"15 கிலோ தங்கம், 18000 மரகதங்கள், வைரங்கள்.." ஜொலிக்கும் அழகிய ராமர் சிலைக்கு போடப்பட்ட நகைகள் என்ன
டெல்லி: அயோத்தி ராமர் கோயில் பிரதிஷ்டை விழா நேற்று நடந்த நிலையில், ராமர் சிலைக்கு அணிவிக்கப்பட்டுள்ள நகைகள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
அயோத்தி ராமர் கோயிலில் நேற்று பிரதிஷ்டை விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் ராமர் சிலை அயோத்தியில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

அயோத்தியில் உள்ள ராமர் கோயிலில், ராமரை ஐந்து வயதுக் குழந்தையாகச் சித்தரிக்கும் சிலை இடம்பெற்றுள்ளது. அந்த சிலை ராமரின் தெய்வீக நிலையைப் பிரதிபலிக்கும் அற்புதமான நகைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. ராமருக்கான நகைகள் செய்வதற்குக் குறைந்தது 15 கிலோ தங்கம் மற்றும் 18,000 வைரங்கள் மற்றும் மரகதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நகைகள்: அத்யாத்மா ராமாயணம், வால்மீகி உள்ளிட்ட புனித நூல்களில் இருப்பதைப் போலவே நகைகளை வடிவமைத்துள்ளன. அந்த புனித நூல்களில் குறிப்பிடப்பட்டு இருந்த நகைகளை இந்த கலைஞர்கள் அப்படியே வடிவமைத்துள்ளனர்.
திலகம், கிரீடம், நான்கு நெக்லஸ்கள, காலுக்கு அணியும் நகைகள், இரண்டு மோதிரங்கள் என மொத்தம் 14 நகைகள் ராமருக்காக உருவாக்கப்பட்டன. இவை அனைத்தும் வெறும் 12 நாட்களில் செய்து முடிக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர். குழந்தை ராமருக்கு நகைகள் தயாரிக்கும் பொறுப்பு லக்னோவில் உள்ள ஹர்சஹய்மல் ஷியாம்லால் ஜூவல்லர்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. 15 நாட்களுக்கு முன்பே இவர்கள் நகைகளை ஒப்படைத்துவிட்டனர்.

கிரீடம்: எந்தவொரு கடவுள் சிலைக்கும் கிரீடம் தான் முக்கியம், சிலையின் அழகைக் கூட்டுவது இந்த கிரீடம் தான். இந்த கிரீடத்தில் பல முக்கிய , விவரங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த கிரீடம் ஐந்து வயது சிறுவனின் தலைப்பாகையைப் போலவே இருக்கிறது. தங்களுக்குக் கிரீடம் இப்படிதான் இருக்க வேண்டும் என்று ராமர் கோயில் அறக்கட்டளை கேட்டே வாங்கியுள்ளது.
இந்த கிரீடம் 22 காரட் தங்கத்தில் வடிவமைக்கப்பட்ட வடிவமைக்கப்பட்டுள்ளது. 1.7 கிலோ எடையுள்ள இந்த கிரீடம் 75 காரட் வைரங்கள், 175 காரட் ஜாம்பியன் மரகதங்கள் மற்றும் 262 காரட் மாணிக்கங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ராமரின் சூர்யவன்ஷி பரம்பரையைக் குறிக்கும் சூரிய பகவானின் சின்னத்தையும் கொண்டுள்ளது. தூய்மையைக் குறிக்க வைரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
திலகம் மற்றும் மோதிரம்: அடுத்து நெற்றியில் உள்ள திலகம்.. 16 கிராம் தங்கத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட இந்த திலகத்தில் மூன்று காரட் வைரம்.. இருபுறமும் 10 காரட் வைரங்களும் உள்ளன. இதில் உள்ள பர்மிய ரூபி அதன் அழகை மேலும் கூட்டுகிறது.
கடைசியாக 65 கிராம் எடையுள்ள ஒரு மரகத மோதிரம் ராமருக்கான நகைகளை நிறைவு செய்கிறது. நான்கு காரட் வைரங்கள், 33 காரட் மரகதம் மற்றும் ஒரு ஜாம்பியன் மரகதம் ஆகியவற்றைக் கொண்டு இந்த மரகத மோதிரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அயோத்தி ராமர் கோயிலில் நேற்று திங்கள்கிழமை 51 அங்குல குழந்தை வடிவிலான ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த இந்த நிகழ்வில் பல முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர். இதை முன்னிட்டு அயோத்தியில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. மேலும், நாடு உள்ள பல கோடி பேர் இந்த பிரதிஷ்டை நிகழ்வை நேரடியாகப் பார்க்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications