"தார்" காரை பானிபூரி விற்க பயன்படுத்திய பெண்.. டக்கெனெ ஆனந்த் மகிந்திரா கொடுத்த ரியாக்ஷனை பாருங்க
டெல்லி: பானி பூரி விற்பனை செய்யும் டெல்லியை சேர்ந்த பெண் தனது சிறிய தள்ளுவண்டியை தார் காரில் கட்டி இழுத்துவரும் வீடியோவை ஆனந்த் மகிந்திரா பகிர்ந்து இருக்கிறார். இந்த வீடியோவிற்கு ஆனந்த் மகிந்திரா பகிர்ந்து இருக்கும் கேப்ஷனும் நெட்டிசன்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது.
இந்தியாவில் வாகன உற்பத்தி முதல் ஐடி துறை வரை ஆதிக்கம் செலுத்தி வரும் நிறுவனங்களில் ஒன்று மகிந்திரா. இந்த நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மகிந்திரா சமூக வலைத்தளங்களிலும் படு ஆக்டிவாக இயங்கக் கூடியவர். தனது எக்ஸ் தளத்தில் தான் அறிந்த விஷயங்கள், தான் கண்டு கேட்டு பார்த்து ரசித்த வீடியோக்கள், நகைச்சுவை துணுக்குகள், அசாத்திய சாதனைகளை செய்யும் நபர்கள் குறித்த பதிவுகள் என தனது எக்ஸ் தளத்தில் அடிக்கடி பகிர்ந்து தனது கருத்துக்களை பதிவிட்டு வருவார்.

பல நேரங்களிலும் நகைச்சுவையாக கூட ஆனந்த் மகிந்திரா தனது சமூக வலைத்தளத்தில் பதிவிடுவதை காண முடியும். எக்ஸ் தளத்தில் 10 மில்லியனுக்கும் மேற்பட்ட பாலோயர்களை கொண்டுள்ள ஆனந்த் மகிந்திராவின் பதிவுகள் பலவும் இணையத்தில் வைரலாகி வருவதை காண முடியும். நெட்டிசன்கள் பலரும் ஆனந்த் மகிந்திராவின் பதிவுக்கு கமெண்ட் அடித்து வைரலாக்கி விடுவார்கள்.
ஆனந்த் மகிந்திரா ட்வீட்: இப்படி ஆனந்த மகிந்திராவின் பதிவுகள் நெட்டிசன்கள் மத்தியில் தனிக் கவனம் பெறும். இந்தநிலையில், ஆனந்த் மகிந்திரா தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்து இருக்கும் வீடியோ ஒன்று வைரல் ஹிட் அடித்துள்ளது. இந்த வீடியோவில் அப்படி என்னதான் இருக்கிறது என்றால்.. மகிந்திரா நிறுவனத்தின் பிரபலமான காரான தார் மாடல் காரில் பெண் ஒருவர் பானி பூரி விற்கும் சிறிய இழுவை வண்டியை வைத்து கட்டி இழுத்து செல்லும் வீடியோவை பகிர்ந்துள்ளார்.
இந்த வீடியோவை பகிர்ந்து ஆனந்த் மகிந்திரா வெளியிட்டுள்ள பதிவில், ஆஃப் ரோடு வாகனம் என்றால் போக முடியாத இடங்களுக்கு கூட மக்கள் செல்ல உதவும் வாகனம் என எடுத்துக்கொள்ளலாம். சாத்தியம் இல்லாததை கூட செய்வதற்கும் உதவுவதான். அந்த வகையில், மக்கள் வாழ்க்கையில் உயரவும் தங்கள் கனவுகளை நனவாக்கவும் எங்கள் கார்கள் உதவ வேண்டும் என நாங்கள் நம்புகிறோம்.

நெட்டிசன்ஸ் கருத்து: நான் இந்த வீடியோவை அதிகம் விரும்புகிறேன் என்று தற்போது நீங்கள் அறிந்து இருப்பீர்கள்" என்று பதிவிட்டுள்ளார். ஆனந்த் மகிந்திராவின் இந்த பதிவு இணையத்தில் நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இந்த வீடியோ சில மணி நேரங்களில் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்களை கடந்து வைரலாகி வருகிறது.
நெட்டிசன்கள் பலரும் தங்களின், தார் காரை வைத்து பானிபூரி விற்பனை செய்வதை வைத்து ஜாலியாக பதிவிட்டு வருகிறார்கள். காரை புட் பார்க் போல பயன்படுத்துவது அதிக செலவு பிடிக்கும் என்றும் இதற்கு பதிலாக அந்த பெண் வேறு வழியை நாடலாம் என்றும் அட்வைஸும் செய்து பதிவிட்டு வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications