விஜய் சக்காரேவை வரச்சொல்லுங்க.. அமித் ஷா களமிறக்கிய ஐபிஎஸ்.. நாடு முழுக்க துளைத்து எடுக்க போகிறார்!
டெல்லி: டெல்லியின் செங்கோட்டை மெட்ரோ நிலையம் அருகே நிகழ்ந்த குண்டுவெடிப்பு தொடர்பான உயர்மட்ட விசாரணையை தேசிய புலனாய்வு அமைப்பின் (NIA) டைரக்டர் ஜெனரல் ஐபிஎஸ் விஜய் சக்காரே தலைமையேற்று நடத்தவுள்ளார். உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவின் பெயரில் இந்த அதிகாரி நியமிக்கப்பட்டு உள்ளார். இந்த சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தனர். யார் இந்த விஜய் சக்காரே?
டெல்லியின் செங்கோட்டை மெட்ரோ நிலையம் அருகே நடந்த குண்டுவெடிப்பு குறித்து என்.ஐ.ஏ. டைரக்டர் ஜெனரல் ஐபிஎஸ் விஜய் சக்காரே தலைமையில் விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக, ஜெயஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய குழுவைத் தேடும் பணியில் என்.ஐ.ஏ. ஈடுபட்டுள்ளது. இவர் டெல்லி மட்டுமன்றி நாடு முழுக்க ஜெயஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பு பற்றி விசாரணைகளை செய்வார்.

என்.ஐ.ஏ. டைரக்டர் ஜெனரல் ஐபிஎஸ் விஜய் சக்காரே
இதன் ஒரு பகுதியாக, 10 பேர் கொண்ட குழு டெல்லி, ஹரியானா மற்றும் ஜம்மு-காஷ்மீர் காவல்துறை அதிகாரிகளுடன் இணைந்து ஆதாரங்களையும் டிஜிட்டல் தகவல்களையும் ஆய்வு செய்து வருகிறது. முதல் கட்ட தகவல்கள், குண்டுவெடிப்பு ஒரு விபத்தாக இருக்கலாம் என்று கூறுகின்றன.
பயங்கரவாத அமைப்பு ஒன்று பல மாநிலங்களில் செயல்பட்டு வருவதாக சந்தேகிக்கப்படும் நிலையில், இந்தக் குண்டுவெடிப்பு தொடர்பாகப் பல ஏஜென்சிகள் இணைந்து விசாரணை நடத்தி வருகின்றன. சக்காரே தலைமையில் 10 பேர் கொண்ட ஒரு சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் ஒரு இன்ஸ்பெக்டர் ஜெனரல் (IG), இரண்டு துணை இன்ஸ்பெக்டர்கள் ஜெனரல் (DIG), மூன்று காவல் கண்காணிப்பாளர்கள் (SP) மற்றும் நான்கு துணை காவல் கண்காணிப்பாளர்கள் (DSP) ஆகியோர் உள்ளனர்.
சக்காரே தலைமையில் 10 பேர் கொண்ட குழு
டெல்லி, ஹரியானா மற்றும் ஜம்மு-காஷ்மீர் போலீசாருடன் இணைந்து, இந்த ஜெயஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பு தொடர்பான அனைத்து வழக்கு கோப்புகளையும், ஆதாரப் பதிவுகளையும், விசாரணை அறிக்கைகளையும் ஒருங்கிணைக்கும் பணியில் இந்தக் குழு ஈடுபட்டுள்ளது. செங்கோட்டை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள 1,000-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமரா காட்சிகளை என்.ஐ.ஏ. ஆய்வு செய்து வருகிறது.
டிஜிட்டல் தடயவியல் குழுக்கள், டெல்லியின் பல்வேறு பகுதிகளில் உள்ள மொபைல் டவர் தரவுகளையும், சமூக ஊடகச் செயல்பாடுகளையும் ஆய்வு செய்து, குண்டுவெடிப்புக்கு முன்னதாக சந்தேக நபர்களின் நடமாட்டத்தையும், தொடர்புகளையும் கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளன.
ஐபிஎஸ் விஜய் சக்காரே யார்?
விஜய் சக்காரே 1996 ஆம் ஆண்டு கேரள கேடரைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி. பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளிலும், உள்நாட்டுப் பாதுகாப்புப் பிரிவிலும் இவருக்குப் பரந்த அனுபவம் உண்டு. இந்த ஆண்டு செப்டம்பரில் என்.ஐ.ஏ. டைரக்டர் ஜெனரலாகப் பொறுப்பேற்கும் முன், இதே அமைப்பில் இன்ஸ்பெக்டர் ஜெனரலாகப் பணியாற்றினார். அப்போது பல முக்கிய பயங்கரவாத எதிர்ப்பு விசாரணைகளை மேற்பார்வையிட்டார்.
என்.ஐ.ஏ.வின் புலனாய்வு முறைகளை நவீனப்படுத்துவதில் சக்காரே முக்கியப் பங்காற்றினார். உளவுத்துறை மற்றும் அமலாக்க முகமைகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை வலியுறுத்தினார். செங்கோட்டை குண்டுவெடிப்பு விசாரணையை அவர் தலைமையேற்று நடத்துவது, முழுமையான மற்றும் ஆதார அடிப்படையிலான விசாரணையை அரசு உறுதிப்படுத்த விரும்புவதைக் காட்டுகிறது.
இன்று காலை சக்காரே, உளவுத்துறைப் பிரிவின் (IB) தலைவருடன் ஒரு விரிவான முக்கிய ஆலோசனை கூட்டத்தை நடத்தினார். அப்போது செயல்பாட்டு முன்னுரிமைகளை ஒருங்கமைப்பது குறித்து விவாதிக்கப்பட்டது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
டெல்லி குண்டுவெடிப்பு வழக்கு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா செவ்வாய்க்கிழமை முதற்கட்ட கண்டுபிடிப்புகளை ஆய்வு செய்த பிறகு, என்.ஐ.ஏ.வுக்கு முறைப்படி மாற்றினார். ஆரம்ப அறிக்கைகள், குண்டுவெடிப்பு ஒரு விபத்தாக இருக்கலாம் என்று கூறுகின்றன. சந்தேகப்படும் தற்கொலைப் படைத் தீவிரவாதி உமர் முகமது, இரண்டு முக்கிய ஜெயஷ்-இ-முகமது உறுப்பினர்களான டாக்டர் முசம்மில் ஷகீல் மற்றும் டாக்டர் அடில் ரதர் ஆகியோர் கைது செய்யப்பட்டதால் பீதியடைந்து குண்டை வெடித்திருக்கலாம்.. வேறு இடத்தில் வெடிக்க இதை கொண்டு சென்று செல்லும் வழியில்.. இது விபத்தாக வெடித்து இருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
அம்மோனியம் நைட்ரேட்
ஹரியானாவின் ஃபரிதாபாத்தில், 2,900 கிலோகிராம் அம்மோனியம் நைட்ரேட் உள்ளிட்ட வெடிபொருட்களின் பெரும் கிடங்கை புலனாய்வாளர்கள் கைப்பற்றினர். சம்பவ இடத்தின் தடயவியல் ஆய்வில், குழி அல்லது வெடிபொருள் தாக்கியதற்கான எந்த ஆதாரமும் இல்லை. இது, வெடிபொருள் சரியான நேரத்தில் வெடிக்கவில்லை அல்லது தவறாகக் கையாளப்பட்டிருக்கலாம் என்பதைக் காட்டுகிறது.
உளவுத்துறை அதிகாரிகள் கூறுகையில், "சந்தேக நபர்கள் பீதியடைந்து வெடிபொருட்களை எடுத்துச் செல்லும்போது தவறு செய்திருக்கலாம்.. திட்டமிட்டது வேறு இடமாக இருந்திருக்கலாம்" என்று குறிப்பிட்டனர்.
பல மாநிலங்களில் ஒருங்கிணைந்த நடவடிக்கை
ஜெயஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் முழு செயல்பாட்டு வலையமைப்பையும் கண்டறிவது, நிதித் தடயங்களை வரைபடமாக்குவது மற்றும் உள்ளூர் ஆதரவு அமைப்புகளை வெளிக்கொணர்வதில் என்.ஐ.ஏ.வின் விசாரணை தற்போது கவனம் செலுத்தி வருகிறது. வரும் நாட்களில் பல கைதுகள் எதிர்பார்க்கப்படுவதால், டெல்லி, ஹரியானா மற்றும் ஜம்மு-காஷ்மீர் போலீசாருக்கு இடையேயான ஒருங்கிணைப்பு முக்கியமானது.
விஜய் சக்காரே தலைமையிலான சிறப்புப் படைக் குழு தீவிரமாகச் செயல்பட்டு வருவதால், சந்தேகப்படும் பயங்கரவாத அமைப்பு எவ்வாறு செயல்பட்டது மற்றும் டெல்லி குண்டுவெடிப்பு ஒரு தனிப்பட்ட சம்பவமா அல்லது ஒரு பெரிய திட்டத்தின் ஒரு பகுதியா என்பது குறித்து தெளிவான விளக்கம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு












Click it and Unblock the Notifications