SIR குறித்து விவாதிக்க வேண்டும்.. நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுத்த விஜய் வசந்த்
டெல்லி: பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்ற குளிர் கால கூட்ட தொடர் தொடங்கியுள்ளது. எஸ்ஐஆர் குறித்து விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். இதனால், மக்களவையை 12 மணி வரை சபாநாயகர் ஓம்பிர்லா ஒத்திவைத்தார். அவை தொடங்கிய நிலையில் மீண்டும் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால் அவை மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. எஸ்.ஐ.ஆர். நடவடிக்கையின் போது பணிகளில் ஈடுபட்டுள்ள BLO.க்கள் சந்திக்கும் மனஅழுத்தம் குறித்து விவாதிக்க ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸை எம்பி விஜய் வசந்த் கொடுத்துள்ளார்.
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் இன்று (டிசம்பர் 1 ஆம் தேதி) தொடங்கியது. இன்று தொடங்கி வருகிற 19 ஆம் தேதி வரை கூட்டத் தொடர் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத் தொடரில் பல்வேறு மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. கார்ப்பரேட் சட்டத்திருத்த மசோதா, தேசிய நெடுஞ்சாலை திருத்த மசோதா, அணுசக்தி மசோதா, உயர் கல்வி ஆணையம் அமைப்பது உள்ளிட்ட சில மசோதாக்கள் நிறைவேற்றப்பட உள்ளது.

எஸ்ஐஆர் விவகாரம் குறித்து விவாதிக்க கோரிஎதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். இருக்கைகளில் அமர்ந்தபடி முழுக்கம் எழுப்பினர். எதிர்க்கட்சிகளின் அமளி தொடர்ந்ததால் மக்களவையை 12 மணி வரை சபாநாயகர் ஒத்திவைத்தார். இதைத்தொடர்ந்து அவை மீண்டும் தொடங்கிய நிலையில் எதிர்க்கட்சிகள் எழுந்து நின்று முழக்கம் எழுப்பத் தொடங்கினர். இதனால், பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, அவையை மீண்டும் பகல் 2 மணி வரை சபாநாயகர் ஒத்திவைத்தார்.
இந்நிலையிஸ், எஸ்.ஐ.ஆர். நடவடிக்கையின்போது பணிகளில் ஈடுபட்டுள்ள BLO-க்கள் சந்திக்கும் மனஅழுத்தம் குறித்து விவாதிக்க ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸை எம்பி விஜய் வசந்த் கொடுத்துள்ளார். அதில், எஸ்ஐஆர் நடவடிக்கைகளின் போது அதிக மன அழுத்தத்தால் BLO-க்கள் உயிரிழப்பு மற்றும் பல உடல் நலக் கோளாறுகள் ஏற்பட்டுள்ளன.
உயிரிழந்த BLO.க்கள் குடும்பத்திற்கு உரிய இழப்பீட்டு வழங்க வேண்டும், இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தவும் வேண்டும். அதேபோல S.I.R நடவடிக்கையில் பொதுமக்களுக்கு ஏற்படும் பல்வேறு குழப்பங்கள் தொடர்பாக மக்களவையில் விவாதம் நடத்த வேண்டும். எனவே, அவை நடவடிக்கையை ஒத்தி வைத்துவிட்டு இதுதொடர்பாக விவாதம் நடத்த வேண்டும் எனக் கூறி விஜய் வசந்த் எம்.பி. ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கி உள்ளார்.












Click it and Unblock the Notifications