மொத்த சட்டத்திலும் கை வைத்த மத்திய பாஜக அரசு.. ஐபிசி, சிஆர்பிசி இந்தில மாறுது! புதிய சட்டங்கள் என்ன?
டெல்லி: இந்தியாவில் அமலில் இருந்து வரும் சட்டங்களான ஐபிசி, சிஆர்பிசி, எவிடென்ஸ் சட்டம் போன்றவற்றின் பெயர்களை இந்தியில் மாற்றி புதிய சட்ட விதிகள் மற்றும் அதற்கான தண்டனைகளை மத்திய அரசு கொண்டுவர உள்ளது.
இந்தியாவில் தற்போது குற்றவியல் சட்டங்கள், தண்டனை சட்டங்கள், சான்று சட்டங்களான ஐபிசி, சிஆர்பிசி, எவிடன்ஸ் ஆக்ட் போன்றவை அமலில் இருந்து வருகின்றன. சுதந்திரத்துக்கு முந்தைய காலமான 1860 களில் இருந்து பின்பற்றப்பட்டு வரும் ஐபிசி உள்ளிட்ட இந்த சட்டங்களில் பல சட்டங்கள் அவ்வப்போது நாடாளுமன்றத்தில் திருத்தம் செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் மொத்தமாக இந்த 3 சட்டங்களையும் மாற்ற இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெள்ளிக்கிழமை அறிவித்தார். ஐபிசிக்கு பதில் பாரதிய நியாய சன்ஹிதா, சிஆர்பிசிக்கு பதில் பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா, எவிடன்ஸ் சட்டத்துக்கு பதில் பாரதிய சாக்ஷ்யா என்று அனைத்துக்கும் இந்தியில் பெயர் மாற்றி சட்டங்களை அறிமுகம் செய்ய உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த மூன்று மாற்றங்களும் நாடாளுமன்ற நிலைக் குழு பரிசீலனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. இதில் பல்வேறு குற்றங்களுக்கு புதிய தண்டனைகள் சேர்க்கப்பட்டு உள்ளன. குறிப்பாக தற்போது அதிகரித்து வரும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், கும்பல் படுகொலைகள், பிரிவினைவாதம், ஆயுதமேந்திய கிளர்ச்சி, நாசகார நடவடிக்கைகள், இறையாண்மை, ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் போன்றவற்றுக்கான தண்டனைகள் புதிய சட்டங்களில் சேர்க்கப்பட்டு உள்ளன. அவை என்னவென்று விரிவாக பார்ப்போம்.
- தேச துரோக சட்டம் திரும்பப்பெறப்பட்டு ஒற்றுமையை சீர்குலைத்தல் (செக்சன் 150) என்ற புதிய சட்டம் கொண்டு வரப்படுகிறது. சொல்லாலோ, செயலாலோ, குறியீடு மூலமாகவோ, ஆயுதங்கள் மூலமாகவோ, பொருளாதாரம் பிரிவினைவாதத்தை ஊக்குவித்தல், ஒற்றுமையை குலைத்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால் இந்த சட்டத்தின் கீழ் ஆயுள் தண்டனை அல்லது 7 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.
- முதல் தகவல் அறிக்கை அல்லது E-FIR ஐ போலீசார் 90 நாட்களுக்குள் எங்கிருந்து வேண்டுமானாலும் பதியலாம்.
- தேடுதல் பணிகள் மற்றும் வழக்கு பதிவு செய்யும் நடவடிக்கைகளை வீடியோவாக பதிவு செய்ய வேண்டும்.
- தேர்தல் சமயங்களில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தால் ஒரு ஆண்டு சிறை தண்டனை.
- திட்டமிட்ட குற்றங்கள், பயங்கரவாத நடவடிக்கைகளை தடுக்கும் நோக்கில் புதிய தண்டனை சட்டங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.
- புதிய சட்டங்களிலும் உச்சபட்ச தண்டனையான மரண தண்டனை தக்க வைக்கப்பட்டு உள்ளது.
- கூட்டு பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும்.
- 18 வயதுக்கு குறைவான சிறுமிகளை பலாத்காரம் செய்யும் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனை வழங்கப்படும்.

- கொலை குற்றங்களில் ஈடுபடுவோருக்கு ஆயுள் தண்டனை முதல் அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்கப்படும்.
- பாலியல் பலாத்காரம் செய்த பின் பெண் இறந்துவிட்டால் அதிகபட்சமாக மரண தண்டனை வழங்கப்படும்.
- போலீஸ் அதிகாரியோ, அரசு ஊழியரோ, ராணுவ வீரரோ பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டால் 10 ஆண்டுகளுக்கு குறையாமல் சிறை தண்டனை வழங்கப்படும். அதிகபட்சம் ஆயுள் தண்டனை கிடைக்கும்.
- அடையாளத்தை மறைத்தோ, அல்லது திருமணம் செய்வதாக கூறியோ, வேலை தருவதாகவோ, பதவி உயர்வு தருவதாகவோ போலி வாக்குறுதிகளை கொடுத்தோ பெண்ணிடம் பாலியல் உறவு வைத்து ஏமாற்றினால் அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும்.
-
பெரிய சிக்கலில் இந்தியா! 1970ல் நடந்தது போல.. இப்போதும் நடக்கப்போகுது! வெளியான ஷாக் தகவல்! -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
ரெடியா இருங்க மக்களே! சட்டுன்னு ஏறப்போகும் பெட்ரோல், டீசல் விலை! தேதி குறிச்சாச்சு! -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
கங்கணம் கட்டிக்கொண்டு வேலை.. மொத்த தமிழக பாஜகவும் ஸ்டன் ஆகி நிற்குதே.. யாருங்க இந்த த பா ஜி? -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும்












Click it and Unblock the Notifications