Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆனந்த் அம்பானி கல்யாணம் ஓகே.. இதற்கு முன் நடந்த ஆடம்பர திருமணங்கள் எவை? அதிலும் அம்பானி தான் டாப்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஆனந்த் அம்பானி- ராதிகா திருமணம் இப்போது மிகப் பிரம்மாண்டமாக மும்பையில் நடக்கிறது. இதற்காகப் பல உலக பிரபலங்களும் மும்பைக்கு வந்துள்ளனர். இவர்கள் திருமணத்திற்கு ரூ.5000 கோடி வரை செலவானதாகக் கூறப்படுகிறது. இதேபோல இந்தியாவில் நடந்த ஆடம்பர திருமணங்கள் குறித்து நாம் பார்க்கலாம்.

மும்பையில் ஆனந்த் அம்பானி- ராதிகா திருமண கொண்டாட்டங்கள் கோலாகலமாக நடந்து வருகிறது. இதில் பல சர்வதேச பிரபலங்கள், பாலிவுட் நட்சத்திரங்கள் கலந்து கொள்கிறார்கள்.

Anant Ambani Mukesh Ambani offbeat

அதேநேரம் இதற்கு முன்பு நமது நாட்டில் நடந்த ஆடம்பர திருமணங்கள் எதுவாக இருக்கும் என்று சிலருக்குத் தோன்றி இருக்கும். இது குறித்து நாம் நாம் பார்க்கலாம்.

அம்பானி தான்: ஆனந்த் அம்பானியின் திருமணத்திற்கு முன்பும் காஸ்ட்லி திருமணங்கள் லிஸ்டில் அம்பானி வீட்டுத் திருமணம் தான் முதலிடத்தில் இருந்தது. முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி, ஆனந்த் பிரமாலை திருணம் செய்து கொண்டார். இவர்களது திருமண கொண்டாட்டம் ஒரு வாரத்திற்கு நாட்டின் பல முக்கிய நகரங்களில் நடைபெற்றது. இதற்காக சுமார் ₹700 கோடி ($100 மில்லியன்) செலவானதாகக் கூறப்படுகிறது.. இதிலும் சர்வதேச பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். இவர்களது திருமணம் உதய்பூரில் பிச்சோலா ஏரியில் உள்ள ஒரு தனித் தீவில் நடைபெற்றது.

Anant Ambani Mukesh Ambani offbeat

சஹாரா: அம்பானிக்கு அடுத்து அதிக செலவு செய்து திருமணம் செய்தவர் என்றால் அது சஹாரா குழுமத்தின் முன்னாள் தலைவரான சுப்ரதா ராய் தான். கடந்த 2004ஆம் ஆண்டில், சஹாரா குழுமத்தின் முன்னாள் தலைவரான தொழிலதிபர் சுப்ரதா ராய் தனது மகன்களான சுஷாந்த் ராய் மற்றும் சீமான்டோ ராய்க்கு ஒரே நேரத்தில் திருமணம் நடத்தினார். இதற்காக ₹554 கோடி ($75 மில்லியன்) செலவானதாகக் கூறப்படுகிறது.

Anant Ambani Mukesh Ambani offbeat

உத்தரப் பிரதேச தலைநகர் லக்னோவில் உள்ள சஹாரா ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்த ஆடம்பரமான நிகழ்வில் அரசியல் தலைவர்கள், பாலிவுட் மற்றும் விளையாட்டு நட்சத்திரங்கள் என 11,000 பேர் கலந்து கொண்டனர். ஒரு வாரம் நடந்த இந்த திருமண கொண்டாட்டத்திற்காக உலகம் முழுக்க இருந்து பல பிரபலங்கள் தனியார் ஜெட் விமானங்கள் மூலம் லக்னோவில் குவிந்தனர்.

கலி ஜனார்த்தன ரெட்டி: சுரங்க தொழிலதிபரும் முன்னாள் அரசியல்வாதியுமான கலி ஜனார்த்தன ரெட்டியின் மகளான பிராமணி ரெட்டிக்கும், ராஜீவ் ரெட்டிக்கும் கடந்த 2016இல் திருமணம் நடந்தது. இதற்காக சுமார் ₹500 கோடி ($74 மில்லியன்) செலவானதாகக் கூறப்படுகிறது. மிக ஆடம்பரமாக நடந்த இந்த திருமணம் பலரது கவனத்தையும் ஈர்த்தது. பெங்களூர் அரண்மனையில் ஐந்து நாள் கொண்டாட்டமாக நடந்த இவர்களின் திருமணத்தில் பல பாலிவுட் பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகள் என சுமார் 50,000 பேர் கலந்து கொண்டனர்.

Anant Ambani Mukesh Ambani offbeat

பிரமோத் மிட்டல்: பிரபல ஸ்டீல் தொழிலதிபர் பிரமோத் மிட்டலின் மகள் ஸ்ரீஸ்டி மிட்டல், இன்வெஸ்ட்மெண்ட் பேங்கர் குல்ராஜ் பெஹலை கடந்த 2013இல் திருமணம் செய்து கொண்டார். ஸ்பெயினில் உள்ள பார்சிலோனாவில் நடந்த ஆடம்பர திருமணக் கொண்டாட்டத்திற்கு சுமார் ₹500 கோடி செலவானதாகக் கூறப்படுகிறது. இந்த திருமணத்தில் 500 விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.. விருந்தினர்களுக்குப் பிரபல ஸ்பானிஷ் செலிபிரிட்டி செஃப் செர்கி அரோலா தயார் செய்த உணவு வழங்கப்பட்டது. மேலும், திருமணத்தில் இருந்த 60 கிலோ எடையுள்ள ஆறு அடுக்கு திருமண கேக் பலரது கவனத்தையும் ஈர்த்தது.

Anant Ambani Mukesh Ambani offbeat

திருமண விழா மலை உச்சியில் அமைந்துள்ள தேசிய கற்றலான் கலை அருங்காட்சியகத்தில் நடைபெற்றது. அந்த திருமண விழாவைப் படம்பிடிக்கவே புகைப்படக்காரர்கள் மற்றும் வீடியோகிராபர்கள் ஹெலிகாப்டர்களை பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

லக்ஷ்மி மிட்டல்: 2004இல் பிரபல ஸ்டீல் தொழிலதிபர் லக்ஷ்மி மிட்டலின் மகள் வனிஷா லண்டன் வங்கியாளர் அமித் பாட்டியா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். பாரிஸ் நடந்த ஆறு நாள் திருமண கொண்டாட்டத்திற்கு $55 மில்லியன் (₹240 கோடி) செலவானதாகக் கூறப்படுகிறது. இதில் பிரபல ஆஸ்திரேலிய பாடகி கைலி மினாக் மற்றும் ஷாருக்கான் மற்றும் ஐஸ்வர்யா ராய் பச்சன் போன்ற பாலிவுட் நட்சத்திரங்களின் நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. இவர்களது திருமணம் 17 ஆம் நூற்றாண்டின் சேட்டோ டி வோக்ஸ்-லெ-விகோம்டேயில் நடைபெற்றது.

Anant Ambani Mukesh Ambani offbeat

ஆடம்பர திருமணங்கள்: கடந்த 2017இல் ஸ்டாலியன் குழும நிறுவனர் சுனில் வாஸ்வானியின் மகளான சோனம் வாஸ்வானி, மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் நவின் ஃபேபியானியை திருமணம் செய்து கொண்டார். ஆஸ்திரியாவின் வியன்னாவில் நடந்த ஆடம்பர திருமண விழாவுக்கு சுமார் ₹210 கோடி ($30 மில்லியன்) செலவாகி இருக்கிறது. அங்குள்ள பலாஸ் ஃபெர்ஸ்டெல், பாலைஸ் லிச்சென்ஸ்டைன் பூங்கா மற்றும் பெல்வெடெரே அரண்மனை ஆகியவற்றில் திருமண விழாக்கள் நடைபெற்றன.

Anant Ambani Mukesh Ambani offbeat

விராட் கோலி: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலியும் பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவும் கடந்த 2017 டிசம்பரில் இத்தாலியின் டஸ்கனியில் உள்ள லேக் கோமோவில் திருமணம் செய்துகொண்டனர். இவர்கள் திருமணத்திற்கு சுமார் ₹100 கோடி செலவானதாகக் கூறப்படுகிறது.. இத்தாலியில் திருமணம் நடந்த நிலையில், அதைத் தொடர்ந்து சில நாட்களுக்குப் பிறகு மும்பையில் அவர்களின் திருமண வரவேற்பு நடைபெற்றது.. இது மிகவும் ஆடம்பரமாக இருந்தது, பிரபலங்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் பலர் கலந்து கொண்டனர்..

Anant Ambani Mukesh Ambani offbeat

இது தவிரத் துபாய் தொழிலதிபர் அடெல் சஜன் நடிகை சனா கான் திருமணம், ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோன் திருமணமும் காஸ்ட்லி திருமணங்கள் லிஸ்டில் உள்ளன. அதேபோல கடந்த 2019இல் முகேஷ் அம்பானியின் மூத்த மகன் ஆகாஷ் அம்பானி வைர வியாபாரியின் மகள் ஷ்லோகா மேத்தாவை மணந்தார். மும்பை நடந்த இந்த திருமணமும் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. இருப்பினும், இதற்கு எவ்வளவு செலவானது என்பது குறித்து எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை.

Anant Ambani Mukesh Ambani offbeat
More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+