Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வீழ்ச்சி அடையும் பங்குச்சந்தை.. "தேர்தல் முடிவு வெளியாகும் வரை தான் உங்களுக்கு டைம்!" அமித் ஷா பரபர

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கடந்த சில வாரங்களாகவே பங்குச்சந்தை லேசாக சரிந்துள்ள நிலையில், இது தொடர்பாக அமித் ஷா கூறியுள்ள கருத்துகள் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

நமது நாட்டில் மொத்தம் ஏழு கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடக்கிறது. அதில் 4 கட்ட தேர்தல் முடிந்துவிட்ட நிலையில், 3 கட்ட தேர்தல் இன்னும் நடைபெற இருக்கிறது.

What Amit Shah said about Indian stock Market Crash Question

இதற்காகத் தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடந்து வருகிறது. இதற்கிடையே பிரபல ஆங்கில ஊடகம் ஒன்றுக்குப் பேட்டியளித்த அமித்ஷா பங்குச்சந்தைகள் குறித்து சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

பங்குச்சந்தை: அதாவது பங்குச்சந்தைகளை எப்போதும் தேர்தலுடன் பொருத்திப் பார்க்கக் கூடாது என்ற அவர், அதேநேரம் நிலையான அரசு அமைவது பங்குச்சந்தைகள் சிறப்பாகச் செயல்பட உதவும் என்று தெரிவித்தார். லோக்சபா தேர்தலில் பாஜக மற்றும் அதன் கூட்டணி மிகப் பெரிய வெற்றியைப் பெறும் என்ற செய்தி ஜூன் 4ஆம் தேதி வந்தவுடன் பங்குச் சந்தை உயரும் என்றும் அவர் தெரிவித்தார்.

கடந்த சில வாரங்களாகவே இந்தியப் பங்குச்சந்தைகள் கணிசமாகச் சரிந்துள்ளன. இதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது. தேர்தலில் ஆளும் தரப்பு தோற்கலாம் அல்லது தனிப்பெரும்பான்மை கிடைக்காமல் போகலாம் என்பதாலேயே பங்குச்சந்தை சரிவடைவதாக எதிர்க்கட்சியினர், குறிப்பாகக் காங்கிரஸ் தலைவர்கள் பேசி வருகிறார்கள். இதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே அமித் ஷா இந்தக் கருத்துகளைக் கூறியுள்ளார்.

அமித் ஷா: பாஜக பெரிய வெற்றியைப் பெறாது என்று தெரிந்ததாலேயே பங்குச்சந்தை சரிகிறது என எதிர்க்கட்சிகள் விமர்சிக்கிறதே என்ற கேள்விக்குப் பதிலளித்த அமித் ஷா, "பங்குச்சந்தை சரிவதை வைத்து இப்படி எல்லாம் சொல்ல முடியாது. ஏனென்றால் இதற்கு முன்பு பல முறை மிகப் பெரியளவில் பங்குச்சந்தைகள் சரிந்துள்ளன.

பங்குச் சந்தை சரிவதை எப்போதும் தேர்தலுடன் இணைத்துப் பார்க்கக்கூடாது.. ஆனால் இதுபோன்ற சில வதந்திகளால் ஜூன் 4ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும் முன்பு நீங்கள் விரும்பிய பங்குகளை வாங்கிவிடுங்கள் என்பதே எனது பரிந்துரை. ஏனென்றால், அதன் பிறகு பங்குச்சந்தை ஜெட் வேகத்தில் உயர்ந்துவிடும். சென்செக்ஸ் எந்தளவுக்கு உயரும் எனத் துல்லியமாகச் சொன்ன நான் பொருளாதார வல்லுநர் இல்லை.. ஆனால் நிலையான அரசு இருக்கும்போதெல்லாம் பங்குச் சந்தை சிறப்பாகச் செயல்பட்டு இருக்கிறது.

400 இடங்கள்: 400-க்கும் மேற்பட்ட இடங்களை நிச்சயம் பாஜக பெறும்.. மோடி தலைமையில் நிலையான அரசு அமையும்.. இதன் காரணமாகப் பங்குச் சந்தை ஜூன் 4ம் தேதிக்குப் பின் நிச்சயமாக உயரும்" என்றார்.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணைத் தான் சென்செக்ஸ் என குறிப்பிடுவார்கள். இது நாட்டில் பட்டியலிடப்பட்டுள்ள டாப் 30 நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு குறியீட்டு எண்ணாகும். இது கடந்த சில வாரங்களில் இந்த சென்செக்ஸ் 73,895 புள்ளிகளில் சுமார் 1000 புள்ளிகள் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

காரணம்: பொதுவாக எந்தவொரு நாட்டில் நிலையான அரசு அமைகிறதோ அங்குப் பங்குச்சந்தை சிறப்பாகச் செயல்படும். அதேநேரம் அரசியல் குழப்பங்கள் இருந்தால் அல்லது தேர்தல் காலங்களில் பொதுவாகப் பங்குச்சந்தை சரிவடையும். இருப்பினும், அவை தற்காலிக நிகழ்வாகவே எப்போதும் இருக்கும். நீண்ட கால நோக்கில் பார்க்கும் போது தேர்தல் என்பது பெரியளவில் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தாது.. அரசு எடுக்கும் கொள்கை முடிவுகளே சந்தைக்கு முக்கியம்.

அதேநேரம் சர்வதேச காரணிகளும் இதில் இருக்கிறது. குறிப்பாக அமெரிக்காவில் வட்டி விகிதம் அதிகமாக இருப்பதால் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் இந்தியப் பங்குச்சந்தையில் இருந்து வெளியேறுவதே பங்குச்சந்தையின் சமீபத்திய சரிவுக்கு முக்கிய காரணம் என்று சொல்லப்படுகிறது.

இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீடு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+