‛‛மோடிக்கு ஐடியா தந்த நிதிஷ் குமார்’’.. என்டிஏ கூட்டத்தில் முக்கிய ‛டிமாண்ட்’.. நம்பலாமா?
டெல்லி: டெல்லியில் நேற்று நடந்த என்டிஏ கூட்டணி கட்சி தலைவர்களின் ஆலோசனையில் மத்தியில் 3வது முறையாக ஆட்சி அமைப்பது தொடர்பாக பீகார் முதல்வர் நிதிஷ் குமார் முக்கிய ‛டிமாண்ட்' வைத்துள்ளதாக பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் மத்தியில் ஆட்சி அமைக்க தேவையான தனிப்பெரும்பான்மை என்பது எந்த கட்சிக்கும் கிடைக்கவில்லை. இதனால் மத்தியில் கூட்டணி ஆட்சி அமைவது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது மொத்தமுள்ள 543 லோக்சபா தொகுதிகள் உள்ள நிலையில் ஆட்சியை பிடிக்க 272 இடங்கள் தேவை. ஆனால் எந்த கட்சியும் 272 இடங்களில் ஜெயிக்கவில்லை.

அதிகபட்சமாக பாஜக 240 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் பாஜக தனிப்பெரும் கட்சியாக உள்ளது. அதோடு பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகளை சேர்த்தால் என்டிஏ எனும் தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணிக்கு 293 எம்பிக்கள் உள்ளன. அதேவேளையில் எதிர்க்கட்சிகளின் ‛இந்தியா' கூட்டணி 235 இடங்களில் ஜெயித்துள்ளது. தற்போதைய சூழலில் தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் பாஜக தனது கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து மத்தியில் ஆட்சி அமைக்க திட்டமிட்டுள்ளது.
இதுதொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று டெல்லியில் உள்ள மோடியின் இல்லத்தில் நடந்தது. இதில் பீகார் முதல்வரும், ஜேடியூ தலைவருமான நிதிஷ் குமார், ஆந்திரா முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு, மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, கர்நாடகா முன்னாள் முதல்வரும், ஜேடிஎஸ் தலைவருமான குமாரசாமி உள்பட பல தலைவர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தின்போது அனைவரும் பாஜகவுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தனர்.
இந்த ஆலோசனை கூட்டத்தின்போது என்டிஏ எனும் தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக பிரதமர் மோடியை ஏற்பதாக அவர்கள் கையெழுத்திட்டுள்ளனர். இதையடுத்து நாளை எம்பிக்களின் ஆலோசனை கூட்டத்தை நடத்தி ஜனாதிபதி திரெளபதி முர்முவிடம் ஆட்சி அமைக்க பிரதமர் மோடி உரிமை கோரவும், நாளை மறுநாள் பிரதமராக 3வது முறையாக மோடி பதவியேற்கவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே தான் பாஜகவிடம் சிறு தயக்கம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதாவது தற்போது நிதிஷ் குமார், சந்திரபாபு நாயுடு ஆகியோர் அடிக்கடி கூட்டணி மாறிய வரலாறு உள்ளது. இதனால் பாஜகவுக்கு சின்ன சந்தேகம் உள்ளது. ஆனால் தற்போதைய சூழலில் நிதிஷ் குமார், சந்திரபாபு நாயுடு ஆகியோர் பாஜக கூட்டணிக்கே ஆதரவு தெரிவித்துள்ளனர். அதோடு நேற்றைய ஆலோசனை கூட்டத்தில் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் முக்கிய விஷயத்தை பிரதமர் மோடியிடம் தெரிவித்துள்ளார். அதாவது, ‛‛வேகமாக செயல்பட்டு மத்தியில் ஆட்சி அமைக்க வேண்டும்'' என அவர் வலியுறுத்தி உள்ளார். அதாவது, ‛‛மத்தியில் ஆட்சி அமைப்பதில் தாமதம் கூடாது. முடிந்தவரை மத்தியில் வேகமாக அரசு அமைக்க வேண்டும்'' என தெரிவித்துள்ளார்.
இதனால் நிதிஷ் குமாரை பாஜக வேறு வழியின்றி நம்ப தொடங்கி உள்ளது. அதேபோல் சந்திரபாபு நாயுடுவும் பத்திரிகையாளர்களை சந்தித்தபோது ,‛‛நாங்கள் தற்போது பாஜக கூட்டணியில் தான் இருக்கிறோம். நாங்கள் பாஜகவுக்கு தான் ஆதரவு தெரிவித்துள்ளோம். வேறு ஏதாவது நடந்தால் உங்களிடம் அப்டேட் செய்கிறேன்'' என்றார். இதனால் சந்திரபாபு நாயுடுவும் தற்போதைய சூழலில் பாஜகவின் பக்கம் தான் உள்ளது.
அதோடு ‛இந்தியா' கூட்டணியும் கூட தற்போதைய நிலையில் எதிர்க்கட்சிகள் வரிசையில் தான் அமர திட்டமிட்டுள்ளது. மத்தியில் ஆட்சியை பிடிக்க 272 எம்பிக்கள் வேண்டும் என்ற நிலையில் 235 எம்பிக்கள் மட்டுமே உள்ளதால் ‛இந்தியா' கூட்டணியும் ஆட்சி அமைப்பதில் அவசரம் காட்டவில்லை. அதோடு 16 எம்பிக்கள் உள்ள தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு, 12 எம்பிக்கள் வைத்துள்ள ஜேடியு தலைவரான பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ஆகியோரை வரவேற்பதில் ‛இந்தியா' கூட்டணி தயாராக உள்ளது. இதனால் அடுத்த 5 ஆண்டு மத்திய அரசில் எப்போதும் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர். ஆனாலும் தற்போதைய சூழலில் சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் ஆதரவுடன் 3வது முறையாக நரேந்திர மோடி பிரதமராக பொறுப்பேற்க உள்ளது உறுதியாகி உள்ளது.
-
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே!












Click it and Unblock the Notifications