தலைதெறிக்க ஓடும் பாகிஸ்தான் தீவிரவாதிகள்.. ஓட ஓட சுட்ட இந்திய ராணுவம்.. வெளியான மாஸ் வீடியோ

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    பாகிஸ்தான் தீவிரவாதிகளை ஓட ஓட சுட்ட இந்திய ராணுவம்.. வெளியான மாஸ் வீடியோ

    டெல்லி: இந்திய ராணுவத்தின் அதிரடித் தாக்குதலால் நிலைகுலைந்து, பின்னங்கால் பிடறியில் அடிக்க பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் தப்பி ஓடும் காட்சிகளை நமது ராணுவம் வீடியோவாக வெளியிட்டுள்ளது.

    பாகிஸ்தான் எல்லைக்குள் நமது விமானப்படையினர் புகுந்து சென்று பாலகோட் பகுதியில் தீவிரவாத முகாம்களை தாக்கி அழித்தனர். ஆனால் மறுநாளே தடையங்கள் அனைத்தையும் பூசி மெழுகி விட்ட பாகிஸ்தான் அப்படி ஒரு தாக்குதல் நடைபெறவில்லை என்றும், பாகிஸ்தான் ராணுவம் இந்திய தாக்குதலை முறியடித்து விட்டது என்றும் பெருமை பீற்றியது.

    சில சர்வதேச ஊடகங்களும் கூட பாலக்கோடு பகுதியில் தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடந்த தடையம் கிடைக்கவில்லை என்றும், சில மரங்கள் வேரோடு பிடுங்கி எறிய பட்டுள்ளது என்றும் செய்தி வெளியிட்டன.

    வீடியோக்கள்

    இந்த நிலையில்தான் இப்போதெல்லாம் இந்திய ராணுவம் தனது தாக்குதல்களை வீடியோவாக எடுத்து வெளியிட ஆரம்பித்துள்ளது. சமீபத்தில் பாகிஸ்தான் அதிரடிப்படையினர் இந்திய எல்லைக்குள் நுழைய முற்பட்டபோது குண்டு வீசி கொல்லப்பட்ட காட்சியை வெளியிட்டது.

    இன்று வெளியான வீடியோ

    இன்று வெளியான வீடியோ

    இதேபோல இப்போது ஒரு பரபரப்பு காட்சி வெளியாகியுள்ளது. காஷ்மீரின் குப்வாரா பகுதியில் உள்ள இந்திய-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் 4 தீவிரவாதிகள் ஊடுருவ முற்பட்டுள்ளனர். இதை சரியான நேரத்தில் கண்டுபிடித்து விட்ட இந்திய ராணுவம், அவர்கள் மீது அதிரடியாக துப்பாக்கிச்சூடு தாக்குதலை தொடங்கியது.

    சீறிப்பாயும் குண்டுகள்

    சீறிப்பாயும் குண்டுகள்

    இதனால் நிலைகுலைந்த தீவிரவாதிகள் பாறைகளின் பின்னால் ஒழிந்துகொள்கிறார்கள். அப்படியும் தாக்குபிடிக்க முடியவில்லை என்பதால் எல்லைக்குள் நுழையும் திட்டத்தை கைவிட்டு பின்னங்கால் பிடரியில் அடிக்க தப்பி ஓடுகின்றனர். அவர்கள் தலைகளுக்கு மேல் துப்பாக்கி குண்டுகள் சீறிப்பாய்கின்றன. இந்த காட்சி இந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளது.

    உளவுத்துறை எச்சரிக்கை

    உளவுத்துறை எச்சரிக்கை

    இந்திய உளவுத்துறை தகவல்படி, சுமார் 500 தீவிரவாதிகள் இந்திய-பாகிஸ்தான் எல்லையில் நமது எல்லைக்குள் ஊடுருவ தயாராக இருக்கிறார்கள். எனவே இரவு பகல் பாராமல் இந்திய ராணுவம் தீவிரமான கண்காணிப்பு பணிகளை நடத்தி வருகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+