மோடி 3.0.. பிரதமர் தன் வசம் வைத்துள்ள துறைகள் என்ன! ஆஹா இது முக்கியம் ஆச்சே.. நோட் பண்ணுங்க
டெல்லி: மோடி 3.0 அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களுக்கு எந்த துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இப்போது வெளியாகியுள்ளது. அதில் பிரதமர் மோடி தனது வசமே சில முக்கிய துறைகளை வைத்துக் கொண்டு இருக்கிறார். இது குறித்து நாம் பார்க்கலாம்.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. 240 சீட்களில் வென்ற பாஜக என்டிஏ கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியை அமைத்துள்ளது.

நரேந்திர மோடி மூன்றாவது முறையாகப் பிரதமராகப் பதவியேற்றார். அவருடன் சேர்த்து மற்ற கேபினட் அமைச்சர்கள், இணை அமைச்சர்கள் என மொத்தம் 72 பேர் பதவியேற்றனர்.
புதிய அமைச்சர்கள்: வழக்கமாக அமைச்சர்கள் பதவியேற்ற கொஞ்ச நேரத்திலேயே யாருக்கு எந்த துறைகள் ஒதுக்கப்படுகிறது என்பது குறித்த தகவல்கள் வெளியாகும். அதன்படி நேற்றிரவே எந்த அமைச்சருக்கு எந்த இலாகா என்பது குறித்த தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், நேற்று இது தொடர்பாக எந்தவொரு அறிவிப்பும் வெளியாகவில்லை.
இதற்கிடையே இன்று மாலை பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. பிரதமர் இல்லத்தில் நடைபெற்ற இந்த அமைச்சரவை கூட்டத்தில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கிராம மற்றும் நகர்ப்புறங்களில் 3 கோடி வீடுகளைக் கட்ட நிதி ஒதுக்கீடு செய்வது குறித்த முடிவு எடுக்கப்படதாக அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து எந்த அமைச்சருக்கு எந்த துறை என்பது குறித்த அறிவிப்பு வெளியானது.
மாற்றம் இல்லை: நாட்டின் முக்கியமான 4 துறைகளுக்கான பாதுகாப்பு, உள்துறை, நிதித்துறை, வெளியுறவுத் துறை அமைச்சர்கள் எந்தவொரு மாற்றமும் இல்லாமல் தொடர்கிறார்கள். பாதுகாப்புத் துறை அமைச்சராக ராஜ்நாத் சிங், உள்துறை- அமித்ஷா, நிதித்துறை- நிர்மலா சீதாராமன், வெளியுறவுத் துறை- ஜெய்சங்கர் ஆகியோர் அமைச்சர்களாகத் தொடர்கின்றனர். அதேபோல மூத்த அமைச்சர் நிதின் கட்கரி சாலை போக்குவரத்துறை துறை அமைச்சராகவே தொடர்கிறார். இதுபோல முக்கிய துறைகளுக்கான அமைச்சர்கள் மாற்றப்படவில்லை.
புதிய அமைச்சர்கள்: அதேநேரம் முதல்முறையாக அமைச்சரவையில் சேர்க்கப்பட்ட பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு சுகாதாரம், ரசாயனங்கள் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வரான சிவ்ராஜ் சிங் சவுஹானுக்கு வேளாண், ஊரக வளர்ச்சித் துறையும், மனோகர் லால் கட்டாருக்கு மின்சாரம், வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சித் துறையும் தர்மேந்திர பிரதானுக்கு கல்வித்துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது.
30 கேபினட் அமைச்சர்கள், தனி பொறுப்புடன் கூடிய 5 அமைச்சர்கள், 36 இணை அமைச்சர்கள் நேற்று பதவியேற்ற நிலையில், அவர்களுக்கு எந்த துறை ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் குடியரசுத் தலைவர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.
பிரதமர் மோடி: அதேநேரம் பிரதமர் நரேந்திர மோடியும் தனது வசம் சில முக்கிய துறைகளை வைத்துக் கொண்டு இருக்கிறார். குறிப்பாக பணியாளர்கள், பொதுமக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதியங்கள் துறையைப் பிரதமர் மோடி தன்வசம் வைத்துக் கொண்டுள்ளார். அதேபோல அணுசக்தித் துறை மற்றும் விண்வெளி துறை ஆகிய இரு முக்கிய துறைகளையும் அவரே தன்வசம் வைத்துள்ளார். இது தவிர மற்ற அமைச்சர்களுக்கு ஒதுக்கப்படாத துறைகளையும் பிரதமர் மோடியே கவனிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications