"வேட்டை.." இந்தியாவில் அடுத்தடுத்து உயிரிழக்கும் ஆப்பிரிக்க சிவிங்கி புலிகள்.. என்ன காரணம்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவில் சிவிங்கி புலிகளை மீண்டும் கொண்டு வர மத்திய அரசு ஆப்பிரிக்காவில் இருந்து அவற்றைக் கொண்டு வந்துள்ளன. இருப்பினும், சிவிங்கி புலிகள் அடுத்தடுத்து உயிரிழந்து வருவது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இதற்கு என்ன காரணம் என்பதைப் பார்க்கலாம்.

கட்டுப்பாடு இல்லா வேட்டை உள்ளிட்ட பல காரணங்களால் இந்தியாவில் சிவிங்கி புலிகளின் எண்ணிக்கை குறைந்து, 1950களில் அழிந்தே விட்டது. இதனிடையே சிவிங்கி புலிகளை மீண்டும் இந்தியாவில் கொண்டு வரும் முயற்சியில் மத்திய அரசு இறங்கியது.

 What causes cheetah deaths, and why confining them may not help

வெளிநாடுகளில் இருந்து சிவிங்கி புலிகளை இறக்குமதி செய்து அதன் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்தனர். இதற்காகக் கடந்த பிப். மாதம் தென்னாப்பிரிக்காவில் இருந்து 12 சிவிங்கி புலிகள் கொண்டு வரப்பட்டன.

சிவிங்கி புலிகள்: அங்கிருந்து கொண்டு வரப்பட்ட சிவிங்கி புலிகளில் ஒன்றான உதய் என்ற ஆறு வயது ஆண் சிவிங்கி புலி குனோ தேசிய பூங்காவில் நேற்று உயிரிழந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு, குனோ பூங்கா மீது இருக்கும் அழுத்தத்தைக் குறைக்க மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், காந்தி சாகர் வனவிலங்கு சரணாலயத்தைச் சிவிங்கி புலிகளுக்கான இரண்டாவது இல்லமாகத் தயார் செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.

ஒரு கண்டத்தில் இருந்து மற்றொரு கண்டத்திற்குச் சிவிங்கி புலிகள் அழைத்து வரப்படுவது இதுவே முதல்முறையாகும். அதன்படி தென் ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியாவுக்குக் கொண்டுவரப்பட்ட 20 சிறுத்தைகளில் இப்போது 18 சிறுத்தைகள் மட்டுமே எஞ்சியுள்ளன. முன்னதாக கடந்த செப். மாதம். நமீபியாவில் இருந்து வந்த எட்டு சிறுத்தைகளில் ஒன்றான ஐந்து வயது சாஷா மார்ச் 27ஆம் தேதி உயிரிழந்தது.

பிரச்சினைகள்: சிவிங்கி புலிகளை அங்கிருந்து அழைத்து வந்த பிறகே இதில் இருக்கும் பிரச்சினைகளை அவர்கள் புரிந்து கொண்டனர். இப்போது அவை இருக்கும் குனோ பூங்காவுக்கு சிவிங்கி புலிகளைக் கையாளும் திறன் இல்லை என்று பல வல்லுநர்களும் கூறியுள்ளனர். குனோவில் உள்ள திட்ட ஊழியர்களின் அனுபவமும் இதையே உணர்த்துகிறது. எனவே, இதைத் தடுக்க நாம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். சரி சிவிங்கி புலிகள் உயிரிழக்க என்ன காரணம் என்பதைப் பார்க்கலாம்.

தென்னாப்பிரிக்க ஆய்வில், 293 சிவிங்கி புலிகள் உயிரிழப்பு பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் முகாம்களில் அடைத்து வைப்பதால் 6.5% உயிரிழப்புகளும், போக்குவரத்து உள்ளிட்ட காரணங்களால் 7.5% இறப்புகளும், கண்காணிப்பு சாதனங்களால் 0.7% உயிரிழப்புகளும் பதிவாகிறது. அதாவது பதிவாகும் 7 உயிரிழப்புகளில் ஒன்று மனிதர்கள் காரணமாகவே ஏற்படுகிறது.

வேட்டை: இருப்பினும், அதைத்தாண்டி மற்ற விலங்குகளால் சிவிங்கி புலிகள் வேட்டையாடப்படுவதே பெரிய காரணமாக உள்ளது. என்ன தான் சிவிங்கி புலிகளால் மின்னல் வேகத்தில் ஓட முடியும் என்றாலும் கூட அதற்குத் தாடை வலிமையோ உடல் வலிமையோ பெரியளவில் இருக்காது. இதனால் மற்ற விலங்குகள் மிக எளிதாகச் சிவிங்கி புலிகளை வேட்டையாடும். அங்குப் பதிவான 53.2% உயிரிழப்புகளுக்கு வேட்டையே காரணமாக இருந்துள்ளது.

சிங்கங்கள், சிறுத்தைகள், ஹைனாக்கள் மற்றும் குள்ளநரிகள் தான் சிவிங்கி புலிகளை அதிகம் கொல்கிறது. பாம்புகள், யானைகள், முதலைகள், கழுகுகளும் கூட சிவிங்கி புலி உயிரிழப்பிற்குக் காரணமாக இருக்கிறது. அதேபோல சிவிங்கி புலிகள் ஈன்றும் குட்டிகளில் 90% குட்டிகள் பிற விலங்குகளினால் கொல்லப்படுகிறது. அதன் எண்ணிக்கை அதிகரிக்காமல் இருக்க இதுவே முக்கிய காரணமாக உள்ளன.

சிறுத்தைகள்: ஆப்பிரிக்காவில் சிவிங்கி புலிகளைச் சிங்கங்கள் கொல்கிறது. இந்தியாவில் சிங்கத்திற்குப் பதில் சிறுத்தைகள் அதைக் கொல்ல வாய்ப்புகள் அதிகம் என்று கூறப்படுகிறது. சரணாலயங்களில் சிவிங்கி புலிகளையும் சிறுத்தைகளையும் எப்போதும் பிரித்தே வைப்பது சற்று சாத்தியமே இல்லாத ஒன்று தான். இதனால் இப்போது நம்முன் மிகப் பெரிய சவால் இருக்கிறது.

ஒன்று ஆப்பிரிக்காவைப் போலச் சிவிங்கி புலிகளை வேறு ஆபத்தான விலங்குகள் எதுவும் இல்லாத வேலிகளில் அடைத்து வைத்து வளர்க்கலாம். இல்லை திட்டத்தில் சமரசம் செய்து கொள்ள முடியாது என்றால், சிவிங்கி புலிகளைத் தனித்து வைக்கவும் வேண்டும். அதேநேரம் அதற்குத் தேவையான உணவுகள் கிடைப்பதையும் உறுதி செய்ய வேண்டும். அதை நாம் எப்படிச் செய்யப் போகிறோம் என்பது தான் மிகப் பெரிய கேள்வி

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+