சிக்கலில் சேவாக் மனைவி.. வசமாக ஏமாற்றிய பார்ட்னர்கள்.. போலீசில் புகார்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்திய கிரிக்கெட் முன்னாள், வீரர் வீரேந்திர சேவாக்கின் மனைவி ஆர்த்தியை மோசடி செய்து, அவரின் தொழில் கூட்டாளிகள், ரூ.4.5 கோடி வரை மோசடி செய்துள்ளனர். இதுபற்றி அவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

தனது கையெழுத்தை முறைகேடாக பயன்படுத்தி ரூ.4.5 கோடி கடன் பெற்றுள்ளார் என்றும், அந்த கடன் பற்றி தனக்கு தெரியாது என்றும் போலீசில் ஆர்த்தி அளித்த புகார் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

Virender Sehwags wife cheated by business partners

"குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் எனது எந்த அனுமதியும் அறிவும் இன்றி கடன் கொடுப்பவர்களை அணுகினர். அவர்களிடமிருந்து ரூ .4.5 கோடி கடன் பெற்றனர்" என்று ஆர்த்தி போலீசில் சமர்ப்பித்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனது பார்ட்னர்கள், எனது கணவர் சேவாக் பெயரைப் பயன்படுத்தி கடன் கொடுப்பவர்களை அணுகியுள்ளனர். பின்னர் கடனுக்கான ஒப்பந்தத்தில் எனது கையொப்பங்களை மோசடியாக இடம்பெறச் செய்துள்ளனர். கடன் கொடுத்தவர்களுக்கு இரண்டு பின்தேதியிட்ட காசோலைகள் வழங்கப்பட்டன.
ஆனால், கடன் தொகையை திருப்பிச் செலுத்தத் தவறிவிட்டனர்.

கடனை திரும்ப செலுத்தாததால், கடன் கொடுத்தவர்கள், நீதிமன்றத்தில் புகார் அளித்தனர். அப்போதுதான் எனது கையொப்பம் மற்றும் கடன் ஒப்பந்தத்தைப் பார்த்தது அதிர்ச்சியாக இருந்தது. நான் அதில் ஒருபோதும் கையெழுத்திடவில்லை.

ஆர்த்தியின் புகாரின் அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக, 4 பிரிவுகளின்கீழ், காவல்துறையினர் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளனர்.

இந்திய தண்டனைச் சட்டத்தின் 420 (மோசடி மற்றும் நேர்மையற்ற செயல்), 468 (மோசடி), 471 (போலி ஆவணம் பயன்படுத்துதல்) மற்றும் 34 (பொதுவான நோக்கம்) பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+