Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மெஸ்ஸி "இந்தியாவில்" பிறந்தவர்.. வாயை விட்ட காங்கிரஸ் எம்பி! ஸ்டன்னான நெட்டிசன்கள்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: அர்ஜென்டினா உலகக் கோப்பையை வென்றதை உலகெங்கும் அவரது ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், மெஸ்ஸிக்கும் அசாமிற்கும் உள்ள தொடர்பாக எனக் காங்கிரஸ் எம்பி போட்ட ட்வீட் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

கத்தாரில் கடந்த ஓராண்டாக நடைபெற்ற உலகக் கோப்பை இப்போது கோலாகலமாக முடிந்துள்ளது. மொத்தம் 32 நாடுகள் முட்டிமோதிய இந்த உலகக் கோப்பையைக் கடைசியில் அர்ஜென்டினா தட்டி தூக்கியது.

உலகக் கோப்பை தொடங்குவதற்கு முன்பே ஒரு பக்கம் கத்தாரில் அடுத்தடுத்த சர்ச்சை சம்பவங்கள் அரங்கேறின. அதேபோல மற்றொரு புறம் தொடக்கம் முதலே இந்த உலகக் கோப்பையில் ஏகப்பட்ட ட்விஸ்ட்கள் அரங்கேறின.

 இறுதிப் போட்டி

இறுதிப் போட்டி

பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் நேற்றிரவு இறுதிப் போட்டி நடைபெற்றது. அதில் அர்ஜென்டினா மற்றும் பிரான்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் முதல் பாதிக்கு முன்பே, இரண்டு கோல் அடித்து அர்ஜென்டினா முன்னிலை பெற்றது. இருப்பினும், இரண்டாம் பாதியில் 80 நிமிடத்தில் அடுத்தடுத்து இரு கோல் அடித்து கம்பேக் கொடுத்தது பிரான்ஸ். போட்டி சமனில் முடிந்த நிலையில், கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது. அதுவும் சமனில் முடியவே பெனால்டி ஷூட் அவுட் முறை கடைப்பிடிக்கப்பட்டது.

 அர்ஜென்டினா வெற்றி

அர்ஜென்டினா வெற்றி

இதில் 4-2 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா வென்றது. இதன் மூலம் சுமார் 36 ஆண்டுகளுக்குப் பின், மீண்டும் உலகக் கோப்பையைத் தன்வசமாக்கியுள்ளது அர்ஜென்டினா. இதனால் ஒட்டுமொத்த அர்ஜென்டினாவும் விழாக் கோலம் பூண்டுள்ளது. அந்நாட்டு ரசிகர்கள் அர்ஜென்டினா வீரர்களைக் கொண்டாடி வருகின்றனர். அதிலும் குறிப்பாக மெஸ்ஸியை கொண்டாடித் தீர்த்து வருகிறார்கள். அவருக்கு இது கடைசி உலகக் கோப்பையாக இருக்கலாம் எனச் சொல்லப்படும் நிலையில், அவரது ரசிகர்கள் இந்த வெற்றியைக் கோலாகலமாகக் கொண்டாடி வருகின்றனர்.

 மெஸ்ஸி- அசாம்

மெஸ்ஸி- அசாம்

மேலும், உலகெங்கும் பலரும் மெஸ்ஸி மற்றும் அர்ஜென்டினா அணிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அப்படித்தான் காங்கிரஸ் எம்பி அப்துல் கலீக் சொன்ன வாழ்த்து செய்தி இப்போது சர்ச்சையில் சிக்கியுள்ளது. அர்ஜென்டினா வென்றதும் அப்துல் கலீக் தனது ட்விட்டரில், "உங்களுக்கு இதயபூர்வ வாழ்த்துக்கள். உங்களுக்கும் அசாமிற்கும உள்ள இணைப்புக்காக நாங்கள் பெருமைப்படுகிறோம்" என்று அவர் ட்வீட் செய்திருந்தார். இவரது இந்த ட்வீட் புட்பால் ரசிகர்களைக் குழப்பிவிட்டது. மெஸ்ஸிக்கும் அசாமிற்கும் என்ன தொடர்பு என அவர்கள் குழம்பிவிட்டார்கள்.

 ஸ்டன்னான நெட்டிசன்கள்

ஸ்டன்னான நெட்டிசன்கள்

இது குறித்து ஆத்திய ஷர்மா என்ற ஒருவர் அவரிடம் கேட்டார். காங்கிரஸ் எம்பி அப்துல் காலீக்கிடம் "அசாம் கனெக்ஷன் என்ன" என்று கேட்டார். அதற்கு அப்துல் காலீக், "ஆம், அவர் அசாமில் பிறந்தவர்" என்று ஒரே போடாக போட்டுவிட்டார். அவரது இந்த ட்வீட் உடனடியாக இணையத்தில் டிரெண்டானது. பலரும் அவரை வறுத்தெடுக்கவும் தொடங்கினர். மேலும், சிலர் மெஸ்ஸி எந்த நாட்டில் எப்போது பிறந்தவர் என்பது குறித்த தகவல்களையும் அவரை டேக் செய்து பதிவிடத் தொடங்கினர். அந்த ட்வீட்டால் இணையத்தில் காங்கிரஸ் எம்பியை வைத்துச் செய்யத் தொடங்கினர்.

 சமாளிப்பு

சமாளிப்பு

இதையடுத்து தனது தவறை உணர்ந்த அப்துல் காலீக் உடனடியாக தனது ட்வீட்டை டெலிட் செய்துவிட்டார். மேலும், அவர் இதுபோல ட்வீட்டை பதிவிடவே இல்லை என்ற ரீதியிலும் ட்வீட் செய்தார். அதாவது, "வதந்திகளைப் பரப்பும் முன்பு, எனது ட்விட்டர் டைம்லைனையும், பேஸ்புக் பக்கத்தையும் பார்த்துவிட்டு சொல்லுங்கள்" எனத் தனது தவறை சமாளிக்கும் வகையில் பதிவிட்டிருந்தார். அப்துல் காலீக்கின் பழைய ட்வீட் லிங்கிற்கு சென்றால், "அந்த ட்வீட்டை ஆத்தர் டெலிட் செய்துவிட்டார்" என்றே வருகிறது.

 வைத்துச் செய்யும் நெட்டிசன்கள்

வைத்துச் செய்யும் நெட்டிசன்கள்

இருப்பினும், அவர் பழைய ட்வீட்டை டெலிட் செய்யும் முன்பே, அதை நெட்டிசன்கள் பலரும் ஸ்கிரீன்ஷாட் எடுத்துவிட்டனர். அதைத்தான் இப்போது பலரும் பகிர்ந்து காங்கிரஸ் எம்பி அப்துல் காலீக்கை கிண்டல் செய்து வருகின்றனர். தெரியாமல் பதிவிட்டது கூட ஓகே.. ஆனால், அதை டெலிட் செய்துவிட்டு, அப்படியொரு ட்வீட்டை போடவே இல்லை என்று சாதிப்பதால் அவருக்கு என்ன கிடைத்துவிடப் போகிறது என்று நெட்டிசன்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+