மேற்கு வங்கத்தில் மிக பெரிய அரசியல் பூகம்பம்! மம்தாவிற்கு விழும் அடி? ஸ்கெட்ச் போட்டு தூக்கிய மோடி!

Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் 2ம் கட்ட தேர்தல் முடிந்துவிட்ட நிலையில், அங்க தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாக ஆரம்பித்துள்ளது. இதுவரை வெளியான சர்வேக்களை வைத்துப் பார்க்கும்போது மேற்கு வங்கத்தில் மிகப் பெரிய ஒரு அரசியல் பூகம்பம் ஏற்படுவது போலவே தெரிகிறது. மம்தாவின் 15 ஆண்டு ஆட்சி முடிவுக்கு வரலாம் என்றே பல்வேறு சர்வேக்களும் கூறியுள்ளன.

மேற்கு வங்கத் தேர்தல் களம் தற்போது இந்திய அரசியலின் உச்சக்கட்டப் பரபரப்பாக மாறியிருக்கிறது. 2014 முதல் மம்தா பானர்ஜியின் கோட்டையைத் தகர்க்க முயற்சி செய்து வரும் பாஜகவிற்கு, இது ஒரு வாழ்வா சாவா போராட்டமாக உருவெடுத்துள்ளது. 15 ஆண்டுக்கால திரிணாமுல் ஆட்சியை வீழ்த்தி, மேற்கு வங்கத்தைக் கைப்பற்ற பாஜக தனது முழு பலத்தையும் பிரயோகித்துள்ளது.

West Bengal Exit Poll West Bengal election 2026 Mamata Banerjee BJP

மேற்கு வங்கம்

மேற்கு வங்கத்தின் 294 தொகுதிகளுக்கும் தேர்தல் முடிந்துவிட்ட நிலையில், அடுத்த முதல்வர் யார் என்பதில் பெரும் சஸ்பென்ஸ் நீடிக்கிறது. இதுவரை வெளியான எக்சிட் போல் முடிவுகள் இரண்டு துருவங்களாகப் பிரிந்து கிடப்பதுதான் இந்தத் தேர்தலின் ஆகப்பெரிய சுவாரஸ்யம். இருப்பினும், பெரும்பாலான சர்வேக்கள் பாஜகவுக்கு சாதகமாகவே முடிவுகளைச் சொல்கின்றன.

எக்சிட்போல்கள்

பாஜகவிற்குச் சாதகமாக நான்கு கணிப்புகளும், மம்தாவுக்குச் சாதகமாக இரண்டு கணிப்புகளும் வெளியாகியுள்ளன.. இதுவரை வெளியான எக்சிட் போல்களில் நான்கு முன்னணி எக்சிட் போல்கள் பாஜக இந்த முறை மம்தாவின் கோட்டையைத் தகர்த்து, 146 முதல் 175 இடங்கள் வரை பிடித்து ஆட்சியமைக்கும் எனத் தெரிவிக்கின்றன. இதற்கு நேர்மாறாக, பீப்பிள்ஸ் பல்ஸ் (People's Pulse) 177 - 187 இடங்களையும், ஜன்மத் போல்ஸ் (Janmat Polls) 195 - 205 இடங்களையும் மம்தாவுக்கு வழங்கி, அவர் நான்காவது முறையாக அரியணை ஏறுவார் எனக் கணித்துள்ளன.

பாஜகவைப் பொறுத்தவரை மேற்கு வங்கத்தில் அவர்கள் வளர்ச்சி பயங்கர வேகமாகவே அமைந்தது. 2016ல் வெறும் 3 இடங்களில் மட்டுமே வென்றிருந்த பாஜக, 2021ல் 77 இடங்களைப் பிடித்து 38.1% வாக்கு சதவீதத்துடன் பிரதான எதிர்க்கட்சியாக உருவெடுத்தது. இந்த முறை மேற்கு வங்கத்தை வென்றே தீர வேண்டும் என்பதில் பாஜக உறுதியாக இருந்தது. இதன் காரணமாகவே பிரதமர் மோடி, அமித் ஷா எனப் பலரும் மேற்கு வங்கத்தில் தீவிர பிரச்சாரத்தில் இறங்கினர்.

தீவிர பிரச்சாரம்

குறிப்பாகப் பிரதமர் மோடி மட்டும் 20க்கும் மேற்பட்ட பேரணிகளை நடத்தியதோடு, உள்ளூர் மக்களுடன் தொடர்ந்து கலந்துரையாடினார்.. உள்துறை அமைச்சர் அமித் ஷா 15 நாட்கள் அங்கேயே முகாமிட்டுத் தேர்தல் பணிகளைக் கவனித்தார். ஊழல் புகார்கள், வேலைவாய்ப்பின்மை, மற்றும் பெண்களின் பாதுகாப்பு ஆகியவற்றை முன்வைத்து பாஜக தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டது.

இந்தத் தேர்தலில் சிறப்புத் தீவிரத் திருத்தத்தை (SIR) மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.. எஸ்ஐஆர் நடவடிக்கையில் வாக்காளர் பட்டியலிலிருந்து சுமார் 91 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. இந்த அதிரடி நீக்கம் திரிணாமுல் காங்கிரஸின் வாக்கு வங்கியைப் பெரிய அளவில் சிதைக்கும் என்றும், அது தங்களுக்குச் சாதகமாக முடியும் என்றும் பாஜக உறுதியாக நம்புகிறது.

அரசியல் பூகம்பம்

15 ஆண்டுகள் ஒரு கட்சி ஆட்சியில் இருக்கும்போது அவர்களுக்கு எதிராக ஒரு மனநிலை மக்களிடையே இருப்பது இயல்பானது தான்.. இது ஒரு பக்கம், 91 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் இன்னொரு பக்கம் எனப் பல சவால்களைச் சந்திக்கும் மம்தா பானர்ஜி, இந்த தேர்தலில் திணறிவிட்டார் என்பதே உண்மை. அந்த 4 சர்வேக்கள் கணித்தது போல மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சியைப் பிடித்தால் அது மிக பெரிய ஒரு அரசியல் பூகம்பமாகவே இருக்கும்.!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+