அயோத்தி வழக்கு.. உச்சநீதிமன்ற தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் இவைதான்!
Recommended Video
டெல்லி: அயோத்தி வழக்கில் 5 நீதிபதிகளும் ஒருமித்த தீர்ப்பை வழங்கியுள்ளனர். அதில் முஸ்லிம்கள் தங்களுக்கே இடம் சொந்தமானது என்பதற்கான ஆதாரத்தை நிரூபிக்கவில்லை என கூறிய உச்சநீதிமன்றம் அவர்களது மனுக்களை ரத்து செய்தது.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் இடம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக பிரச்சினை நீடித்து வந்தது. இந்த நிலையில் இன்றைய தினம் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் எஸ் ஏ பாப்டே, டி ஒய் சந்திரசூட், அசோக் பூஷன், எஸ் ஏ நசீர் ஆகியோர் தீர்ப்பை வழங்கினர்.

இதையொட்டி இந்தியா முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் தீர்ப்பின் நகலை ரஞ்சன் கோகாய் வாசிப்பதற்கு முன்னர் தீர்ப்பை அனைத்து தரப்பினரும் ஏற்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
இதைத் தொடர்ந்து 30 நிமிடங்கள் தீர்ப்பை வாசித்தார். அவர் கூறுகையில் முஸ்லீம் அமைப்புகள் சர்ச்சைக்குரிய இடம் தங்களுக்கு சொந்தமானது என்பதை நிரூபிக்க தவறிவிட்டது. எனவே இந்த இடம் ராமர் ஜென்ம பூமிக்கே சொந்தம் என்றார்.
இந்த தீர்ப்பில் ரஞ்சன்கோகாய் முன் வைத்த முக்கிய அம்சங்கள் குறித்து பார்ப்போம்:
- ஒரு பிரிவினரின் நம்பிக்கையை மறுபிரிவினர் மறுக்க முடியாது
- மசூதியில் கடந்த 1949-ஆம் ஆண்டு சிலைகள் வைக்கப்பட்டன
- பாபர் மசூதி மிர்பாகியால் கட்டப்பட்டது
- தொல்லியல் துறை ஆதாரங்களை புறக்கணிக்க முடியாது
- தொல்லியல் துறை ஆதாரங்கள் எல்லாம் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவையாக உள்ளன.
- பாபர் மசூதி வெற்றிடத்தில் கட்டப்படவில்லை
- பாபர் மசூதிக்கு கீழ் கண்டறியப்பட்ட கட்டடங்கள் இஸ்லாமியர்களுடையது அல்ல
- சர்ச்சைக்குரிய இடம் தங்களுக்கு சொந்தமானது என்பதை இஸ்லாமிய அமைப்புகள் நிரூபிக்கவில்லை
- நிலத்தின் உரிமை நம்பிக்கையின் அடிப்படையில் உறுதி செய்ய இயலாது
- சர்ச்சைக்குரிய இடம் ராம ஜென்மபூமி நியாஸ் அமைப்புக்கே சொந்தமானது
- இஸ்லாமியர்களுக்கு 5 ஏக்கர் நிலம் வழங்கப்படும்
- அயோத்தியில் இஸ்லாமியர்களுக்கு மாற்று இடம் வழங்கப்படும்
- வஃக்பு வாரியம் ஏற்கும் இடத்தில் 5 ஏக்கர் நிலம் தர மத்திய, உத்தர பிரதேச மாநில அரசுகளுக்கு உத்தரவு
- சர்ச்சைக்குரிய இடத்தில் கோயில் கட்டுவதற்கு அறங்காவலர் குழுவை அமைக்க வேண்டும்
- அயோத்தில் கோவில் கட்ட 3 மாதங்களில் மத்திய அரசு ஒரு திட்டத்தை உருவாக்க வேண்டும்: உச்சநீதிமன்றம்
- சர்ச்சைக்குரிய இடமான அயோத்தியில் ராமர் கோயில் கட்டலாம் என தீர்ப்பு வழங்கினர்.
- ராமர் கோவில் கட்ட மத்திய அரசு அறக்கட்டளை அமைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications