"மம்தா vs மோடி.." மேற்கு வங்கத்தில் இரு கட்டங்களாக சட்டசபை தேர்தல்.. மே 4ல் வாக்கு எண்ணிக்கை
டெல்லி: தமிழ்நாடு உடன் மொத்தம் 5 மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் தேதி மற்றும் அட்டவணை குறித்த அறிவிப்புகளைத் தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டது. இதில் அதிகபட்சமாக மேற்கு வங்கத்தில் 2 கட்டங்களாகத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 23 மற்றும் ஏப்ரல் 29 தேதிகளில் வாக்குப்பதிவு நடக்கும் சூழலில், மே 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா, புதுச்சேரி, அசாம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. அதில் மேற்கு வங்கத்தின் பதவிக்காலம் மே 7ஆம் தேதி முடிவடைகிறது. இதனால் அங்கு அதற்குள் தேர்தல் நடத்தி முடித்து முடிவுகள் அறிவிக்கப்பட வேண்டி உள்ளது.

அங்கு மார்ச்- ஏப்ரல் காலகட்டத்தில் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2021ல் 8 கட்டங்களாக அங்குச் சட்டசபைத் தேர்தல் நடந்த நிலையில், 215 தொகுதிகளில் வென்று மம்தாவின் திரிணாமுல் கட்சி ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டது. பாஜக 77 இடங்களில் வென்றது. இதில் அதிர்ச்சி தரும் விஷயம் என்னவென்றால் ஒரு காலத்தில் மேற்கு வங்கத்தை ஆண்ட காங்கிரஸ் கட்சியால் ஒரு இடத்திலும் வெல்ல முடியவில்லை.
இந்தச் சூழலில் தான் இப்போது மேற்கு வங்கத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், 5 மாநில தேர்தல் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டார்.
மற்ற மாநிலங்களில் ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறும் நிலையில், மேற்கு வங்கத்தில் மட்டும் இரு கட்டங்களாகத் தேர்தல் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு ஏப்ரல் 23 மற்றும் ஏப்ரல் 29 தேதிகளில் வாக்குப்பதிவு நடக்கும் சூழலில், மே 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
முதலாம் கட்டம்- ஏப்ரல் 23
இரண்டாம் கட்டம்- ஏப்ரல் 29
வாக்கு எண்ணிக்கை- மே 4
மேற்கு வங்கத்தைப் பொறுத்தவரை அங்கு எஸ்ஐஆர் தொடர்பான சிக்கல் இருந்தது. இது தொடர்பாக மம்தா உச்ச நீதிமன்றத்திலும் கூட வழக்கு தொடர்ந்தார். மேலும், அவரே நேரடியாக ஆஜராகியும் வாதாடினார். அதில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த சில உத்தரவுகளைத் தொடர்ந்து மம்தா எஸ்ஐஆர் சட்ட போராட்டத்தைத் தற்காலிகமாக வாபஸ் பெற்று கொண்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications