"அவர்கள் வேண்டாம்.." கரப்பான் பூச்சி கட்சியை கிட்ட கூட சேர்க்க மறுக்கும் காங்கிரஸ்.. என்ன காரணம்?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தலைமை தேர்தல் ஆணையருக்கு எதிரான போராட்டங்களை தீவிரப்படுத்தியுள்ள இந்தியா கூட்டணி தலைவர்கள் இது குறித்து நேற்றைய தினம் ராகுல் காந்தி இல்லத்தில் ஆலோசனை நடத்தினர். இந்த கூட்டத்தில் என்னவெல்லாம் ஆலோசிக்கப்பட்டது.. என்ன முடிவு செய்யப்பட்டது என்பது குறித்த கூட்டத்தில் கலந்து கொண்ட எம்பி ஒருவர் முக்கிய தகவல்களை பகிர்ந்துள்ளார். அது குறித்து நாம் விரிவாக பார்க்கலாம்!

நாடு முழுக்க தலைமை தேர்தல் ஆணையருக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்து வருகிறது. எஸ்ஐஆர் உள்ளிட்ட விவகாரங்களில் அவர் தன்னிச்சையாக செயல்பட்டதாக குற்றஞ்சாட்டி, அவர் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டங்கள் தீவிரமடைந்து வருகிறது. இதற்கிடையே தலைமை தேர்தல் ஆணையருக்கு எதிராக திங்கள்கிழமை எதிர்க்கட்சிகள் இணைந்து பேரணி நடத்தினர்.

Rahul Gandhi Meeting INDIA Bloc Election commission

ஆலோசனை கூட்டம்

டெல்லியில் நடந்த இந்த பேரணியை தொடர்ந்து, அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிப்பதற்காக இந்தியா கூட்டணிக் கட்சிகளின் எம்பிக்கள் நேற்று மாலை ராகுல் காந்தியின் வீட்டில் ஆலோசனை நடத்தினர். சுனஹரி பாக் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் தேநீர் விருந்துடன் நடைபெற்ற இந்த கூட்டத்தில், எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த எம்பிக்கள் பங்கேற்றனர்.

அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து இதில் ஆலோசிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த 22 எம்பிக்களும், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா அணியின் எம்பிக்களும் பங்கேற்றனர். அண்மையில் இந்த இரு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கூட்டங்களில் பங்கேற்காமல் இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இரு தரப்பு எம்பிக்களும் கலந்து கொண்டனர்.

போராட்டங்களுக்கு பிரேக்

வரும் நாட்களில் நடைபெறவுள்ள துர்கா பூஜை கொண்டாட்டங்கள் குறித்தும் பீகார், உத்தர பிரதேசம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த எம்பிக்கள் குறிப்பிட்டனர். பண்டிகை காலத்தைக் கருத்தில் கொண்டு, அடுத்த சில நாட்களுக்கு போராட்டங்கள் அல்லது தர்ணாக்களை நடத்த வேண்டாம் என்று முடிவு செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது சில நாட்கள் பிரேக் எடுத்த பிறகு நவராத்திரி மற்றும் தீபாவளி பண்டிகைகளுக்கு பிறகு எதிர்க்கட்சிகள் மீண்டும் வீதிகளில் இறங்கி போராட்டங்களை தீவிரப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கெஜ்ரிவால் மீது அதிருப்தி

அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி, இந்தியா கூட்டணியிலிருந்து விலகி நிற்பது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆம் ஆத்மி கட்சியின் இந்த அணுகுமுறை கூட்டணி தலைவர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆசாத் சமாஜ் கட்சியின் சந்திரசேகரை கூட்டணிக்குள் சேர்க்க வேண்டாம் என்ற தங்கள் நிலைப்பாட்டையும் சமாஜ்வாதி கட்சி தெரிவித்துள்ளது.

டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அது குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. போராட்டங்கள் நடத்துவதற்காக ஒதுக்கப்பட்ட இடமாக ஜந்தர் மந்தர் தொடர்ந்து இருக்க என்ன செய்யலாம் என்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. இது தொடர்பாக சட்ட ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் போராட கூட்டணி கட்சிகள் முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கரப்பான் பூச்சி ஜனதா

இப்போது வரை கரப்பான் பூச்சி கட்சியும் காங்கிரஸும் விலகியே இருக்கிறது. நேற்றைய கூட்டத்தில் கரப்பான் பூச்சி கட்சியினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கலாம் என முதலில் தகவல் வெளியானது. இதனால் இரு தரப்பும் இணைந்து போராட்டங்களை முன்னெடுக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இருப்பினும், கரப்பான் கட்சிக்கு அழைப்பு எதுவும் செல்லவில்லை. தற்போதைய சூழலில், கரப்பான் பூச்சி அமைப்பிடம் இருந்து காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் விலகியிருக்க வேண்டும் என்றே ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+