பிரதமர் அலுவலகம் செல்ல மறுத்த போலீஸ்! விருதுகளை சாலையில் விட்டுசென்ற மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்
டெல்லி: சஞ்செய் சிங் தேர்வு ஆனதற்கு எதிர்ப்பு தெரிவித்த மல்யுத்த வீராங்கனை வினிஷ் போகத் மத்திய அரசு தனக்கு வழங்கிய அர்ஜூனா மற்றும் கேல் ரத்னா விருதுகளை டெல்லியில் செங்கோட்டை அருகே உள்ள கடமை பாதையில் விட்டு சென்றார்.
இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக இருந்தவர் பிரிஜ் பூஷன் சரண் சிங். பாஜக எம்.பியாகவும் இருக்கும் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்தது. இளம் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து அச்சுறுத்தியதாகவும் எனவே அவரை கைது செய்ய வேண்டும் என்று மல்யுத்த வீரர், வீராங்கனைகள் மத்தியில் எதிர்ப்புகள் கிளம்பின.

குறிப்பாக நாட்டின் முன்னணி மல்யுத்த நட்சத்திரங்கள் அவரை கைது செய்யக்கோரி மாதக்கணக்கில் போராட்டம் நடத்தினர். இதையடுத்து அவர் மல்யுத்த நிர்வாகத்தில் இருந்து ஒதுங்கினார். இதன்பின்னர், இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் தேர்தலில் பிரிஜ் பூஷனின் ஆதரவாளர்களை போட்டியிட அனுமதிக்கக் கூடாது என்று சாக்ஷி மாலிக், பஜ்ரங் பூனியா உள்ளிட்டோர் மத்திய அமைச்சரிடம் நேரடியாக முறையிட்டு இருந்தனர்.
எனினும், மல்யுத்த சம்மேளனத்திற்கு நடைபெற்ற தேர்தலில் பிரிஜ் பூஷனின் ஆதரவாளர் சஞ்செய் சிங் வெற்றி பெற்று தலைவராக தேர்வு ஆகினார். இது மல்யுத்த வீரர் வீராங்கனைகளுக்கு மேலும் அதிர்ச்சியை கொடுத்தது. இதையடுத்து கடந்த 2016-ம் ஆண்டு ஒலிம்பிக் மல்யுத்தத்தில் வெண்கலப்பதக்கம் வென்றவரான சாக்ஷி மாலிக் மல்யுத்த விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அதிரடியாக அறிவித்தார்.
மல்யுத்த வீராங்கனை ஷாக்ஷி மாலிக் மல்யுத்த போட்டியில் இருந்தே விலகுவதாக கண்ணீருடன் பேட்டியளித்தார். பிரஸ்மீட்டில் கண்ணீருடன் பேசிய அவர், இனி மல்யுத்த போட்டியில் நான் விளையாட போவதில்லை என்று அழுதுகொண்டே அங்கிருந்து சென்றுவிட்டார். அதேபோல், மல்யுத்த சம்மேளன தலைவராக சஞ்செய் சிங் தேர்வு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரபல மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவும் தனது பத்மஸ்ரீ விருதை திரும்ப அளிப்பதாக அறிவித்தார்.
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனிடையே, இந்திய மல்யுத்த சம்மேளன நிர்வாகிகளை சஸ்பெண்ட் செய்து மத்திய விளையாட்டு மேம்பாட்டு அமைச்சகம் உத்தரவிட்டது. மறு அறிவிப்பு வரும் வரை இந்த இடைநீக்கம் தொடரும் என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது. மல்யுத்த சம்மேளனத்தை நடத்த தற்காலிக குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, சஞ்செய் சிங் தேர்வு ஆனதற்கு எதிர்ப்பு தெரிவித்த மல்யுத்த வீராங்கனை வினிஷ் போகத் தனக்கு வழங்கப்பட்ட விருதுகளை சாலையில் விட்டு சென்றார். டெல்லியில் செங்கோட்டை அருகே உள்ள கடமை பாதையில் மத்திய அரசு தனக்கு வழங்கிய அர்ஜூனா மற்றும் கேல் ரத்னா விருதுகளை விட்டு சென்றார். வினேஷ் போகத் தனக்கு வழங்கப்பட்ட விருதுகளை பிரதமர் அலுவலகத்திற்க்கு வெளியே விட்டு செல்ல முயற்சித்தார்.
எனினும் போலீசார் தடுத்து நிறுத்தியதால் கடமை பாதையிலேயே வைத்து விட்டு சென்றார். முன்னதாக, பிரிஜ் பூஷன் சிங்கிற்கு நெருக்கமானவராக அறியப்படும் சஞ்செய் சிங் மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராக தேர்வு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் மோடிக்கு வினேஷ் போகத் கடிதமும் எழுதியிருந்தார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications