11.30 டூ 6.30! விஜய்யிடம் 7 மணி நேர விசாரணை! டெல்லியில் நைட் ஸ்டே! சிபிஐ கேட்ட கேள்வி இதுதான்!
டெல்லி: கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் சிபிஐ முன்பு ஆஜரான விஜய்யிடம் 7 மணி நேர விசாரணை முடிந்த பிறகு அவர் வெளியே வந்தார். இதையடுத்து இன்று இரவு டெல்லியிலேயே விஜய் தங்குகிறார். நாளை சென்னை திரும்புகிறார் என சொல்லப்படுகிறது.
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான வழக்கில் ஆஜராகுமாறு விஜய்க்கு சம்மன் அனுப்பப்பட்டதன் பேரில் அவர் டெல்லி லோதி சாலையில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் இன்று காலை 11.30 மணிக்கு ஆஜரானார்.

இதற்காக அவர் சென்னையிலிருந்து தனிவிமானத்தில் டெல்லி வந்தடைந்தார். இன்று காலை 11 மணிக்கு விஜய்யை அழைத்திருந்த நிலையில் அவர் தாமதமாக 11.30 மணிக்கு வெளியே வந்தார். இந்த நிலையில் அவரிடம் 7 மணி நேர விசாரணைக்கு பிறகு டெல்லி சிபிஐ அலுவலகத்தில் இருந்து காரில் வெளியே வந்தார்.
அவருடன் நிர்மல் குமார், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் இருந்தனர். இந்த நிலையில் இன்று விஜய்யிடம் கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் யாருக்கு பொறுப்பு, தவெக பிரச்சார கூட்டத்திற்கு கட்சி சார்பில் என்னென்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டன என்ற கேள்விகளை கேட்டிருந்ததாக சொல்லப்படுகிறது.
மேலும் விஜய்யிடம் நாளையும் விசாரணை நடத்தப்படுவதால் அவர் இன்று இரவு டெல்லியிலேயே தங்குவார் என சொல்லப்படுகிறது. 1136 பக்க சிறப்பு புலனாய்வு குழு அறிக்கையின் அடிப்படையில் கேள்விகள் எழுப்பப்பட்டன.
இந்த நிலையில் விஜய் கேட்டுக் கொண்டதற்கிணங்க நாளை விசாரணை இல்லை என்றும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் ஒரு தகவல் கிடைத்துள்ளது. எப்போது அழைத்தாலும் ஆஜராக வேண்டும் என சிபிஐ தெரிவித்ததாகவும் சொல்லப்படுகிறது.
விஜய்யின் வருகையை முன்னிட்டு டெல்லி சிபிஐ அலுவலகத்தை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழு இந்த விசாரணையைத் தீவிரமாக கண்காணித்தது.
இந்த விசாரணையின் போது நீங்கள் ஏன் கரூரில் அந்த சம்பவம் நடந்ததும் அங்கிருந்து கிளம்பினீர்கள் என கேள்வி எழுப்பப்பட்டதாம். அதற்கு அவர் இந்த சம்பவம் நடந்த பிறகு நான் அந்த இடத்தில் இருந்திருந்தால் இது தேவையில்லாத குழப்பத்தையும் சலசலப்பையும் ஏற்படுத்தும் என நினைத்ததால் மட்டுமே அந்த இடத்தை விட்டு வெளியேவிட்டேன் என விஜய் தெரிவித்திருந்தார்.
இதே பதிலைத்தான் புஸ்ஸி ஆனந்த், ஆதவ், நிர்மல் குமார் ஆகியோர் தெரிவித்திருந்தனராம். விஜய் ஏன் தாமதமாக வந்தார் என்பது குறித்தும் அவரிடம் விசாரித்ததாகவும் சொல்லப்படுகிறது. கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் தமிழக ஆயுதப்படை டிஜிபியாக இருக்கும் டேவிட்சன் தேவாசீர்வாதத்திடமும் விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
-
வாத்தி கம்மிங்.. மீண்டும் டெல்லிக்கு பறக்கும் விஜய்! ’மேலிட’ தலைவர்களை சந்திக்க வாய்ப்பு! பரபர களம்! -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
“மின்வாரிய பதவி உயர்வு விவகாரத்தில் பொய்.. தவெக அரசின் பித்தலாட்டம்”.. பாய்ந்து வந்த திமுக! -
விஜய் தவெகவின் ‘வெற்றி டிவி’? டெல்லியில் டிரேடுமார்க் விண்ணப்பம்! களமிறக்கப்படும் பிரம்மாண்ட திட்டம் -
“வல்லாரை கீரை சாப்பிடுங்க விஜய்”.. முதல்வருக்கு தபாலில் அனுப்ப வந்த 3 பேர் கைது! -
திமுக ஆட்சியில் போடப்பட்ட டெண்டர் ரத்து? ரூ.2,100 கோடி ECR திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்ட விஜய் -
கள்ளச்சாராயம் ஒழிக்க தனிப்படை.. கள்ளக்குறிச்சியில் விஜய் அரங்கேற்றும் மாற்றம்.. ஆதவ் அர்ஜுனா சர்ப்ரைஸ் -
“ஆதவ் அர்ஜுனாவுக்கு தொடர்பா? தைரியம் இருந்தா சட்டரீதியாக திமுக நிரூபிக்கட்டும்”.. தவெக பதிலடி! -
கோவில்ல பிஸினஸ் நடக்குது.. விஜய் போட்ட பெரிய ஆர்டர்! யாரும் தப்ப முடியாது! இசஅ அமைச்சர் ரமேஷ் உறுதி! -
திருச்சி கிழக்கு விஜய் வென்ற தொகுதி.. அங்கு காங்கிரஸ் போட்டியிடாது.. ராஜேஷ் குமார் திட்டவட்டம்! -
"எதே ராகவா லாரன்ஸா.. அடேய் விஷால் நீயும் கட்சி ஆரம்பி" தெறிக்கும் அரசியல் மீம்ஸ்! -
"தமிழகத்தில் அண்ணாமலைக்கும் மன்சூர் அலிகானுக்கும் தான் போட்டி!" நக்கலடித்த தவெக எம்எல்ஏ முஸ்தபா












Click it and Unblock the Notifications