கெஜ்ரிவாலுக்கு கிடைத்த ஜாமீன்.. ஹேமந்த் சோரன், செந்தில் பாலாஜி வழக்குகளில் தாக்கத்தை ஏற்படுத்துமா?
டெல்லி: டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ள நிலையில், இந்த கேஸ் சிறையில் இருக்கும் மற்ற அரசியல் தலைவர்களுக்கு முன்மாதிரியாக மாறலாம் என்கிறார்கள் அரசியல் வல்லுநர்கள்.
சமீப காலங்களாக அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ உள்ளிட்ட விசாரணை அமைப்புகள் பல மாநிலங்களில் அரசியல் தலைவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளன. அவர்கள் மீது ஐபிசி மற்றும் பண மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கெஜ்ரிவால்: அதுபோல தான் கெஜ்ரிவாலும் டெல்லி மதுபான கொள்கை விவகாரத்தில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்தச் சூழலில் அவருக்கு உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள இடைக்கால ஜாமீன் மற்ற அரசியல் தலைவர்களுக்கு முன்மாதிரியாக மாறலாம். ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் இடைக்கால ஜாமீன் மீதான மனு மே 17ஆம் தேதி விசாரணைக்கு வரும் நிலையில், அதில் நீதிமன்றம் என்ன தீர்ப்பு வழங்கப்போகிறது என்பது முக்கியமாகப் பார்க்கப்படுகிறது.
உச்ச நீதிமன்றம் கெஜ்ரிவால் வழக்கில் கூறியுள்ள கருத்துகள் வரும் காலத்தில் மத்திய விசாரணை ஏஜென்சிகள் எடுக்கும் நடவடிக்கைகளில் மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்கிறார்கள் மூத்த அதிகாரிகள். ஹேமந்த் சோரன், மணிஷ் சிசோடியா, செந்தில் பாலாஜி, கவிதா என பல தலைவர்கள் சிறையில் இருக்கும் நிலையில், கெஜ்ரிவால் வழக்கு முக்கியமானதாக மாறியுள்ளது.
குற்றச்சாட்டு: கெஜ்ரிவால் வழக்கைப் பொறுத்தவரை அவர் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்பதே அமலாக்க துறையின் குற்றச்சாட்டாக இருக்கிறது. மேலும், சிறையில் இருந்த போது அவரது மொபைலும் அதிகாரி ஆய்வு செய்ய முடியாத வகையில் லாக் செய்தே இருந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், கடந்த மார்ச் மாதம் கைதான கெஜ்ரிவால் இடைக்கால ஜாமீன் கோரியிருந்தார்.
இடைக்கால ஜாமீன்: நீதிபதி சஞ்சீவ் கண்ணா மற்றும் நீதிபதி தீபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் தான் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது. கெஜ்ரிவால் ஜூன் 2ஆம் தேதி சரணடைய வேண்டும் என்று நீதிமன்றம் கேட்டுக் கொண்டது. அடுத்து இதே டிவிஷன் பெஞ்ச் தான் ஹேந்த் சோரன் வழக்கிலும் அமலாக்கத் துறையினரின் கருத்துகளைப் பிரமாணப் பத்திரம் மூலம் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொண்டது.
இந்த செயல்முறை முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. ஏனென்றால் கெஜ்ரிவால் ஜாமீன் வழக்கிலும் இதே உத்தரவைத் தான் முதலில் சுப்ரீம் கோர்ட் பிறப்பித்தது. அதைத் தொடர்ந்தே கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது.
இதன் காரணமாக வரும் காலங்களில் அமலாக்கத் துறை கடுமையான குற்றச்சாட்டுகளை அவர்கள் மீது சேர்க்கவும் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சம்மன்களைத் தவிர்த்து விசாரணைக்கு ஆஜராகாமல் இருப்பது, சாட்சியங்களை அழிப்பது, அதிகாரிகளை மிரட்டுவது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளையும் அவர்களின் ஊழல் வழக்கில் சேர்க்க அமலாக்கத் துறை திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
அதிகாரிகள் சொல்வது என்ன: இது தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், "கெஜ்ரிவால் வழக்கின் தீர்ப்பும், ஹேமந்த் சோரன் வழக்கில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கையும் வரும் காலத்தில் விசாரணையில் முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தும். நாடு முழுக்க நூற்றுக்கணக்கான அரசியல்வாதிகள் மத்திய அமைப்புகளின் காவலில் உள்ளனர். அல்லது விசாரணையில் உள்ளனர். கெஜ்ரிவால் வழக்கைக் காரணம் காட்டியே அவர்களுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்படலாம்.
நீதிமன்றத்தின் உத்தரவுகளை ஆய்வு செய்து வரும் காலத்தில் ஜாமீன் கிடைக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க முயல்வோம். மூத்த அரசியல்வாதிகளான கெஜ்ரிவால் மற்றும் சோரன் இருவரும் 10 சம்மன்களைத் தவிர்த்தனர்.. சாதாரண குடிமக்கள் யாரும் இப்படிச் செய்ய மாட்டார்கள். சம்மன் சட்டவிரோதமானது என்றும், கைதின் பின்னணியில் அரசியல் காரணம் இருக்கிறது என்பதே அவர்கள் குற்றச்சாட்டு.
யுக்தியை மாற்ற வேண்டி இருக்கும்: ஆனால், நாங்கள் விசாரணை நடத்தி கண்டறிந்த ஆதாரங்கள் மற்றும் தொடர்புடைய ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தோம். ஜார்க்கண்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் மீதே வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அதை எல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ள மறுக்கிறார்கள். எனவே, வரும் காலத்தில் நாங்கள் எங்கள் யுக்தியை மாற்ற வேண்டி இருக்கும்" என்றார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications