தேர்தல் நெருங்கும் நேரத்தில்.. மிடில் கிளாஸ் மக்களுக்கு மோடி கொடுத்த அதிரடி வாக்குறுதி!
டெல்லி: அரசின் தலையீடு அதிகம் இல்லாத சொசைட்டியை உருவாக்குவதை நோக்கியே தனது அரசு செயல்பட்டு வருகிறது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். ஏழை மக்களுக்காகவே தனது அரசாங்கம் உள்ளதாகவும் மோடி கூறினார்.
லோக்சபா தேர்தல் வரும் ஏப்ரல் - மே மாதங்களில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ளன. லோக்சபா தேர்தல் தேதி எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மத்தியில் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் ஆட்சியில் உள்ள பாஜக, வரும் தேர்தலிலும் வெற்றி பெற்று ஆட்சியை அமைப்பதில் தீவிரமாக உள்ளது.

பாஜகவை எப்படியாவது வீழ்த்திவிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வியூகம் வகுத்து வரும் நிலையில் எதிர்க்கட்சிகளின் வியூகத்தை தவிடு பொடியாக்கி ஆட்சி அரியணையில் அமர வேண்டும் என்பதில் பாஜக தீவிரமாக உள்ளது. வரும் தேர்தலில் தேசிய ஜனாநாயக கூட்டணி 400 இடங்களுக்கு மேல் வெல்ல வேண்டும் என்றும் பாஜக மட்டும் 370 தொகுதிகளுக்கும் மேல் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்கை அக்கட்சி நிர்ணயித்து இருக்கிறது.
தேர்தல் நெருங்கி வரும் நிலையில் நாடு முழுவதும் தீவிர சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் பிரதமர் மோடி பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்து வருகிறார். புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டி வருகிறார். இந்த நிலையில், இன்று டெல்லியில் நடைபெற்ற பாரத் டெக்ஸ் 2024 கண்காட்சியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:-
அரசின் தலையீடுகள் குறைவாக உள்ள சமூகத்தை உருவாக்குவதே எனது லட்சியம். குறிப்பாக நடுத்தர மக்களின் வாழ்க்கையில் அரசு தலையிடுவதை நான் விரும்பவில்லை. மக்களை செழுமை படுத்தும் தூண்டுதல் கருவியாக அரசு செயல்ட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். கடந்த 10 ஆண்டுகளாக அரசு தலையீடு குறைவாக உள்ள சொசைட்டியை உருவாக்குவதற்காகவே நான் உழைத்து வருகிறேன். வரும் 5 ஆண்டுகளிலும் இதையே நான் செய்ய போகிறேன். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
-
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
JEE Advanced 2026: வெளியானது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள்! முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் யார்? -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications