ஐயோ அம்மா.. இந்தியா கேட் எங்கே.. காணோம்.. கண்ணை கசக்கி பார்க்கும் டெல்லி மக்கள்
டெல்லி: டெல்லியில் புதன்கிழமை (15 நவம்பர் 2023) காற்று மாசு படுமோசமாக உள்ளது. டெல்லி ஜஹாங்கிர்புரியில் இன்றைய காற்று தரம் அளவு 428 ஆக பதிவாகியுள்ளது. இந்த எண் என்பது, மிகவும் தீவிரமான பிரிவில் உள்ளதாகும்.
பூஜ்ஜியத்திற்கும் 50க்கும் இடைப்பட்ட AQI 'நல்லது', 51 முதல் 100 வரை 'திருப்திகரமானது', 101 முதல் 200 'மிதமானது', 201 முதல் 300 வரை 'மோசம்', 301 முதல் 400 வரை 'மிகவும் மோசமானது' மற்றும் 401 முதல் 450 வரை 'மோசம்' அல்லது 'தீவிரமானதாக' கருதப்படுகிறது. AQI 450ஐ தாண்டினால், அது 'மிக தீவிரமான' என்ற பிரிவில் வகைப்படுத்தப்படுகிறது.

நொய்டாவில் காற்றின் தரம் 317 ஆகவும், காஜியாபாத்தில் 334 ஆகவும் பதிவாகியுள்ளது. டெல்லி என்சிஆர் பகுதியின் அனைத்து பகுதிகளிலும் காற்றின் அளவு மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. நாட்டின் பிற நகரங்களைப் பொருத்தளவில், கொல்கத்தாவில் மாசு அளவு 163 ஆகவும், மும்பையில் 175 ஆகவும், சென்னையில் 160 ஆகவும் பதிவாகியுள்ளது.
காற்றின் தரத்தை கண்காணிப்பதில் நிபுணத்துவம் பெற்ற சுவிஸ் நிறுவனமான 'IQair' அறிக்கையின்படி, கடந்த திங்கள்கிழமை உலகின் மிகவும் மாசுபட்ட நகரங்களில் டெல்லி முதலிடத்தை பிடித்தது. அதைத் தொடர்ந்து பாகிஸ்தானின் லாகூர் மற்றும் கராச்சி நகரங்கள் உள்ளன. மாசுபட்ட நகரங்களில் மும்பை ஐந்தாவது இடத்திலும், கொல்கத்தா ஆறாவது இடத்திலும் உள்ளன.
இந்த நிலையில்தான், டெல்லியிலுள்ள புகழ்பெற்ற இந்தியா கேட் மாசு காரணமாக மங்கலாக காட்சியளிக்கிறது. இதனால் அந்த பக்கமாக போகும் புதியவர்கள், எங்கப்பா இங்க இருந்த இந்தியா கேட்டை காணோம் என்பதை போல திருதிருவென முழிக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications