பான் கார்டு வைத்திருப்பவர்களுக்கு புதிய சிக்கல்.. ஏப்ரல் 1 முதல் மாறும் விதிமுறை.. தப்பிக்க ஒரே வழி
டெல்லி: மத்திய அரசு "வரைவு வருமான வரி விதிகள்" குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நிதி பரிவர்த்தனைகளில் பான் (PAN) எண் கட்டாயமாக்கப்படும் வகையில் இதில் குறிப்பிடத்தகுந்த மாற்றங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. பான் எண் சமர்ப்பிப்பது அவசியமான சில பரிவர்த்தனைகளுக்கான வரம்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் இது அமலுக்கு வரும் நிலையில், இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்!
மத்திய அரசு புதிய வரைவு வருமான வரி விதிகளை வெளியிட்டுள்ளது. மோசடிகளைத் தடுக்க நிதி பரிவர்த்தனைகளில் பான் எண் சமர்ப்பிப்பது கட்டாயம் என இருந்தது. அந்த விதிகளில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, பான் எண் சமர்ப்பிப்பதற்கான வரம்புகள் உயர்த்தப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் இவை நடைமுறைக்கு வரும்.

அதிகரிக்கும் வரம்புகள்
அதன்படி அசையாச் சொத்து வாங்குதல் அல்லது விற்பது தொடர்பான பரிவர்த்தனைகளுக்கு முன்பு ரூ.10 லட்சம் என்ற வரம்பை ரூ.20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் வங்கி, கூட்டுறவு வங்கி அல்லது தபால் அலுவலகங்களில் பணம் டெபாசிட் செய்யும் போது, ஒரு நிதி ஆண்டில் ரூ.50,000க்கு மேல் டெபாசிட் செய்தால் பான் சமர்ப்பிக்க வேண்டும் என்று இருந்தது இப்போது ரூ.10 லட்சம் அல்லது அதற்கும் மேல் என்ற திருத்தப்பட்டுள்ளது.
மேலும், ஒரு நபர் ஒரு நிதி ஆண்டில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கணக்குகளிலிருந்து மொத்தம் ரூ.10 லட்சம் அல்லது அதற்கும் மேற்பட்ட தொகையை ரொக்கமாக எடுத்தால், பான் எண் கட்டாயம் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று இந்திய ரிசர்வ் வங்கி பரிந்துரைத்துள்ளதாக வரைவு விதிகள் தெரிவிக்கின்றன. இது ரொக்கப் பரிவர்த்தனைகளில் தீவிரக் கண்காணிப்பை உறுதிப்படுத்தும்.
ஏப்ரல் 1 முதல்
இப்போது வரைவு விதிகளாகவே இவை வெளியிடப்பட்டுள்ளன. இந்த விதிகள் குறித்து பொதுமக்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்கலாம். பிப்ரவரி 22ம் தேதி வரை மக்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்கலாம். கருத்துக்களைப் பெற்ற பிறகு, திருத்தப்பட்ட விதிகள் பின்னர் அறிவிக்கப்படும். அவை ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வரும்.
5 முக்கிய மாற்றங்கள்
1. ரொக்க டெபாசிட்: முன்பு, ஒரு தனி வங்கிக் கணக்கில் ஒரு நாளில் ரூ.50,000க்கு மேல் ரொக்கமாக டெபாசிட் செய்ய பான் எண் தேவைப்பட்டது. தற்போது, இது ஒரு நிதி ஆண்டில் பல்வேறு வங்கிக் கணக்குகளில் மொத்தமாக ரூ.10 லட்சம் வரையிலான ரொக்க டெபாசிட்களுக்கு பான் தேவையில்லை என முன்மொழியப்பட்டுள்ளது. அதேபோல ஒரே நிதியாண்டில் ரூ.10 லட்சம் வரை பணம் எடுக்கவும் இந்த வரம்பு பொருந்தும்!
2. மோட்டார் வாகனங்கள்: தற்போதுள்ள விதிகளின்படி, மோட்டார் சைக்கிள்களைத் தவிர்த்த அனைத்து வகையான மோட்டார் வாகனங்களை வாங்கும்போதும் பான் எண் குறிப்பிடுவது அவசியமாக இருந்தது. ஆனால், தற்போது ரூ.5 லட்சத்திற்கும் அதிகமான மதிப்புள்ள மோட்டார் வாகனங்கள் அல்லது மோட்டார் சைக்கிள்கள் வாங்குவதற்கும் மட்டுமே பான் எண் தேவை என்ற விதி முன்மொழியப்பட்டுள்ளது.
தளர்வுகள்
3. ஹோட்டல்/உணவக பில்கள்: தற்போது, ஹோட்டல் மற்றும் உணவகங்களுக்கான ரூ.50,000க்கும் அதிகமான உணவு பில்களுக்கு பான் எண் கட்டாயமாகிறது. இந்த வரம்பு ரூ.1 லட்சம் என உயர்த்தப்பட முன்மொழியப்பட்டுள்ளது. இது பொது மக்களின் அன்றாடச் செலவில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும்.
4. அசையாச் சொத்துகள்: தற்போதுள்ள விதிகளின்படி, ரூ.10 லட்சத்திற்கும் அதிகமான அசையாச் சொத்து பரிவர்த்தனைகளுக்கு பான் எண் குறிப்பிடுவது அவசியம். இது ரூ.20 லட்சமாக உயர்த்த முன்மொழியப்பட்டுள்ளது. இது ரியல் எஸ்டேட் துறைக்கு ஒரு முக்கியமான மாற்றமாகும்.
5. காப்பீட்டு பாலிசி: தற்போது காப்பீட்டு பிரீமியம் ரூ.50,000ஐ தாண்டினால் பான் எண் தேவை என்ற விதி உள்ளது. இந்த வரம்பும் கூட அதிகரிக்கப்பட உள்ளது. இது காப்பீட்டுத் துறையில் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தும்.
-
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்!












Click it and Unblock the Notifications