சண்டை முடிந்தது.. காங்கிரஸை விட்டு போகவே மாட்டேன்.. கார்கே - ராகுலை சந்தித்தபின் சசிதரூர் சொன்ன மேட்டர்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான சசிதரூருக்கும், மேலிடத்துக்கும் இடையே விரிசல் இருந்து வந்தது. ராகுல் காந்தி, சசிதரூரை தவிர்த்து வந்தார். மேலும் சசிதரூர், பிரதமர் மோடி உள்பட பாஜக தலைவர்களுடன் நெருக்கமாக செயல்பட்டு வந்தார். இதனால் விரைவில் அவர் பாஜகவில் ஐக்கியமாகலாம் என்ற தகவல் வெளியாகி பரபரப்பை கிளப்பியது. இந்நிலையில் தான் டெல்லியில் இன்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் ராகுல் காந்தியை சசிதரூர் சந்தித்து பேசினார். இதனால் அவர்களுக்கு இடையேயான அதிருப்தி சரியாகி உள்ளது.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக இருப்பவர் சசிதரூர். இவர் கேரளாவை சேர்ந்தவர். திருவனந்தபுரம் லோக்சபா தொகுதியின் எம்பியாக உள்ளார். இந்நிலையில் தான் சசிதரூருக்கும், காங்கிரஸ் மேலிடத்துக்கும் இடையேயான உறவில் விரிசல் இருந்து வந்தது.

we-are-all-on-the-same-page-says-shashi-tharoor-after-met-with-mallaikarjun-kharge-and-rahul-gandhi

காங்கிரஸ் மேலிடம் சசிதரூரை புறக்கணித்து வந்தது. குறிப்பாக ராகுல் காந்திக்கும், சசிதரூருக்கும் இடையேயான உறவு சிறப்பானதாக இல்லை.சமீபத்தில் கேரளாவின் கொச்சியில் ராகுல் காந்தி பங்கேற்ற நிகழ்ச்சியில் சசிதரூர் அவமதிக்கப்பட்டதாக கூறப்பட்டது. இதனால் அவர் கேரளா சட்டசபை தேர்தல் தொடர்பான காங்கிரஸ் மேலிட கூட்டத்தில் நேரில் பங்கேற்காமல் ஆன்லைனில் பங்கேற்றார்.

இது போதாது என்று சசிதரூர் அவ்வப்போது மத்திய அரசின் நடவடிக்கைகளை பாராட்டி வந்தனர். குறிப்பாக பாகிஸ்தானுக்கு எதிரான ‛ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையில் மத்திய அரசை தொடர்ந்து பாராட்டி வருகிறார்.

பாஜகவினருடன் நெருக்கம்

இது காங்கிரஸ் மேலிடத்துக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் சசிதரூர் ஓரம்கட்டப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. மேலும் அவர் பிரதமர் மோடி உள்பட பாஜக தலைவர்களுடன் நெருக்கம் காட்டுகிறார். இதனால் அவர் பாஜகவில் சேர உள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அதுபற்றி சசிதரூர் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

கார்கே - ராகுலுடன் சந்திப்பு

இந்நிலையில் தான் சசிதரூர் இன்று காங்கிரஸ் மேலிட தலைவர்களை சந்தித்து பேசினார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் டெல்லியில் நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக இன்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவின் நாடாளுமன்ற அலுவலக அறையில் சசிதரூர், மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தியை சந்தித்து பேசினார்.

ஒரு மணிநேரம் நீடித்த பேச்சு

இந்த உரையாடல் சுமார் ஒரு மணிநேரம் வரை நீடித்தது. அப்போது 3 பேரும் பல்வேறு விவகாரங்கள் குறித்த விரிவாக பேசினர். அதன்பிறகு சிறிது நேரத்தில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் கேசி வேணுகோபாலும் இந்த விவாதத்தில் பங்கேற்ற நிலையில் சசிதரூரின் இந்த சந்திப்பு சுமூகமாக முடிவடைந்தது.

போட்டோவுடன் எக்ஸ் பதிவு

இந்த சந்திப்புக்கு பிறகு சசிதரூர் தனது எக்ஸ் பக்கத்தில் முக்கிய பதிவை வெளியிட்டார். மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி ஆகியோருடன் சேர்ந்து இருக்கும் போட்டோவை அவர் வெளியிட்டார்.

அதில் ,‛‛இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆகியோருக்கு நன்றி. இருவருடனும் இன்று பல்வேறு விஷயங்கள் குறித்து ஆக்கப்பூர்வமான மற்றும் சுமூகமான விவாதம் நடந்தது. இந்திய மக்களுக்குச் சேவை செய்வதில் நாங்கள் அனைவரும் ஒரே நோக்கத்தில் பயணிக்கிறோம்" என்று கூறியுள்ளார்.

பிரச்சனை ஓவர்

இதன்மூலம் காங்கிரஸ் மேலிடத்துடன் சசிதரூருக்கு இருந்த அதிருப்தி சரியாகி உள்ளது. அதுமட்டுமின்றி நாங்கள் அனைவரும் ஒரே நோக்கத்தில் சேர்ந்து பயணிக்கிறோம் என்று சசிதரூர் கூறியிருப்பதன் மூலமாக தான் காங்கிரஸ் கட்சியிலேயே தொடர்வேன் என்பதை அவர் வெளிப்படுத்தி உள்ளார்.

முன்னதாக சசிதரூர் இந்த சந்திப்பு பற்றி பத்திரிகையாளர்களிடம் பேசினார். அப்போது, ‛‛தனது கட்சிக்குள் இருக்கும் விவகாரத்தை பெரிதுப்படுத்த வேண்டாம். நான் இப்போதே நாடாளுமன்றத்திற்கு செல்கிறேன். எனக்கு சொந்தமான கட்சி தலைவரைச் சந்திப்பதில் அப்படி என்ன வினோதம் இருக்கிறது?" என்று கேள்வி எழுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+