வெற்று பரபரப்பு தானா.. நிஜமாகவே ஆபத்தா.. ஹிண்டன்பர்க் அறிக்கை பற்றி நிபுணர்கள் சொல்வது என்ன?
டெல்லி: இந்திய பொருளாதாரத்தையே பாதிக்கும் அளவுக்கு பங்கு சந்தைகளில் முறைகேடு நடந்திருப்பதாக ஹிண்டன்பர்க் நிறுவனம் ஏற்கெனவே கூறியிருந்தது பெரும் புயலை கிளப்பியிருந்தது. இந்நிலையில், இதனை தொடர்ந்து, தற்போது இந்த முறைகேடுக்கு செபி உடந்தை என்கிற அதிர்ச்சி தகவலையும் தெரிவித்திருக்கிறது. இவையெல்லாம் உண்மையா? அல்லது வெறும் பரபரப்பை கிளப்ப கூறப்பட்டவையா? என்கிற விவாதம் எழுந்திருக்கிறது.
அமெரிக்காவை சேர்ந்த முதலீட்டு ஆய்வு நிறுவனமான 'ஹிண்டன்பர்க்' கடந்த ஆண்டு அதானி குழுமம் குறித்த ஆய்வறிக்கையை வெளியிட்டிருந்தது. 413 பக்கங்கள் கொண்ட இந்த ஆய்வறிக்கையில், அதானி குழுமம் கடந்த 3 ஆண்டுகளாக பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டிருந்ததாக குற்றம்சாட்டியிருந்தது. முறைகேட்டில் ஈடுபட்ட காலகட்டத்தில் அதானி குழுமத்தின் பங்குகள் அபரிமிதமாக வளர்ந்தன என்றும், பங்கு மதிப்புகளை அதிகரிக்க போலி நிறுவனம் தொடங்கப்பட்டு, அந்நிறுவனங்கள் வரி ஏய்ப்பிலும், பண மோசடியிலும் ஈடுபட்டுள்ளன எனவும் ஹிண்டன்பர்க் குற்றம் சாட்டியிருந்தது.

இந்த குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமாக அதானி குழுமத்தின் சொத்து மதிப்பை ஹிண்டன்பர்க் குறிப்பிட்டிருந்தது. அதாவது தற்போது அதானியின் சொத்து மதிப்பு ரூ.9.84 லட்சம் கோடி. இதில் முறைகேடு நடந்ததாக குற்றம்சாட்டப்படும் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் ரூ.8.2 லட்சம் கோடி சொத்து சேர்ந்திருக்கிறது. மொத்த சொத்தில் இது முக்கால்வாசியாகும். இதுமட்டும் இல்லாமல் இந்த காலத்தில் இந்நிறுவனத்தின் பங்குகள் சுமார் 819% வளர்ச்சியடைந்திருக்கின்றன. இதைத்தான் ஹிண்டன்பர்க் ஆதாரமாக குறிப்பிட்டிருக்கிறது.
இந்த அறிக்கையை மேற்கோளிட்டு விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியிருந்த நிலையில், பங்குச் சந்தை ஒழுங்கு முறை ஆணையமான 'செபி' விசாரணையில் இறங்கியது. ஆனால், அதானி நிறுவனம் எந்த முறைகேடுகளிலும் ஈடுபடவில்லை என்று செபி, கூறிவிட்டது. இப்படியான ஹிண்டன்பர்க் அறிக்கையின் சலசலப்புகள் ஓய்ந்தன.
ஆனால், ஹிண்டன்பர்க்கோ இத்துடன் நின்றுவிடாமல் செபி-அதானி உறவு குறித்து அறிக்கையை வெளியிட்டது. “எங்களது ஆய்வில் குறிப்பிட்ட அதானி குழுமத்தின் சந்தேகத்திற்குரிய பங்குதாரர்களுக்கு எதிராக தக்க நடவடிக்கைகளை எடுக்க செபி விரும்பவில்லை. அதாவது இந்தியா இன்போலைனின் “இ.எம். ரீசர்ஜண்ட் பண்ட் மற்றும் இந்தியா ஃபோக்கஸ் ஃபண்ட்” நிறுவனம் மூலம் இயக்கப்படும் அதானியின் சந்தேகத்திற்குரிய மற்ற பங்குதாரர் நிறுவனங்களுக்கு எதிராக செபி இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதற்கு செபியின் தலைவர் மாதவி பூரி புச், கவுதம் அதானியின் சகோதரர் வினோத் அதானி பயன்படுத்திய அதே நிதியைப் பயன்படுத்துவதில் உடந்தையாக இருப்பது காரணமாக இருக்கலாம். அதானி நிறுவனம் வெளிநாடுகளில் உருவாக்கிய போலி நிறுவனம் ஒன்றில், செபியின் தலைவராக இருக்கும் மாதவி பூரி புச் பல்லாயிரக்கணக்கான பங்குகளை வைத்துள்ளார்" என்று செபி மீது குண்டை வீசியது.
செபி-அதானி-பங்குசந்தை முறைகேடு-ஷெல் நிறுவனங்கள் என சாமானிய மக்களுக்கு புரியாத சில வார்த்தைகள் தொடர்ந்து பல ஊடகங்களில் தலைப்பு செய்தியாக வெளியான நிலையில், இந்த குற்றச்சாட்டுகள் உன்மையானவையா? அல்லது வெறும் பரபரப்புக்கானதா? என்பது குறித்து நிபுணர்கள் விளக்கியுள்ளனர்.
ஹிண்டன்பர்க்கின் அறிக்கை வெளியான உடன் வாயை திறந்த முதல் நபர் மோகன்தாஸ் பாய் என்பவர்தான். இவர் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிதி அதிகாரியாக (CFO) இருந்தவர். அவர்,
“ஹிண்டன்பர்க்கின் இந்த அறிக்கை வெற்று பரபரப்புகளை கிளப்புவதற்காக உருவாக்கப்பட்டது. இதில் எந்த உண்மை தகவலும் இல்லை. உண்மைக்கு பதில் ஊழல் குற்றச்சாட்டை உருவாக்குவதையே இது நோக்கமாக கொண்டிருக்கிறது. விதிமுறைகள் திறந்த ஆலோசனைகள் மூலம் உருவாக்கப்படுகின்றன. இதையெல்லாம் வைத்து பார்க்கும்போது தனிநபர் தாக்குதலாக இந்த அறிக்கை இருக்கிறது” என்று கூறியுள்ளார்.
அதேபோல கேபிடல்மைன்டின் தலைமை நிர்வாக அதிகாரி தீபக் ஷெனாய், “ஹிண்டன்பர்க் பரபரப்பை கிளப்பியுள்ளன. ஆனால் அறிக்யைில் அடிப்படையில் எந்த தகவலும் இல்லை” என்று கூறியுள்ளார்.
வரி விவகாரங்கள் தொடர்பான வழக்கறிஞர் அஜய் ரோட்டி கூறுகையில், “ஹிண்டன்பர்க் அறிக்கை கேலிக்குறியாக இருக்கிறது. இந்திய பங்கு சந்தையை இது சீர்குலைப்பதாக இருக்கிறது” என்று குற்றம்சாட்டியுள்ளார்.
இப்படி என்னதான் பெரிய, பெரிய முக்கிய புள்ளிகள் ஹிண்டன்பர்க் அறிக்கை மீது கேள்வி எழுப்பினாலும், எதிரக்கட்சி தலைவர்கள் இந்த அறிக்கை மீது நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். அதாவது, “சிறு மற்றும் நடுத்தர முதலீட்டாளர்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை கொண்டு முதலீடு செய்கிறார்கள். அவர்களுக்கு செபி பாதுகாப்பளிக்க வேண்டும். எனவே இதை விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை தேவை” என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தியுள்ளார்.
இதே கோரிக்கையை வலியுறுத்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், “அதானி விவகாரம் தொடர்பாக ஏற்கனெவே செபி விசாரணை நடத்தியிருந்தது. ஆனால் அந்த விசாரணையில் சில தயக்கங்களை பார்க்க முடிந்தது” என்று கூறியுள்ளார்.
திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா, “குற்றச்சாட்டே செபி தலைவர் மாதவி பூரி புச் மீதுதான். அவர்தான் அதானி பங்குகளில் முதலீடு செய்திருக்கிறார். அவர் மீதான புகாரை அவரே விசாரிக்க முடியுமா? இது நீதியின் கேலிக்கூத்து” என்று விமர்சித்துள்ளார். மற்றொரு திரிணாமுல் எம்பி சகாரிகா கோஸ், “ஹிண்டன்பர்க் அறிக்கையைடுத்து, அதானி முறைகேடு விசாரணையிலிருந்து மாதவி விலக வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.
-
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம்












Click it and Unblock the Notifications