Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பதக்கங்களுடன் சென்ற மல்யுத்த வீரர்கள்.. கங்கை கரைக்கு திடீரென வந்த விவசாய சங்க தலைவர்.. என்ன நடந்தது

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மல்யுத்த வீரர், வீராங்கனைகள் இன்று தங்கள் வென்ற பதக்கங்களைக் கங்கையில் விடச் சென்ற நிலையில், அப்போது கடைசி நேரத்தில் விவசாயச் சங்கத் தலைவர் அவர்களைத் தடுத்தார். அப்போது அவர் வீரர், வீராங்கனைகளிடம் என்ன சொன்னார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷனுக்கு எிராக பல வீராங்கனைகள் பாலியல் புகார்களை முன்வைத்தனர். கடந்த ஜனவரி மாதம் இந்தப் புகார் முதலில் வெளிச்சத்திற்கு வந்த நிலையில், அப்போது விசாரிக்க ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது.

What Farmer Leader Naresh Tikait said to protesting wrestlers in Haridwar

அதன் பின் இதில் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், கடந்த ஏப்ரல் இறுதி முதல் மீண்டும் போராட்டம் நடத்தி வருகின்றனர். வீரர்கள் முதலில் ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வந்தனர்.

போராட்டம்: முதலில் மல்யுத்த சம்மேளன தலைவரும் பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் மீது எந்தவொரு வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. இதற்காக சுப்ரீம் கோர்டில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலுக்குப் பின்னரே அவர் மீது வழக்கு கூட பதிவு செய்யப்பட்டது. இருப்பினும், அதன் பின்னர் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றஞ்சாட்டி வீரர்கள் போராட்டத்தைத் தீவிரப்படுத்தினர்.

குறிப்பாக டெல்லியில் புதிய நாடாளுமன்றம் திறக்கப்படும் போது, பிரிஜ் பூஷன் உள்ளே இருப்பதாகவும் அவருக்கு எதிராக நாடாளுமன்றத்திற்கு வெளியே போராட்டம் நடத்தப்படும் என்றும் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் அறிவித்தனர். இதனால் அங்குப் பதற்றமான ஒரு சூழல் ஏற்பட்டது. டெல்லி எல்லைகள் மூடப்பட்டு போலீசார் குவிக்கப்பட்டனர். இருப்பினும், அதையும் தாண்டி போராட்டத்தில் ஈடுபட்ட வினேஷ் போகத், சாக்ஷி மாலிக் மற்றும் பஜ்ரங் புனியா ஆகியோரை டெல்லி போலீசார் வலுக்கட்டாயமாகக் கைது செய்தனர்.

கங்கையில் வீச முடிவு: இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து பல்வேறு தலைவர்களும் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். குறிப்பாக விவசாயிகள் சங்கத்தினரும் ஆதரவு தெரிவித்தனர். இதற்கிடையே இன்று மல்யுத்த வீரர், வீராங்கனைகளின் போராட்டம் தீவிரமடைந்தது. பிரிஜ் பூஷன் மீது நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து தாங்கள் வென்ற பதக்கங்களையே கங்கையில் வீச உள்ளதாக அறிவித்தனர்.

அதன்படி தங்கள் ஒலிம்பிக் உள்ளிட்ட சர்வதேச தொடர்களில் வென்ற பதக்கங்களுடன் வீரர், வீராங்கனைகள் ஹரித்துவாருக்கு வந்தனர். அங்கே தங்கள் பதக்கங்களுடன் வீரர் வீராங்கனைகள் கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு ஆதரவாக அங்கே பெருந்திரளான மக்கள் கூடியிருந்தனர். வீரர், வீராங்கனையே பதக்கங்களைக் கங்கையில் விடச் சென்றனர்.

What Farmer Leader Naresh Tikait said to protesting wrestlers in Haridwar

ராகேஷ் டிக்கைட்: அப்போது டெல்லி விவசாயிகள் போராட்டத்தை முன்னெடுத்த ராகேஷ் டிக்கைட்டும் கிசான் அமைப்பின் தலைவருமான நரேஷ் டிக்கைட், மல்யுத்த வீரர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக ஹர்-கி-பௌரிக்கு வந்தார். போராட்டத்தில் ஈடுபட்ட மல்யுத்த வீரர், வீராங்கனைகளிடம் இருந்து பதக்கங்களை வாங்கிக் கொண்ட நரேஷ் டிக்கைட், 5 நாட்கள் தங்களுக்கு டைம் தரும்படி கேட்டுக் கொண்டார்.

அவரது கோரிக்கையை ஏற்று மல்யுத்த வீரர்கள் பதக்கங்களை கங்கையில் விடும் போராட்டத்தைத் தள்ளி வைத்து ஹரித்துவாரில் இருந்து டெல்லி திரும்பினர்.. அப்போது நரேஷ் டிக்கைட் கூறுகையில், "நமது மல்யுத்த வீரர்கள் ஸ்டேடியங்களில் பயிற்சி செய்து கொண்டு இருக்க வேண்டும். ஆனால், அவர்கள் மோசமாக நடத்தப்பட்டுள்ளனர். இதனால் அவர்கள் ஜந்தர் மந்தரிலும் இப்போது இந்த புனிதமான கங்கையிலும் போராட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

பிரிஜ் பூஷனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். நாங்கள் உண்மைக்கு ஆதரவாக இருப்போம். விவசாயிகளின் போராட்டம் அதைத் தான் காட்டியது.. உண்மை கட்டாயம் வெல்லும்" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+