இந்தியாவில் பூஸ்டர் டோஸ் இப்போது தேவையா?.. எய்ம்ஸ் இயக்குனர் ரன்தீப் குலேரியா தெளிவான விளக்கம்!
டெல்லி: இந்தியா முழுவதும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொரோனா பாதிப்பு மிக அதிகமாக இருந்தது. ஆக்சிஜன் பற்றாக்குறை, மருத்துவமனைகளில் படுக்கைகள் தட்டுப்பாடு என்று நாடு திண்டாடியது. இதன்பின்னர் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்தது.
தற்போது நாட்டில் கொரோனா தொற்று 20,000-க்கும் கீழே பதிவாகி வருகிறது. இந்தியாவில் இனி கொரோனா அச்சுறுத்தல் அந்த அளவுக்கு இருக்காது என்ற போதிலும் அடுத்த 2 மாதம் பண்டிகை காலம் என்பதால் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டிய அவசியம் உள்ளது.

கவனம் அவசியம்
இந்த நிலையில் பண்டிகை காலங்களில் மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என்று எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் ரன்தீப் குலேரியா தெரிவித்தார். என்.டி.டிவி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில், ''பண்டிகை காலங்களில் கவனமாக இருங்கள் என்று நாங்கள் எப்போதும் கூறி வருகிறோம், ஏனெனில் இந்த நேரத்தில் கூட்டம் அதிகமாக இருக்கும் கூட்டங்களில், மக்கள் கொரோனா பின்பற்ற மாட்டார்கள்' என்று கூறி இருக்கிறார்/

குழந்தைகளுக்கு தடுப்பூசி
குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது குறித்து பேசிய ரன்தீப் குலேரியா, '' "குழந்தைகளுக்கு இரண்டு தடுப்பூசிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.. குழந்தைகளுக்கான தடுப்பூசிகள் விரைவில் பயன்பாட்டுக்கு வரும். இது தொடர்பாக சுகாதாரத் துறை பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ண்ட நாள் நோய் பாதிப்பு மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை அளிக்கப்படும்.

பூஸ்டர் டோஸ் எப்போது?
ஏனெனில் ஆரோக்கியமான குழந்தைகளுக்கு பொதுவாக லேசான நோய்த்தொற்றுகள் இருக்கும். அவர்களுக்கு பின்னர் தடுப்பூசி போடலாம்'' என்று கூறினார். இரண்டு டோஸ் முடிந்து 3-வது தடுப்பூசி டோஸான பூஸ்டர் டோஸ் குறித்து பேசிய அவர், '' பூஸ்டர் டோஸ் நமக்கு இப்போது தேவையில்லை. ஒரு வருடத்திற்குப் பிறகு அதாவது அடுத்த வருடத்தில் பூஸ்டர் டோஸ்கள் பற்றி முடிவெடுக்கப்படும்.

இதில்தான் கவனம்
முதல் இரண்டு டோஸ் தொற்றுக்கு எதிராக, தொற்று பாதித்தவர்களை மரணத்தில் இருந்து எவ்வாறு பாதுகாக்கிறது? என்பதை பொறுத்து பூஸ்டர் டோஸ்கள் பற்றி முடிவெடுக்கலாம். நாம் தற்போது அனைத்து மக்களுக்கும் 2 டோஸ் விரைவாக போடுவது பற்றிதான் கவனம் செலுத்த வேண்டும் என்றுஎய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் ரன்தீப் குலேரியா கூறினார்.












Click it and Unblock the Notifications