தனி அறையில் துருவித்துருவி விசாரித்த சிபிஐ! விஜய் முகத்தை பார்த்தீங்களா? டெல்லி விமான நிலையத்திற்கு புறப்பட்டார்
டெல்லி: கரூர் துயர சம்பவம் குறித்து நேற்றைய தினம் 7 மணி நேர விசாரணைக்கு பிறகு இன்று விஜய் சென்னை திரும்புகிறார். இதற்காக அவர் டெல்லி விமான நிலையத்திற்கு புறப்பட்டுள்ளார். அங்கு தனி விமானத்தில் சென்னை விமான நிலையம் வருகிறார். அவரிடம் இன்றும் விசாரணை நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் விலக்கு கேட்டதால் நிபந்தனையுடன் சிபிஐயும் ஒப்புக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனால் பொங்கல் பண்டிகைக்குப் பிறகு, தவெக தலைவர் விஜயிடம் மீண்டும் விசாரணை நடத்த சிபிஐ திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி கரூரில் நடைபெற்ற விஜய் பிரசாரத்தில், கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் தமிழகத்தை உலுக்கியது.

ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் சிபிஐ இந்த வழக்கை தீவிரமாக விசாரித்து வருகிறது. தவெக செயலாளர்கள் புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல்குமார், கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் ஆகியோரிடம் ஏற்கனவே விசாரணை நடந்தது. புஸ்ஸி ஆனந்தும், ஆதவ் அர்ஜுனாவும் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளித்திருந்தனர்.
கரூரில் நிகழ்ந்த உயிரிழப்புகள் குறித்து விசாரிக்க, ஜனவரி 12 அன்று காலை 11 மணிக்கு டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜராக விஜய்க்கு சம்மன் அனுப்பப்பட்டது. சம்மனை ஏற்று, நேற்று சென்னையிலிருந்து தனி விமானத்தில் புறப்பட்ட அவர், Y பிரிவு பாதுகாப்புடன் ஐடிசி மவுரியா ஓட்டல் வழியாக, காலை 11.30 மணியளவில் சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார்.
விஜயிடம் விசாரணை தொடங்கியபோது, அதிகாரிகள் பல கேள்விகளை எழுப்பினர். "கரூரில் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது யார்? உங்களுக்கு அனைத்து தகவல்களும் தெரிவிக்கப்பட்டதா? நிகழ்ச்சிக்குச் செல்லப் பல மணி நேர தாமதம் ஏன்?" என ஒன்றரை மணி நேரம் கிடுக்கிப்பிடி விசாரணை நடைபெற்றது.
மேலும், "கூட்டம் அதிகரித்தபோது கட்டுப்படுத்த முயற்சித்தீர்களா? கூட்ட நெரிசல் பற்றி எப்போது அறிந்தீர்கள்? இதுகுறித்து நிர்வாகிகள் முன்கூட்டியே உங்களுக்குத் தெரிவிக்கவில்லையா? தண்ணீர், பாதுகாப்பான நுழைவு, வெளியேறும் வழி போன்றவை ஏற்பாடு செய்யப்பட்டதா?" என்றும் சிபிஐ அதிகாரிகள் விஜயிடம் கேள்வி எழுப்பினர்.
விஜய் ஒவ்வொரு கேள்விக்கும் விளக்கம் அளித்ததாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே பலரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் அவரிடம் கேள்விகள் எழுப்பப்பட்டன. ஏழு மணி நேரம் நடைபெற்ற விசாரணைக்குப் பிறகு, ஆவணங்களில் கையெழுத்திட ஒன்றரை மணி நேரம் அவர் தனி அறையில் அமரவைக்கப்பட்டிருந்தார்.
தவெக தலைவர் விஜயிடம் நடைபெறவிருந்த சிபிஐ விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. விஜயின் கோரிக்கையை ஏற்று ஒத்திவைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இதையடுத்து வெளியே வந்த அவரது முகம் வாட்டமாக இருந்தது. அவர் இன்று சென்னை திரும்புகிறார். இதற்காக அவர் டெல்லி விமான நிலையத்திற்கு வருகை தந்துள்ளார். பொங்கல் பண்டிகைக்குப் பிறகு மீண்டும் இந்த விசாரணை தொடரும் என சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications