வருது வருது "சாதாரண் வந்தே பாரத்".. இதுல ஸ்லீப்பர் + ஏஸி கோச் இருக்கா.. வந்தே பாரத் அடுத்தடுத்த மாஸ்
டெல்லி: வந்தே பாரத் ரயில் குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.. இது பொதுமக்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை தந்து வருகிறது.
இந்தியாவில் ரயில்வே துறையானது, பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டபடியே உள்ளது.. ரயில்வே துறையை நவீனமயமாக்க பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.

எக்ஸ்பிரஸ் ரயில்களைபோல சதாப்தி, ராஜ்தானி போன்ற சொகுசு ரயில்கள் சில வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், விமானத்திற்கு நிகரான சொகுசு வசதிகளுடன் அதிவேக ரயிலாக வந்தே பாரத் ரயிலை ரயில்வே தற்போது நாடு முழுவதும் இயக்க தொடங்கியுள்ளது.
மோடியின் கனவு திட்டம்: தமிழகத்திலும் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. நாட்டின் பல நகரங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டாலும், சில வழித்தடங்களில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை குறைவாகவே இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக, சமீபத்திய ஆய்வில் வந்தே பாரத் ரயில்களில் அதிகளவு கட்டணம் வசூலிக்கப்படுவதாக கூறப்பட்டு வருகிறது.. வந்தே பாரத் ரயில்களில் பெரும்பாலான சீட்கள் நிரம்பிவிடுகின்றன.. ஆனால், சில ரயில்களில் எண்ணிக்கை குறைவாக காணப்படுகிறது.
கட்டணம் அதிகம்: எனவே, பயணிகள் எண்ணிக்கை குறைவாக உள்ள ரயில்களில் கட்டணத்தை குறைக்க ரயில்வே பரிசீலித்து வருவதாக தெரிகிறது. ஒருவேளை, கட்டணத்தை குறைத்தால், கூடுதல் பயணியர் வந்தே பாரத் ரயில்களை விரும்புவர் என்றும் நம்பப்படுகிறது.
எனினும், குறுகிய தூரம் செல்லும் ரயில்களின் கட்டணத்தை மறு ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் தமிழ்நாடு குறித்த பயண சேவை கட்டணமும் பரிசீலிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் கடந்த வாரம் வெளியாகியிருந்தது.
சாதாரண் ரயில்: இப்படிப்பட்ட சூழலில் வந்தே பாரத் சாதாரண் ரயில் சேவை கொண்டுவரப்படும் என்றார்கள்.. வந்தே பாரத் சாதாரண் ரயில் என்பது, சாதாரண மக்கள் பயணிக்கும் வந்தே பாரத் ரயில் ஆகும்.. இதில் ஏசி இல்லாமல், மொத்தம் 24 கோச்சுகள் இருக்கும்.. ஆனால், தற்போதுள்ள வந்தே பாரத் ரயிலில் உள்ளதை போலவே, எல்லா வசதிகளும் இதில் இருக்கும்.. புக்கிங் செய்தால் மட்டுமே பயணம் மேற்கொள்ளப்படும்.. கட்டணமும் குறைவாக இருக்கும்.
இப்போதுள்ள வந்தே பாரத் ரயிலை அனைவருமே பயன்படுத்த முடியாத சூழலில், இந்த சாதாரண் வந்தே பாரத் வந்தால், பயணிகளுக்கு பேருதவியாக இருக்கும் என்றும் நம்பப்பட்டு வருகிறது.
வந்தே சாதாரண்: இந்நிலையில், ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இந்த சாதாரண் வந்தே பாரத் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதன்படி, இப்போதுள்ள வந்தே பாரத் ரயிலில் சில மாற்றங்களை செய்து, சாதாரண வந்தே பாரத் அல்லது "அந்த்யோதயா வந்தே பாரத்" என்ற பெயரில் இயக்க வேண்டும் என்று அறிவுறுத்தியிருக்கிறார்.
இதுகுறித்து, ரயில்வே அதிகாரிகள் சொல்லும்போது, இந்த வகை வந்தே பாரத் ரயிலில், இன்ஜின்கள் 2 பக்கமும் பொருத்தப்படும். மேற்கு வங்கத்தில் உள்ள சித்தரஞ்சன் ஆலையில், இதற்கான இன்ஜின்கள் பிரத்யேகமாக தயாரிக்கப்படும். இந்த ரயிலில், 8 முன்பதிவு இல்லாத பெட்டிகளும், "ஸ்லீப்பர்" எனப்படும், "ஏசி" இல்லாத 12 முன்பதிவு பெட்டிகளும் இடம் பெறும்..
அதிரடிகள்: இவை எல்லாமே அனைத்தும் எல்எச்பி பெட்டிகளாக இருக்கும். இந்த வகை வந்தே பாரத் ரயில், இந்த வருடம் இறுதிக்குள் கொண்டு வரப்படும். இதற்கான, இறுதிகட்ட வடிவமைப்பு பணி வேகமாக நடந்து வருகிறது என்றார்கள். இதையடுத்து, வந்தே பாரத் ரயில் அடுத்தக்கட்ட அதிரடிக்குள் நுழைய உள்ளது..!!!












Click it and Unblock the Notifications