40 திருத்தங்கள்! நீக்கப்பட்ட பவர்! பெண்களும் உறுப்பினராகலாம்! புது வக்பு வாரிய சட்டம் சொல்வது என்ன?
டெல்லி: பெரும் பரபரப்பு.. எதிர்ப்புகளுக்கு இடையே வக்பு வாரியத்தின் அதிகாரங்களைக் குறைக்க வகை செய்யும் சட்ட திருத்த மசோதாவை மத்திய அரசு இன்று லோக்சபாவில் மத்திய அரசு தாக்கல் செய்தது. இந்த சட்டம் எதிர்ப்பை சந்திப்பது ஏன்? இதில் மத்திய பாஜக அரசு அப்படி என்ன மாதிரியான மாற்றங்களை செய்து உள்ளது? முழுமையான விளக்கத்தை இங்கே பார்க்கலாம்.
வக்ஃப் சட்டம், 1995ல் திருத்தம் கொண்டுவரும் புதிய மசோதாவை சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு மக்களவையில் தாக்கல் செய்தார். பொதுவாக ஒரு சட்டத்தில் திருத்தங்களை செய்தால் ஒன்று, இரண்டு திருத்தங்களை செய்வார்கள். அதிகபட்சம் 10 திருத்தங்கள் கூட செய்யப்படுவது வழக்கம்.

ஆனால் 40 க்கும் மேற்பட்ட திருத்தங்களுடன், வக்ஃப் வாரியங்களை நிர்வகிக்கும் சட்டமான வக்ஃப் சட்டத்தில் உள்ள பல ஷரத்துகளை ரத்து செய்ய இன்று தாக்கல் செய்யப்பட்ட மசோதா முன்மொழிந்துள்ளது. இஸ்லாமிய பெண்கள் மற்றும் முஸ்லீம் அல்லாதவர்களின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வது உட்பட, பல மாற்றங்களை இந்த சட்டத்தில் செய்துள்ளனர்.
அதிகாரங்கள் குறையும்: இன்று செய்யப்பட்ட சட்ட திருத்தங்கள் வக்ஃப் வாரியங்களின் 'தன்னிச்சையான' அதிகாரத்தை குறைக்கும் நோக்கத்துடன் கொண்டு வரப்பட்டு உள்ளது. அதாவது வக்ஃப் வாரியங்களின் அளப்பரிய பலத்தை குறைக்கும் வகையில் இந்த திருத்தங்களை மேற்கொண்டு உள்ளனர். முக்கியமாக தற்போதுள்ள வக்ஃப் சட்டத்தின் படி வக்ஃப் வாரியம் எந்தவொரு சொத்தையும் சரிபார்க்காமல் உரிமை கோர முடியும். இந்த அதிகாரம் நீக்கப்பட்டு உள்ளது.
வக்ஃப் வாரியம் எந்தவொரு சொத்தையும் சரிபார்க்காமல் உரிமை கோர முடியாது. அதாவது முன்பு வக்ஃப் வாரியம் ஒரு நிலத்தின் வில்லங்க விவகாரங்களை, அந்த நிலத்தின் வரலாற்றை ஆராயாமல் அப்படியே உரிமை கோர முடியும். ஒரு நிலத்தை அவர்கள் உரிமை கோரினால்.. அதற்கு டாக்குமெண்ட் இல்லாத பட்சத்தில் வக்ஃப் வாரியம் அதை எடுத்துக்கொள்ள முடியும். இனி அப்படி செய்ய முடியாது.
இன்று செய்யப்பட்ட திருத்தங்கள் பெரும்பாலான திருத்தங்கள் இதை அடிப்படையாக வைத்தே கொண்டு வரப்பட்டு உள்ளது. அதாவது வக்ஃப் வாரியம் எந்தவொரு சொத்தையும் சரிபார்க்காமல் உரிமை கோர முடியும் என்பது உட்பட வக்ஃப் வாரியத்திற்கு சொத்துக்கள், நிலங்கள் மீது இருக்கும் அதிகாரங்கள் முற்றிலுமாக நீக்கப்படுகிறது.
ஆட்சியருக்கு அதிகாரம்: இந்த மசோதா சட்டத்தில் 'மாவட்ட ஆட்சியர்' என்று பெயர் அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி வக்ஃப் சட்டம் தொடர்பான சர்ச்சைகளைத் தீர்ப்பதற்கான அதிகாரங்களை கலெக்டருக்கு வழங்கியுள்ளது. இவர் இஸ்லாமியர் இல்லை என்றாலும் இனி வக்ஃப் வாரியத்தின் சொத்து விவகாரங்களில் இறுதி முடிவுகளை எடுக்க முடியும்.
வக்ஃபு வாரியத்துக்கும் அரசுக்கும் அல்லது மக்களுக்கும் இடையே உள்ள சொத்து தொடர்பான பிரச்னைகளை தீர்த்து வைக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு இந்த மசோதா அதிகாரம் அளிக்கிறது. அத்தகைய சொத்து ஏதேனும் அரசாங்கச் சொத்தா இல்லையா என்பது குறித்து ஏதேனும் கேள்விகள் எழுந்தால், அந்தச் சொத்து அரசாங்கச் சொத்தா இல்லையா என்பதைத் தீர்மானித்துச் சமர்ப்பிக்கும் அதிகாரம் கலெக்டருக்கு வழங்கப்படும். முன்பு இதில் வக்ஃப் போர்டு அதிகாரம் வைத்து இருந்தது. அது நீக்கப்பட்டு உள்ளது.
முன்மொழியப்பட்ட சட்டத்தின் பிரிவு 36ன் படி மாவட்ட ஆட்சியர்கள் ஒரு சொத்தின் வில்லங்கம், உண்மைத்தன்மை மற்றும் எல்லைகளை விசாரித்து, வக்ஃப் வாரியத்திற்கு அது சொந்தமா இல்லையா என்று முடிவு எடுக்கப்படும்.
நீக்கப்படும் சொத்துக்கள்; அதோடு இந்தச் சட்டம் தொடங்குவதற்கு முன்போ அல்லது அதற்குப் பின்னரோ வக்ஃப் சொத்து என அடையாளம் காணப்பட்ட அல்லது அறிவிக்கப்பட்ட எந்த அரசுச் சொத்தும் வக்ஃப் சொத்தாகக் இனிமேல் கருதப்படாது. இனிமேல் அவை வக்ஃப் சொத்துக்கள் கிடையாது.
தனி வாரியம்; அதேபோல் தற்போது வக்ஃப் போர்டில் உள்ள போஹ்ராக்கள் மற்றும் அககானிகளுக்கு தனியான அவுகாஃப் வாரியம் அமைக்கவும் மசோதா முன்மொழிகிறது. ஷியாக்கள், சன்னிகள், போஹ்ராக்கள், அககானிகள் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு முஸ்லிம் சமூகங்களில் தனி தனியாக பிரதிநிதித்துவம் அளிக்க இந்த வரைவு சட்டம் வழங்குகிறது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
வக்ஃப் போர்ட் கீழே ஒரு நிலத்தை பதிவு செய்தால் அதை சாதாரண நபர் பதிவு செய்வது போல முறையாக சோதனை செய்தே பதிவு செய்ய வேண்டும். அவர்களுக்கு இதில் தன்னிச்சையான அதிகாரங்கள் இருக்காது.
பெண் உறுப்பினர்கள்; வக்ஃப் வாரியங்களின் செயல்பாட்டில் பொறுப்புணர்வையும் வெளிப்படைத்தன்மையையும் மேம்படுத்துவதும், இந்த அமைப்புகளில் பெண்களைக் கட்டாயமாகச் சேர்ப்பதை உறுதி செய்வதும் திருத்த மசோதாவின் நோக்கம் என்று அரசு கூறி உள்ளது. முஸ்லீம் சமூகத்தினரிடையே எழுந்துள்ள கோரிக்கைகளுக்கு இணங்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று அரசு கூறி உள்ளது. அதன்படி இதில் இனி பெண்களும் இணையலாம்.
வக்ஃப் போர்டின் பல்வேறு அதிகாரம் நீக்கப்படுவதால் இஸ்லாமியர்கள், இஸ்லாமிய தலைவர்கள், பல்வேறு எதிர்க்கட்சியினர் இடையே இது கடுமையான எதிர்ப்புகளை சந்தித்து உள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications