13 மாநில இடைத் தேர்தல் முடிவு: பாஜக vs காங்கிரஸ்.. ஓங்கியது யார் கை? ரிசல்ட் சொல்லும் பாடம்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மத்தியப் பிரதேசத்தில் சிவராஜ் சிங் சவுகான் தனது முதல்வர் பதவியை உறுதிப்படுத்தி, விமர்சனங்களுக்கு முற்றுப் புள்ளி வைத்துள்ளார்.

இமாச்சலப் பிரதேசத்தில் முதல்வர் ஜெய்ராம் தாக்கூரின் நாற்காலி தள்ளாடுகிறது, பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவின் சொந்த மாநிலத்தில் அந்த கட்சிக்கு பெரும் தோல்வி ஏற்பட்டுள்ளது.

மம்தா பானர்ஜி மேற்கு வங்கத்தில் பலம் வாய்ந்த தலைவராக தன்னை மீண்டும் நிலை நிறுத்தியுள்ளார்.

ஹிமந்தா பிஸ்வா சர்மா தன்னை அசாம் முதல்வராக தேர்ந்தெடுத்த பாஜகவின் முடிவு சரியானது என்பதை நிரூபித்துள்ளார். நாடு முழுக்க 13 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில், நடைபெற்று முடிந்த, 3 லோக்சபா மற்றும் 29 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் முடிவுகளிலிருந்து கிடைத்துள்ள பாடம் இவையாகும்.

பாஜக தலைவர் சொந்த மாநிலம்

பாஜக தலைவர் சொந்த மாநிலம்

பா.ஜ.க.விற்கு, இமாச்சல பிரதேச தேர்தல் முடிவுகள் எச்சரிக்கை சமிக்ஞையாக வந்துள்ளது. ஓராண்டில் அங்கு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அங்கு காங்கிரஸ் க்ளீன் ஸ்வீப் செய்துள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் வீரபத்ர சிங்கின் மனைவி பிரதீபா சிங் மண்டி லோக்சபா தொகுதியில் வென்றார். மூன்று சட்டமன்றத் தொகுதிகளையும், காங்கிரஸ் கைப்பற்றியது. பாஜக தலைவர் நட்டாவின் சொந்த மாநிலம் இது என்பதாலும், தேர்தலுக்கு முன்னதாக மக்களிடம் பாஜக அரசு மீது எதிர்ப்பு அலை ஏற்பட்டுள்ளதை உறுதி செய்திருப்பதாலும், ஹிமாச்சல் பிரதேச வெற்றி முக்கியத்துவம் பெறுகிறது.

மத்திய பிரதேசம்

மத்திய பிரதேசம்

மத்தியப் பிரதேசத்தில், சிவராஜ் சிங் சௌஹான் தனது அரசியல் எதிர்காலம் குறித்த அனைத்து ஊகங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளார், பாஜக கந்த்வா மக்களவைத் தொகுதியிலும் மற்றும் மூன்று சட்டமன்ற இடைத்தேர்தல்களில், இரண்டிலும் வெற்றி பெற்றது. உத்தரகாண்ட், கர்நாடகா மற்றும் குஜராத்தில் பாஜகவின் முதல்வர் மாற்றங்கள் அரங்கேறிய நிலையில் மத்திய பிரதேசத்தில் சிவராஜ் சிங் சவுகான் மாற்றப்படுவார் என்று பேச்சு வந்தன. ஆனால் இந்த வெற்றி அந்த பேச்சுக்கு முற்றுப் புள்ளி வைத்துள்ளது. கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ், மத்தியப் பிரதேசத்தில் ஒரு இடத்தைப் பெற்றதாலும், கட்சிகளுக்கு இடையேயான வாக்கு வித்தியாசம் வெறும் 2% மட்டுமே என்பதாலும் காங்கிரஸ் தனது இருப்பை அங்கே காட்டியுள்ளது. 2023 சட்டசபை தேர்தல் சிவராஜ் சிங் சௌஹானுக்கும், கமல்நாத்துக்கும் இடையிலான மற்றொரு பெரும் போட்டியாக மாற வாய்ப்பு உள்ளதை இந்த ரிசல்ட் காட்டுகிறது.

சரியான தேர்வுகள்

சரியான தேர்வுகள்

அசாமுக்கு ஹிமந்தா பிஸ்வா சர்மா மற்றும் ராஜஸ்தானுக்கு அசோக் கெலாட் ஆகியோர் முதல்வர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டது முறையே பாஜக மற்றும் காங்கிரஸ் தலைமையின் சரியான காய் நகர்த்தல் என்பது நிரூபணமாகியுள்ளது. அசாமில் உள்ள ஐந்து சட்டசபை தொகுதிகளையும் பாஜக கூட்டணி கைப்பற்றிய நிலையில், ராஜஸ்தானில் நடந்த இரண்டு இடைத்தேர்தல் தொகுதிகளிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றது. பாஜகவை இரண்டு இடங்களிலும் மூன்றாவது இடத்திற்கு தள்ளியது காங்கிரஸ். ராஜஸ்தானில் பிளவுபட்ட பாஜக, தேர்தலில் வெறும் 19% வாக்குகளை பெற்றது. 2023ல் காங்கிரஸுக்குச் சவால் விடக்கூடிய தலைமை பாஜக கட்சிக்கு இருக்கிறதா என்ற கேள்வியை இந்த ரிசல்ட் எழுப்புகிறது.

மம்தா தலைமை

மம்தா தலைமை

இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு மேற்கு வங்கத்தில் பாஜகவின் சரிவு தொடர்கிறது. பாஜக, நான்கு இடைத்தேர்தல் இடங்களை இழந்தது. மூன்றில் டெபாசிட் இழந்தது, மொத்தத்தில் வெறும் 14.5% வாக்குகளைப் பெற்றது. அதே நேரத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் (TMC) கிட்டத்தட்ட 75% வாக்குகளைப் பெற்றது. ஒரு மாதத்திற்கு முன்பு நடந்த இடைத்தேர்தலில் மம்தா பாபானிபூர் தொகுதியில் வென்றார். பாஜகவிலிருந்து, டிஎம்சிக்கு பல தலைவர்கள் வெளியேறியதில் இருந்து பாஜகவுக்கு சரிவு ஆரம்பித்துள்ளது. 2019 நாடாளுமன்றத் தேர்தலில் மேற்கு வங்கம் மாநிலத்தில் உள்ள 42 மக்களவைத் தொகுதிகளில் 18 இடங்களை வென்றதன் மூலம் கிடைத்த வெற்றியின் முன்னேற்றம் பாஜகவுக்கு தடை பட்டதோடு, சரிய தொடங்கிவிட்டது.

 பீகாரில் காங்கிரஸ் மோசம்

பீகாரில் காங்கிரஸ் மோசம்

பீகாரில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி) மற்றும் காங்கிரஸுக்கு இரண்டு இடங்களிலும் தோல்வி கிடைத்துள்ளது. ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பலத்தை முறியடிக்க எதிர்க் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்பதை இது காட்டுகிறது. பீகார் இடைத்தேர்தலில், குஷேஷ்வர்ஸ்தான் மற்றும் தாராபூர் ஆகிய இரு இடங்களிலும் காங்கிரஸ் நான்காவது இடத்தைதான் பிடித்தது. இரண்டு தொகுதிகளில் பதிவான மொத்த வாக்குகளில் வெறும் 3% மட்டுமே பெற்றது. சிராக் பாஸ்வானின் புதிய கட்சியை விட குறைவான வாக்குகள் மற்றும் நோட்டாவை விட ஒரு சதவீதம் அதிகம் பெற்றுள்ளது காங்கிரஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+