Budget 2022: பூஜ்யம் பெகாசஸ் ஸ்பின் பட்ஜெட் ஒற்றை வரியில் ஒட்டுமொத்தமாய் பட்ஜெட்டை விமர்சித்த மம்தா
டெல்லி: மத்திய அரசு இன்று தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில் சாதாரண மக்களுக்கு பூஜ்ஜியம் தான் உள்ளது எனவும் இது பெகாசஸ் பின் பட்ஜெட் என மேற்குவங்க மாநில முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி கடுமையாக விமர்சித்துள்ளார்
2022 - 2023 ஆம் ஆண்டுக்கான மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை இன்று நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சுமார் 90 நிமிடங்களில் தாக்கல். மிக அதிக நேரம் பட்ஜெட் தாக்கல் செய்த அவர் தற்போது மிக குறைந்த நேரத்தில் பட்ஜெட் தாக்கல் செய்த நிதி அமைச்சர் என்ற இரு சாதனைகளையும் படைத்துள்ளார்.
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள மத்திய அரசின் பட்ஜெட் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது வளர்ச்சி மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கான பட்ஜெட் என பாஜக கூறிவந்தாலும் பொதுமக்கள் மற்றும் மாதச் சம்பளம் பெறும் மக்கள் இளைஞர்கள் விவசாயிகளுக்கு எந்த விதமான திட்டங்கள் இந்த பட்ஜெட்டில் இல்லை எனவும் கடுமையாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.

ராகுல் விமர்சனம்
மோடி அரசு தாக்கல் செய்தது எதுவும் இல்லாத பூஜ்ஜிய பட்ஜெட் என காங்கிரஸ் கட்சியுன் முன்னாள் தலைவரான ராகுல்காந்தி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், ' மோடி அரசு தாக்கல் செய்தது எதுவும் இல்லாத பூஜ்ஜிய பட்ஜெட். ஆகும். இந்த பட்ஜெட்டில் எதுவுமில்லை. ஏழைகள், நடுத்தரவர்க்கத்தினர், இளைஞர்கள் பயன்பெறும் வகையில் பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இல்லை. சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மற்றும் விவசாயிகளுக்கும் எந்த அறிவிப்பும் இடம்பெறவில்லை. மாத சம்பளகாரர்களுக்கும் பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இல்லை' என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.

துரோகம் இழைத்த பட்ஜெட்
காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும், அக்கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளருமான ரந்தீப் சுர்ஜேவாலா, ஊதியக் குறைப்பு மற்றும் உயர் பணவீக்கம் காரணமாக சம்பளம் பெறுவோர் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் இந்த பட்ஜெட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர் என கூறியுள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்தியாவின் சம்பளம் பெறும் வர்க்கம் மற்றும் நடுத்தர வர்க்கம் தொற்றுநோய், முழு ஊதியக் குறைப்பு மற்றும் பணவீக்கத்தை முறியடிக்கும் காலங்களில் நிவாரணத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். நிதியமைச்சர் மற்றும் பிரதமர் நேரடி வரி நடவடிக்கைகளால் அவர்களை மீண்டும் ஆழமாக ஏமாற்றியுள்ளனர்" என்று பதிவிட்டுள்ளார்.

எதிர்கட்சிகள் விமர்சனம்
இவ்வாறு எதிர்க்கட்சிகள் தொடங்கி பல்வேறு தரப்பினரும் மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். நதிகள் இணைப்பு இயற்கை விவசாயம் ஊக்குவிப்பு ஈகாஸ்போட் 5 வசதி டிஜிட்டல் கரன்சி ஒரே நாடு ஒரே பத்திரப்பதிவு உள்ளிட்ட பல திட்டங்கள் இருந்தாலும் நோய் தொற்று காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த எந்த திட்டமும் இல்லை எனவும் விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்புகள் எதுவும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை என புகார் எழுந்துள்ளது.
Recommended Video

பூஜ்ய பட்ஜெட் - மம்தா பானர்ஜி
இந்த நிலையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய அரசின் பட்ஜெட்டில் சாதாரண மக்களுக்கு பூஜ்ஜியம் தான் உள்ளது என மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். இதுதொடர்பாக தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள மம்தா பானர்ஜி," வேலையின்மை மற்றும் பண வீக்கத்தால் நசுக்கப்படும் வேளையில் சாதாரண பொதுமக்களுக்கு பட்ஜெட்டில் பூஜ்ஜியம் தான் உள்ளது எனவும் எதையுமே குறிக்காத பெரிய வார்த்தைகளில் அரசாங்கம் தோற்று விட்டது எனவும் இது பெகாசஸ் ஸ்பின் பட்ஜெட்", என மம்தா பானர்ஜி பதிவிட்டுள்ளார்.
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications