மணமகள் அலங்காரத்தில் செய்யுற வேலையா இது.. இப்டி பண்ணினா மாப்பிள்ளை பாவம் இல்லையா?
திருமணத்துக்கான உடை அணிந்தபடி உடற்பயிற்சி செய்யும் பெண்ணின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களை ஆக்கிரமித்து வருகிறது.
டெல்லி: திருமணக்கோலத்தில் தண்டால் எடுக்கும் பெண்ணின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.
Recommended Video
இந்தியாவில் திருமணங்கள் என்றாலே அது கோலாகலம் தான். பொதுவாக திருமண விழாக்களில் சொந்தபந்தங்கள் சூழ நடைபெறும் சடங்கு சம்பிரதாயங்கள் ஏராளம். ஆனால் தற்போது குரானா தொற்று பரவ காரணமாக திருமணங்கள் கலையிழந்து காணப்படுகின்றன. ஒரு சில நெருங்கிய சொந்த பந்தங்களுடன் விழாவை எளிமையாக முடித்துவிடுகிறார்கள் திருமண வீட்டார்.
இப்படிப்பட்ட சூழலில் மணமகள் போன்று அலங்காரத்துடன் பெண் ஒருவர் செய்த செயல், பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

முழு அலங்காரம்
சம்பந்தப்பட்ட அந்த வீடியோவில் நல்ல எடையுள்ள திருமண உடையை அணிந்து இருக்கிறார் அப்பெண். கூடவே நகை அலங்காரம், சிகை அலங்காரம் என மணப்பெண்ணிற்கே உரிய அத்தனை அலங்காரத்துடனும் காணப்படுகிறார். ஆனால் மணப்பெண் என்றால் முகத்தை பாதி மூடியபடி, வளையலைக் காட்டியபடி தானே போட்டோ, வீடியோவிற்கு போஸ் கொடுப்பார்கள்.

உடற்பயிற்சி
இவரோ, முழு அலங்காரத்துடன் கீழே தரையில் எனது தனது இரு கைகளையும் விரித்தபடி தண்டால் எடுத்து அசத்துகிறார். இந்த வீடியோவை ஆனா அரோரா எனும் மாடல் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவை பார்த்த பலரும் ஆச்சர்யமடைந்துள்ளனர்.

விழிப்புணர்வு
கடந்த வாரம் பதிவேற்றம் செய்யப்பட்ட இந்த வீடியோவை இதுவரை ஐந்து லட்சத்திற்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர். உடற்பயிற்சி மீது மணப்பெண் கொண்டிருக்கும் ஈடுபாட்டையும் ஆர்வத்தையும் இந்த வீடியோ பறைசாற்றுவது போல் உள்ளது. திருமணத்திற்குப் பிறகு பெரும்பாலான பெண்கள் தங்களது உடல் ஆரோக்கியத்தில் கவனம் எடுத்துக் கொள்வதில் அக்கறை காட்டுவதில்லை. இந்த நிலை மாற வேண்டும் என்ற விழிப்புணர்வு இது போன்ற வீடியோக்களைப் பார்த்தாவது பெண்களுக்கு ஏற்பட வேண்டும்.

பாவம் மாப்பிள்ளை
இது ஒருபுறம் இருக்க, இப்படி தண்டால் எல்லாம் எடுத்து அசர வைக்கிறாரே இவரை திருமணம் செய்து கொள்ளப் போகிறவர் பாவம் என கலாய்த்தும் கமெண்டுகள் வெளியிடப்படுகின்றன. அடாவடிப் பெண் கூட திருமணக் கோலத்தில் அமைதியாக, சாந்த சொரூபியாக காட்சி தருவார். ஆனால் இப்பெண் மணப்பெண் கோலத்தில் இப்படி தண்டால் எடுத்து கிலியைக் கிளப்புகிறாரே.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications