மே 25-ல் நடந்த 6-ம் கட்ட தேர்தல் வாக்குப் பதிவு எவ்வளவு? 4 நாட்களுக்கு பின் அறிவித்த தேர்தல் ஆணையம்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: லோக்சபா தேர்தலில் 6-வது கட்ட வாக்குப் பதிவு இறுதி நிலவரம் என்ன என்பதை 4 நாட்களுக்குப் பின்னர் இந்திய தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. 6-ம் கட்டத்தில் 58 லோக்சபா தொகுதிகளில் 63.37 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன என அறிவித்திருக்கிறது இந்திய தேர்தல் ஆணையம்.

லோக்சபா தேர்தலின் 6-ம் கட்ட வாக்குப் பதிவு 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 58 தொகுதிகளுக்கு மே 25-ந் தேதி நடைபெற்றது. இதில் மொத்தம் 889 வேட்பாளர்கள் களம் கண்டனர்.

Voter turnout of 63 37 recorded in phase-6 of ok Lok Sabha Election 2024

உத்தரப் பிரதேசத்தில் 14 மக்களவைத் தொகுதிகளுக்கும், ஹரியானாவில் 10 தொகுதிகளுக்கும், பீகாரில் 8 தொகுதிகளுக்கும், தில்லியில் 7 தொகுதிகளுக்கும், மேற்கு வங்கத்தில் 8 தொகுதிகளுக்கும், ஒடிசாவில் 6 தொகுதிகளுக்கும், ஜார்க்கண்டில் 4 தொகுதிகளுக்கும், ஜம்மு காஷ்மீரில் ஒரு தொகுதிக்கும் மே 25-ல் வாக்குப் பதிவு நடைபெற்றது.

ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக்-ரஜோரி தொகுதியில் 3ம் கட்ட வாக்குப் பதிவின்போது நடைபெற இருந்த தேர்தல் ஒத்திவைக்கப்பட்டு 6-ம் கட்டத்தில் அந்த தொகுதிக்கு வாக்குப் பதிவு நடைபெற்றது. இத்தொகுதியில் மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவரும் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வருமான மெகபூபா முப்தி போட்டியிட்டார்,

புதுடெல்லி தொகுதியில் பாஜக வேட்பாளராக பன்சுரி ஸ்வராஜ் போட்டியிட்டார். முன்னாள் மத்திய அமைச்சரான மறைந்த சுஷ்மா ஸ்வராஜ் மகள் பன்சுரி ஸ்வராஜ். ஆம் ஆத்மியின் மூத்த தலைவர் சோம்நாத் பாரதியுடன் சுஷ்மா ஸ்வராஜ் மகள் பன்சுரி மோதினார். வடகிழக்கு டெல்லி தொகுதியில் காங்கிரஸின் கன்னையாகுமார் போட்டியிட்டார். உ.பி. சுல்தான்பூரில் மேனகா காந்தி, பாஜக வேட்பாளராக களம் கண்டார். ஹரியானாவின் கர்னால் தொகுதியில் முன்னாள் முதல்வர் மனோகர் லால் கட்டார், குருஷேத்ராவில் பாஜகவின் நவீன் ஜிண்டால், ஒடிஷாவின் பூரியில் பாஜகவின் சம்பித் பத்ரா, சம்பல்பூரில் தர்மேந்திர பிரதான் களம் கண்டனர்.

இத்தொகுதிகளில் சுமார் 62% வாக்குகள் பதிவாகி இருந்ததாக அன்று இரவு இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த நிலையில் நேற்று இரவு 6-வது கட்ட தேர்தலின் இறுதி வாக்குப் பதிவு நிலவரத்தை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

வாக்குப் பதிவு விவரம்: ஆண்கள் 61.95% பெண்கள் 64.95% 3-ம் பாலினத்தவர்
18.67%; மொத்தம் 63.37%

6-ம் கட்ட தேர்தலில் மாநிலங்கள் வாரியாக வாக்குப் பதிவு விவரம்:

பீகார் 57.18%

ஹரியானா 64.80%

ஜம்மு காஷ்மீர் 55.40%

ஜார்க்கண்ட் 65.39%

டெல்லி 58.69%

ஒடிஷா 74.45%

உத்தரப் பிரதேசம் 54.04%

மேற்கு வங்கம் 82.71% என இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+