'இவங்க பைத்தியமாக இருக்கனும்'.. பதறிய இளைஞர்கள்.. எவ்வளவு கூலாக இந்த பெண்கள் செய்றது பாருங்க!
டெல்லி: வடமாநிலங்களில் கனமழை பெய்துள்ளதால் ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சாலையோரங்களில் திடீரென காட்டாற்று வெள்ளம் உருவாகி சாலைகளையே துண்டித்து வருகின்றன. இந்நிலையில் அப்படியான ஒரு சாலையில் இரண்டு இளம் பெண்கள் ஆபத்தை உணராமல் ரீல்ஸ்க்காக செய்த சேட்டையை பலரும் விமர்சித்து வருகிறார்கள்.
ஆபத்தான இடங்களில் செல்பி எடுத்தாலும் ஆயுள் முடிந்துவிடும். அண்மையில் ஒரு செய்தி, திருப்பூரில் என்று நினைக்கிறேன். ரயில் வரும் போது அதற்கு முன்பு செல்பி எடுக்க இரண்டு இளைஞர்கள் விரும்பி உள்ளார்கள். ரயில் அவர்களுக்காக சும்மாவா நிற்கும். அவர்கள் விதி அத்தோடு முடிந்தது.

ரயிலில் மட்டுமல்ல, கனமழையால் ஆறுகளில் வெள்ளம் பாய்ந்தோடும் போது இப்படி செல்பி எடுக்க ஆசைப்பட்டு உயிரை விட்டவர்கள் மிக அதிகம். ஆபத்தான இடங்களில் செல்பி ஆசை பற்றி எத்தனை முறை விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், சில இளைஞர்கள், பெண்கள் புரிந்து கொள்வது இல்லை. உயிரை துச்சமாக நினைத்து அவர்கள் செய்யும் சேட்டை, அவர்களின் உயிரையே பறித்து விடுகிறது. அவர்களின் பெற்றோருக்கு ஆறாத காயத்தை ஏற்படுத்தி விடுகிறது.
சரி விஷயத்திற்கு வருவோம். இமயலை பகுதியில் வரலாறு காணாத மழை பெய்துள்ளது. அங்கு அதனால் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் பாலங்கள் நீரில் அடித்து செல்லப்பட்டுள்ளன. ஹோட்டல்கள் நிலச்சரிவில் சரிந்துள்ளன. தேசிய நெடுஞ்சாலைகளே காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளன. இயற்கையின் மீது நாம் எத்தனை கட்டமைப்புகளை ஏற்படுத்தினாலும், அத்தனையையும் ஒரே நொடியில் சிதைத்து இயல்பு நிலைக்கு கொண்டு வந்துவிடுகிறது. சாலைகள் பல காணாமல் போய்விட்டன. திரும்பவும் இயல்பு நிலைக்கு கொண்டுவர பேரிடர் மீட்பு படையினர் போராடி வருகிறார்கள். பலர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.
இந்த சூழலில் சாலையில் திடீரென உருவான காட்டாற்று வெள்ளம் காரணமாக வாகனங்கள் சாலையை கடக்க முடியாமல் அச்சத்துடன் நிற்கிறார்கள், இந்நிலையில் இன்று இளம் பெண்கள் கொஞ்சம் கூட அச்சப்படமால் நேராக அதன் அருகில் சென்றனர். அருவி போல் வந்த நீரின் முன்பு நின்று ரீல்ஸ்க்கு போஸ்கொடுத்தனர். இதனை அவர்கள் வீடியோவும் எடுத்தனர்.
அவன அவன் உயிரைக் கொடுத்து கஷ்டப்பட்டு இருக்காங்க
— 𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁 (@FilmFoodFunFact) July 12, 2023
இதுங்கள பாருங்க... pic.twitter.com/hf7RgFecnK
நீரின் வேகம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வந்து கொண்டிருந்த நிலையில், அவர்களுக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை. வீணாக போய் வாழ்க்கைய தொலைக்க முயற்சித்த அந்த பெண்களின் வீடியோ ட்விட்டரில் வெளியாகி உள்ளது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் கண்படி திட்டி வருகிறார்கள். முட்டான்தளத்தின் உச்சம் என்று திட்டுகிறார்கள். மெண்டல் தனம் என்று சிலர் கோபத்தில் திட்டி இருக்கிறார்கள்.
உண்மையில் மனநிலை பாதித்தால் மட்டுமே இப்படி ஒரு ஆபத்தை தேடிப்போக முடியும். தயவு செய்து இதுபோன்ற சாகசங்களை செய்ய முயற்சிக்க வேண்டாம்.உங்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லாமல் போகும். ரீல்ஸ் மோகம் எப்படி எல்லாம் ஆட்டி படைக்கிறது என்பதை இந்த வீடியோவில் பாருங்கள்.












Click it and Unblock the Notifications