ஏ!பாஜகவே! பஞ்சாப திராவிட உத்கல வங்கா.. ம்ஹூம்..மஹூவா மொய்த்ரா ஆவேசத்தை உன்னிப்பாக கவனித்த சோனியா!
டெல்லி: பஞ்சாப், திராவிடஸ்தான், ஒடிஷா (உத்கல்), வங்கா (மேற்கு வங்கம்) என பல மாநிலங்களில் பாஜக காலூன்ற முடியவில்லை.. இன்னும் 30 ஆண்டுகள் பாஜகவை நான் துணிச்சலுடன் எதிர்ப்பேன் என லோக்சபா எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மஹூவா மொய்த்ரா ஆவேசமாக தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க லஞ்சம் வாங்கினார் என்ற குற்றச்சாட்டில் மஹூவா மொய்த்ராவின் லோக்சபா எம்பி பதவி பறிக்கப்பட்டது. இதனையடுத்து மஹூவா மொய்த்ராவுக்கு ஆதரவாக சோனியா காந்தி தலைமையில் இந்தியா கூட்டணி எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று போராட்டம் நடத்தினர்.

அப்போது சோனியா காந்தி முன்னிலையில் மஹூவா மொய்த்ரா செய்தியாளர்களிடம் ஆவேசமாக கூறியதாவது: அதானி விவகாரத்தை முன்வைத்து என் வாயை மூடிவிடலாம் என மோடி அரசாங்கம் நினைக்கிறது. உங்களுடைய கங்காரு நீதிமன்றமானது அதானிக்கு எவ்வளவு முக்கியத்துவம் தருகிறது என்பதை பட்டவர்த்தனமாக வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டது.
ஒரு எம்பியின் பதவியை பறிப்பதற்கு நன்னடத்தை குழுவுக்கு அதிகாரம் இல்லை. பாஜகவின் சகாப்தம் முடியப் போகிறது என்பதன் தொடக்கம்தான் இது. நன்னடத்தை குழு எனக்கு தன்டனை வழங்கலாம். அது வழக்கமான நடைமுறைதான். ஆனால் என்னை தகுதி நீக்கம் செய்ய முடியாது.
எனக்கு இப்போது 49 வயதாகிறது. இன்னும் 30 ஆண்டுகள்.. நாடாளுமன்றத்துக்கும் உள்ளேயும் வெளியேயும் வீதியில் நின்றும் பாஜகவை எதிர்த்துப் போராடுகிற தெம்பும் திராணியும் எனக்கு இருக்கிறது. பாஜகவின் கதை முடியப் போவதை நாங்கள் எல்லோரும் பார்க்கத்தான் போகிறோம். உங்கள் கதை முடிவதன் தொடக்கம்தான் இது. நாங்கள் மீண்டும் வருவோம். உஙக்ள் கதை முடிவதை பார்ப்போம்.
டேனிஷ் அலிக்கு எதிராக பாஜகவின் ரமேஷ் பிதூரி அவதூறான வசைகளை வெளிப்படுத்தினார். நாடாளுமன்றத்தில் இருக்கும் ஒரு சில முஸ்லிம் எம்பிக்களில் அவரும் ஒருவர். நாடாளுமன்றத்துக்கு பாஜக 303 எம்.பிக்களை அனுப்பி வைத்துள்ளது. ஆனால் அதில் ஒருவர் கூட முஸ்லிம் இல்லையே. அப்படிப்பட்ட நிலையில் ரமேஷ் பிதூரி மீது ஏன் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. பாஜக சிறுபான்மையினரை எதிரியாகப் பார்க்கிறது. சிறுபான்மையினரை வெறுக்கிறது. பெண்களை வெறுக்கிறது. பெண் சக்தியை நீங்கள் வெறுக்கிறீர்கள்.
நாடாளுமன்ற கமிட்டிகளை ஆயுதங்களாகப் பயன்படுத்துகிறீர்கள். நன்னடத்தை குழுவின் ஒவ்வொரு செயல்பாடும் நாடாளுமன்ற நடைமுறைகளுக்கு எதிரானதாகவே இருக்கிறது. பஞ்சாப சிந்து குஜராத்த மராட்ட திராவிட உத்கல வங்கா என்பது தேசிய கீதம். இதில் பஞ்சாப்பில் பாஜக இல்லை. சிந்து இந்தியாவிலேயே இல்லை. திராவிடஸ்தானில் பாஜக இல்லை. உத்கலா (ஒடிஷா)வில் பாஜக இல்லை. வங்காளத்தில் (மேற்கு வங்கத்தில்) பாஜக இல்லை என்பதை அக்கட்சியினர் நினைவில் கொள்ள வேண்டும். இவ்வாறு மஹூவா மொய்த்ரா தெரிவித்தார்.
-
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications