டெல்லியில் ட்விஸ்ட்.. ஒரே காரில் சித்தராமையா-டிகே சிவக்குமார்! புயலுக்கு பின் அமைதி! என்ன நடந்தது?
டெல்லி: கர்நாடகா முதல்வர் பதவி தொடர்பாக சித்தராமையா மற்றும் டிகே சிவக்குமார் இடையே கடும் போட்டி நிலவியது. இதையடுத்து இருவரும் எதிரெதிர் துருவங்களாக மாறினர். இறுதியில் சித்தராமையா முதல்வராகவும், டிகே சிவக்குமார் துணை முதல்வராகவும் தேர்வு செய்யப்பட்டுள் நிலையில் இருவரும் ஒரேகாரில் வலம் வந்தது காங்கிரஸ் கட்சியினரை உற்சாகப்படுத்தி உள்ளது. மேலும் இதன் பின்னணி தகவல் வெளியாகி உள்ளது.
கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளில் வென்றது. தேர்தலில் ரிசல்ட் வெளியான பிறகு கர்நாடகா அரசியல் பரபரப்பு என்பது டெல்லிக்கு மாறியது. இதற்கு முக்கிய காரணம் சித்தராமயைா மற்றும் டிகே சிவக்குமார் தான்.

கர்நாடகாவில் முதல்வர் பதவிக்கு மாஜி முதல்வர் சித்தராமையா, மாநில காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார் ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவியது. இருவரும் டெல்லியில் முகாமிட்டு மேலிட தலைவர்களை சந்தித்தனர். நேற்று முன்தினம் இருவரும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை சந்தித்து பேசினர். அதேபோல் நேற்று ராகுல் காந்தியை இருவரும் தனித்தனியே சந்தித்து பேசினார்.
சித்தராமயைா மற்றும் டிகே சிவக்குமார் என இருவரும் முதல்வர் கொடுக்க முன்வராததால் கடந்த 2 நாட்களால் காங்கிரஸ் கட்சியில் பெரிய குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து சோனியா காந்தி நேரடியாக தலையிட்டார். இதன்மூலம் நேற்று நள்ளிரவில் இந்த பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டது. முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டிகே சிவக்குமாரும் நியமிக்கப்பட்டனர். இதுதொடர்பான அறிவிப்பை காங்கிரஸ் கட்சி இன்று வெளியிட்டது.
முன்னதாக இன்று காலையில் டெல்லியில் சித்தராமையா, டிகே சிவக்குமார் ஆகியோர் ஒரே காரில் வலம் வந்தனர். நேற்று முன்தினம் முதல் இருவரும் டெல்லியில் இருந்தாலும் கூட ஒருவரையொருவர் நேரில் சந்திக்கவில்லை. மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி ஆகியோரை இருவரும் தனித்தனியாகவே சந்தித்து பேசினர். டிகே சிவக்குமார் தனது தம்பியும், காங்கிரஸ் எம்பியுமான டிகே சுரேஷ் வீட்டில் தங்கியிருந்தார். சித்தராமையார் தனியார் ஓட்டலில் தங்கி முதல்வர் பதவிக்கு லாபி நடத்தி வந்தார். இதில் சித்தராமையா முதல்வராகி வென்றுள்ளார்.

இதையடுத்து இருவரையும் ஒன்றிணைக்கும் பணியை காங்கிரஸ் மேலிடம் தொடங்கியது. அதன்படி காங்கிரஸ் பொதுச்செயலாளர் கேசி வேணுகோபால் வீட்டில் இருவருக்கும் இன்று காலை உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதையடுத்து தனித்தனி காரில் டிகே சிவக்குமார், சித்தராமையா ஆகியோர் கேசி வேணுகோபால் வீட்டுக்கு வந்தனர். அதன்பிறகு அவர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவு சாப்பிட்டனர். அப்போது கர்நாடகா காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலாவும் ஒன்றாக இருந்தார்.
இதையடுத்து கேசி வேணுகோபால் வீட்டில் இருந்து சித்தராமையா மற்றும் டிகே சிவக்குமார் ஆகியோர் ஒரே காரில் பயணிக்க தொடங்கினர். இதையடுத்து இருவரும் ஒரே காரில் அங்கிருந்து மல்லிகார்ஜூன கார்கேவின் வீட்டுக்கு சென்றனர். அங்கு அவர்கள் மல்லிகார்ஜூன கார்கேவை சந்தித்து வாழ்த்து பெற்றனர். இந்த வேளயைில் அவர்கள் 3 பேரும் கைகளை உயர்த்தி எங்களுக்குள் பிரிவினை இல்லை. அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம் என்பதை வெளிப்படுத்தினார்.
கர்நாடகா காங்கிரஸில் சித்தராமையா மற்றும் டிகே சிவக்குமார் ஆகியோர் இருபெரிய தலைவர்களாக உள்ளனர். முதல்வர் பதவி தொடர்பான போட்டியில் இருவரும் எதிரெதிர் துருவங்களாக மாறிய நிலையில் இன்று ஒரே காரில் ஒன்றாக மேலிட தலைவர்களை சந்தித்துள்ளனர். இதனால் காங்கிரஸ் கட்சியினர் உற்சாகமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications