பாம்பை உண்டால் சாவு நிச்சயம் என்கிறார்கள். இன்னும் சிலர் பாம்பின் விஷத்தன்மை குறித்து கவலைப்படாமல் நீல நிறம், சிவப்பு நிறம் மிகவும் நல்ல காம்பினேஷனாக உள்ளது என்கிறார்கள்.

அதிர்ச்சி

அதிர்ச்சி

பொதுவாக தாழம்பூவில்தான் பாம்பு இருக்கும் என்பார்கள். ஆனால் இந்த ரோஜாப்பூவில் பாம்பு இருப்பதை பார்க்கும் சிலர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். மேலும் இது போன்ற பெரிய தோட்டங்களில் பூக்களை பறிப்போர் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+