மொத்தம் 4 சவால்.. ஒரே நாடு ஒரே தேர்தலை அமலாக்க என்ன செய்ய வேண்டும்? ராம்நாத் கோவிந்த் வைத்த ‛செக்’
டெல்லி: ‛ஒரே நாடு ஒரே தேர்தல்' நாடாளுமன்றம், சட்டசபை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் உயர்மட்ட குழு அமைத்துள்ளது. இந்த குழு சார்பில் ‛ஒரே நாடு ஒரே தேர்தல்' நடத்தும் விவகாரத்தில் மொத்தம் 4 பெரிய சிக்கல்கள் இருப்பதாக சுட்டிக்காட்டி உள்ளது. அதில் கடைசியில் கூறியுள்ள சிக்கல் என்பது மத்திய அரசுக்கு பெரும் தலைவலியை உருவாக்கி உள்ளது.
நம் நாட்டில் தற்போது நாடாளுமன்ற தேர்தல், சட்டசபை தேர்தல், உள்ளாட்சி தேர்தல் தனித்தனியே நடந்து வருகிறது. இந்நிலையில் தான் 3 வகையான தேர்தல்களையும் ஒன்றாக கொண்டு வர மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. ‛ஒரே நாடு ஒரே தேர்தல்' என்ற முறையில் நாடாளுமன்ற தேர்தல், அனைத்து மாநில சட்டசபை தேர்தல் மற்றும் அனைத்து மாநில உள்ளாட்சி தேர்தல்களை நடத்த திட்டமிட்டுள்ளது.

இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஒரே நாடு ஒரே தேர்தல் கொண்டு வருவதில் பல நடைமுறை சிக்கல்கள் உள்ளன. இதனால் மத்திய அரசு இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என தொடர்ந்து எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்து வருகின்றன. ஆனால் மத்திய அரசு தனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது. 2029ல் ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனை மனதில் வைத்து தான் பிரதமர் மோடியின் கடந்த ஆட்சிக்காலத்தில் ஒரே நாடு ஒரே தேர்தலை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சிக்கல்கள் பற்றிய ஆராய்ந்து பரிந்துரைகளை வழங்க முந்தைய அரசின் இறுதி காலத்தில் 8 பேர் கொண்ட குழுவை மத்திய அரசு அமைத்தது. இந்த குழுவின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உள்ளார். குழுவில் மத்திய அமைச்சர் அமித் அஷா, காங்கிரஸ் எம்பியும், லோக்சபா மாஜி காங்கிரஸ் குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, குலாம் நபி ஆசாத், என்கே சிங், சுபாஷ் சி. காஷ்யப், ஹரிஷ் சால்வே, சஞ்சய் கோதாரி உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்தனர்.
இந்த குழுவின் அறிக்கை மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதில் நாடாளுமன்ற தேர்தல், சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தலாம் என்று பரிந்துரை செய்தது. அதேபால் அடுத்த 100 நாட்களில் உள்ளாட்சி தேர்தல்களை நடத்தி முடிக்கலாம் என்று பரிந்துரைகளை வழங்கி உள்ளது. மேலும் ஒரே நாடு ஒரே தேர்தலை கொண்டு வரும் நடைமுறையில் உள்ள 4 பெரிய சவால்களை ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு கண்டுபிடித்து மத்திய அரசிடம் அதனை தெரிவித்துள்ளது. இந்த 4 சவால்கள் என்ன? என்பது பற்றிய விபரம் தற்போது வெளியாகி உள்ளது.
முதல் சவால்: ஒரே நேரத்தில் நாடு முழுவதும் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றால் சில மாநிலங்களில் இருக்கும் ஆட்சியை முன்கூட்டியே கலைக்க வேண்டும். இதனை மேற்கொள்ள வேண்டும் என்றால் அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பில் மாற்றம் செய்ய வேண்டும். அதாவது அரசியலமைப்பில் உள்ள நாடாளுமன்றம் மற்றும் சட்டசபை களுக்கான நிலையான விதிமுறைகளில் திருத்தம் செய்ய வேண்டும்.
தற்போது அரசியலமைப்பு சட்டத்தின் ஆர்ட்டிக்கிள் 83 மற்றும் 172ல் அரசின் பதவிக்காலம் என்பது 5 ஆண்டுகள் என்று வரையறைக்கப்பட்டுள்ளது. இப்படி 5 ஆண்டு என்று இருப்பதை மாற்றம் செய்ய வேண்டும் அல்லது குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் என்று திருத்தம் செய்ய வேண்டும். இந்த திருத்தத்தை நாடாளுமன்றம் மூலம் மேற்கொள்ள அரசிலமைப்பு சட்டத்தின் ஆர்ட்டிக்கிள் 368 மத்திய அரசு அனுமதி வழங்குகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது முதல் சவாலாக உள்ளது.
2வது சவால்: ஒரே நாடு ஒரே தேர்தலை அமல்படுத்தும்போது சட்ட சவால் மற்றும் அரசிலமைப்பு மற்றும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951-ல் திருத்தம் செய்ய வேண்டும். இந்த திருத்தத்துக்கு சட்டசபையின் பதவிக்காலம் பற்றிய தொடர்பாக சட்ட பிரச்சனையை எதிர்கொள்ளலாம். ஏனென்றால் இது சட்டசபையின் நிலையான காலஅளவை மாற்றுவதற்கு திருத்தங்கள் தேவையானதாக உள்ளது. இதனால் நாடாளுமன்றம், சட்டசபை தேர்தல்களுடன் உள்ளாட்சி தேர்தல்களை நடத்துவது தொடர்பாக புதிதாக ஆர்ட்டிக்கிள் 324ஏ என்ற பிரிவை உருவாக்க வேண்டும். அதில் ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான அம்சங்களை குறிப்பிட வேண்டும்.
அதேபோல் ஒற்றை வாக்காளர் பட்டியல் மற்றும் புகைப்படத்துடன் கூடிய ஒற்றை வாக்காளர் அடையாள அட்டையை செயல்படுத்தும் வகையில் சட்டப்பிரிவு 325ல் திருத்தம் மேற்கொள்ள வேண்டும். இந்த திருத்தங்கள் அரசியலமைப்பு அட்டவணையின் பிரிவு 7, பிரிவு 9 மற்றும் 9 ஏ ஆகிய பிரிவுகளுடன் தொடர்புடையது. இதனால் அரசியலமபை்பின் 368(2)வது பிரிவின் கீழ் மாநில அரசுகளின் ஒப்புதலை பெற வேண்டும். இது உள்ளாட்சி, சட்டசபை, நாடாளுமன்ற தேர்தலை ஒன்றாக நடத்துவதற்கு மட்டும்தான். ஆனால் சட்டசபை, நாடாளுமன்ற தேர்தலை ஒரே நேரத்தில் நடத்த மாநிலங்களின் அனுமதி என்பது தேவையில்லை என ராம்நாத் கோவிந்த் பரிந்துரையில் கூறப்பட்டுள்ளது.
3வது சவால்: நாடாளுமன்றம் மற்றும் சட்டசபை தேர்தலின்போது தொங்கு சட்டசபை உருவாகலாம். யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில் தொங்கு நாடாளுமன்றம், சட்டசபை உருவாகும். தொங்கு சட்டசபை, நாடாளுமன்றத்தின்போது ஆட்சிக்காலம் முடியும் முன்பே ஒரு அரசு கவிழலாம். இது சவாலை ஏற்படுத்தலாம். அப்படி ஆட்சி கவிழும் பட்சத்தில் அந்த மாநிலங்களுக்கு புதிய தேர்தல் நடத்தலாம் என பரிந்துரை செய்துள்ளது.
4வது சவால்: மேற்கூறிய திருத்தங்களை மேற்கொள்ள லோக்சபாவில் மத்திய அரசுக்கு 3ல் 2 பங்கு எம்பிக்களின் ஆதரவு தேவை என்று சில நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால் தற்போது லோக்சபாவில் அப்படியான சூழல் இல்லை. இதனால் இந்த திருத்தங்களை மேற்கொள்ள மத்திய அரசுக்கு கூட்டணியில் இல்லாத பிற கட்சி எம்பிக்களின் ஆதரவு என்பது தேவையாக உள்ளது. அப்படி பார்த்தால் தற்போது இந்த 4 விஷயம் என்பது மத்திய அரசுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. ஏனெ்றால் ஒரே நாடு ஒரே தேர்தலை இந்தியா கூட்டணியில் உள்ள அரசியல் கட்சிகள் விரும்பவில்லை. அவர்கள் கண்டிப்பாக மத்திய அரசுக்கு ஆதரவு தெரிவிக்கமாட்டார்கள். இதனால் ஒரே நாடு ஒரே தேர்தலை கொண்டு வருவதில் மத்திய அரசுக்கு பெரும் தலைவலி ஏற்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications