தமிழகத்தில் விஜயின் தாக்கம் இருக்கு.. யார் ஓட்டை தவெக பிரிக்கும்? நிர்மலா சீதாராமன் சொன்ன வார்த்தை
டெல்லி: ‛‛தமிழக சட்டசபை தேர்தலில் விஜய் தாக்கத்தை ஏற்படுத்துவார். அந்த தாக்கம் எந்த அளவுக்கு இருக்கும் என்பதை நாம் பார்க்க வேண்டும். தமிழ்நாட்டில் வரவிருக்கும் தேர்தல் ஒரு விறுவிறுப்பான போட்டியாக இருக்கும். ஆளும் கட்சியான திமுக பதற்றத்தில் உள்ளது. என்டிஏ கூட்டணி திமுகவுக்கு ஒரு கடுமையான சவாலை முன்வைக்கும். ஆனால் பெண்களின் ஓட்டுகள் தான் முக்கியம்'' என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. திமுக கூட்டணி, அதிமுக - பாஜக கூட்டணி, சீமானின் நாம் தமிழர், விஜயின் தமிழக வெற்றிக் கழகம் என்று மொத்தம் 4 முனை போட்டி நடைபெற உள்ளது. அனைத்து கட்சிகளும் தேர்தல் அறிக்கை, வேட்பாளர் தேர்வு என்று முக்கிய பணிகளை தொடங்கி விட்டன.

இந்நிலையில் தான் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நடைபெற உள்ள தமிழக சட்டசபை தேர்தல் பற்றி பேசியுள்ளார். என்டிடிவி புராபிட் கான்கிளேவ் 2026 என்ற நிகழ்ச்சியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்று பேசினார்.
நிர்மலா சீதாராமன்
பத்திரிகையாளரின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். இந்த சமயத்தில் தமிழ்நாடு சட்டசபை தேர்தல் குறித்தும் நிர்மலா சீதாராமன் சில முக்கிய கருத்துகளை கூறினார். இதுபற்றி நிர்மலா சீதாராமன் கூறியுள்ளதாவது:
விறுவிறுப்பான போட்டி
தமிழ்நாட்டில் வரவிருக்கும் தேர்தல் ஒரு விறுவிறுப்பான போட்டியாக இருக்கும். ஆளும் கட்சியான திமுக பதற்றத்தில் உள்ளது. என்டிஏ கூட்டணி திமுகவுக்கு ஒரு கடுமையான சவாலை முன்வைக்கும். என்டிஏ உறுதியாகவும், ஒன்று பட்டும் செயல்பட்டு வருகிறது. இதனால் போட்டி கடினமான போட்டியாக இருக்கும்.
பதற்றத்தில் திமுக
ஆளும் திமுக இந்த முறை நம்பிக்கையுடன் இல்லை. கடந்த ஒரு வருடமாக அவர்களின் செயல்பாடுகள் முழுக்க முழுக்க பதற்றத்தையே காட்டுகின்றன திமுக அமைச்சர்களின் கருத்துகள், அறிக்கைகள், இலவசம் தொடர்பான பேச்சுகள், கோவில்களுக்கு செல்வது உள்ளிட்டவை முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆளும் கட்சி தேர்தலை எதிர்கொள்ள பதற்றமாக இருப்பதை அப்பட்டமாகவே காட்டுகின்றன.
விஜயின் தாக்கம் இருக்கும்
விஜய் இந்த தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துவார்.அந்த தாக்கம் எந்த அளவுக்கு இருக்கும் என்பதை நாம் பார்க்க வேண்டும். மேலும் அவர் யாருடைய வாக்குகளை பிரிக்கப்போகிறார் என்பது தான் கேள்வியாக உள்ளது. அவர் திமுகவின் அனைத்து ஆதரவாளர்களையும், குறிப்பாக பெண்களின் வாக்குகளை பிரிக்க போகிறாரா? என்பதை பார்க்க வேண்டும்.
பெண்களின் ஓட்டு யாருக்கு?
தமிழக அரசியலில் பெண்களுக்கு சக்திவாய்ந்த பங்கு உள்ளது. பெண்களின் வாக்குப்பதிவு சதவீதத்தை பார்த்தால் பல வாக்குச்சாவடிகளில் ஆண்களை விட அதிகமாக இருந்துள்ளது. ஆட்சிக்கு யார் வேண்டும் வரக்கூடாது என்ற முடிவெடுப்பதில் பெண்களின் வாக்குகள் முக்கிய பங்கு வகித்து வருகிறது. எனவே தமிழக தேர்தலை கவனிக்க வேண்டிய சுவாரசியமான நேரம் இதுவாகும்'' என்றார்.
-
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
விஜய் - ராகுல் சந்திப்பு நடக்காமல் போனதற்கான உண்மைக் காரணம் என்ன? அதிர்ச்சி தரும் பின்னணி -
முதல்வர் விஜய்.. பதவியேற்ற 20 நாட்களில் 6 பெரிய சறுக்கல்கள்.. சொதப்பல் மேல் சொதப்பல்! -
மகளிர் உரிமைத் தொகை ரூ 2500 எப்போது? பட்டென அப்டேட் கொடுத்த மரியவில்சன்! 2 வாரங்கள் கழித்தா? -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
"டிவிகேவால் தான் கரு கலைந்ததா?".. இதோடு உங்க நாடகத்தை நிறுத்திக்கோங்க!" ஜூலிக்கு நடிகர் வார்னிங் -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு!












Click it and Unblock the Notifications