உச்ச போதை.. 8 வயது சிறுமியிடம் நடுவானில் அத்துமீறிய பயணி! ஏர் இந்தியாவுக்கு மற்றொரு தர்ம சங்கடம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஏர் இந்தியா விமானத்தில் சக பயணி மீது குடிபோதையில் ஒருவர் சிறுநீர் கழித்த விவகாரமே பூதாகரமாகியுள்ள நிலையில், மதுபோதையில் ஒருவர் 8 வயது சிறுமியிடம் அத்துமீற முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது.

மத்திய அரசின் கீழ் இயங்கி வந்த ஏர் இந்தியா நிறுவனம் கடந்தாண்டு தான் டாடா குழுமத்தின் கைகளுக்குச் சென்றது. தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வந்த ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா குழுமம் மாற்றியமைக்கும் என்றே பலரும் எதிர்பார்த்தார்கள்.

ஆனால், கடந்த சில நாட்களாகவே ஏர் இந்தியாவில் நடைபெறும் சம்பவங்கள் அந்த நிறுவனத்திற்கு மகிழ்ச்சியைத் தரவில்லை. இந்த விஷயத்தை ஏர் இந்தியா கையாண்ட முறைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

 அத்துமீறல்

அத்துமீறல்

பாரீஸில் இருந்து டெல்லி வந்த விமானத்தில் குடிபோதையில் ஒருவர் சக பயணி மீது சிறுநீர் கழித்த சம்பவம் பரபரப்பைக் கிளப்பியது. இது ஓய்வதற்குள் இதேபோல கடந்த நவ. மாதம் நியூயார்க் டெல்லி விமானத்தில் நடந்ததாகவும் இந்த இரு சம்பவங்கள் குறித்தும் அவர்கள் முதலில் சிவில் ஏவியேஷன் இயக்குநரகத்திடம் புகார் அளிக்கவில்லை. இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஏர் இந்தியா விமானத்தில் குடிபோதையில் இருந்த மற்றொரு பயணி 8 வயது சிறுமியிடம் அத்துமீறிய கொடூர சம்பவம் நடந்துள்ளது. மும்பையில் இருந்து லண்டனுக்கு இயக்கப்பட்ட விமானத்தில் இந்தச் சம்பவம் நடந்ததாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.

 போலீசார்

போலீசார்

இப்படியொரு சம்பவம் நடந்ததை உறுதி செய்துள்ள ஏர் இந்தியா நிர்வாகம், உடனடியாக கேபின் குழு குற்றவாளி தனிமைப்படுத்தினர். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமியை ஆசுவாசப்படுத்தி, அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் உடனடியாக மாற்று இருக்கைகளும் வழங்கப்பட்டதாக ஏர் இந்தியா செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். அவர் மேலும், கூறுகையில், "இந்தச் சம்பவம் கடந்தாண்டு செப். மாதம் நடந்தது. விமானம் லண்டனில் தரையிறங்கியதும், குற்றம் சாட்டப்பட்டவர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். ஏர் இந்தியா கேபின் குழுவினர் தங்கள் வாக்குமூலத்தை போலீசாரிடம் அளித்தனர். சிவில் ஏவியேஷன் துறைக்கும் இது குறித்துத் தெரிவிக்கப்பட்டது

போலீசார்

போலீசார்

இப்படியொரு சம்பவம் நடந்ததை உறுதி செய்துள்ள ஏர் இந்தியா நிர்வாகம், உடனடியாக கேபின் குழு குற்றவாளி தனிமைப்படுத்தினர். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமியை ஆசுவாசப்படுத்தி, அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் உடனடியாக மாற்று இருக்கைகளும் வழங்கப்பட்டதாக ஏர் இந்தியா செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். அவர் மேலும், கூறுகையில், "இந்தச் சம்பவம் கடந்தாண்டு செப். மாதம் நடந்தது. விமானம் லண்டனில் தரையிறங்கியதும், குற்றம் சாட்டப்பட்டவர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். ஏர் இந்தியா கேபின் குழுவினர் தங்கள் வாக்குமூலத்தை போலீசாரிடம் அளித்தனர். சிவில் ஏவியேஷன் துறைக்கும் இது குறித்துத் தெரிவிக்கப்பட்டது

 தாய் புகார்

தாய் புகார்

சம்மந்தப்பட்ட பயணி தொடர்ந்து கட்டுப்பாடு இல்லாமல் முறையற்று நடந்துகொண்டதால், விமானி முதலில் அந்த பயணியை எச்சரித்தார். இருந்த போதும் அவர் அமைதியாக இருக்காமல் தொடர்ந்து அத்துமீறி நடந்து கொண்டார்.. இதனால் ​​கட்டுப்படுத்த ரிஸ்டெய்னிங் சாதனம் பயன்படுத்தப்பட்டது" என்று அவர் தெரிவித்தார். இருப்பினும், இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் நேர்மாறான தகவல்களைத் தெரிவித்துள்ளார். ஏர் இந்தியா குழு இந்த பிரச்சினையை முறையாகக் கையாளவில்லை என்றும் புகார் அளித்த போதும் உரிய நடவடிக்கை இல்லை என்றும் அவர் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

 அளவு கடந்து மது

அளவு கடந்து மது

சிறுமியின் தாயார் அளித்த எழுத்துப்பூர்வ புகாரில், "20 வயதான எனது மகனும், 8 வயதான எனது மகளும் குடிபோதையில் இருந்த ஒரு நபரால் பல சிரமங்களை எதிர்கொண்டனர். எனது மகளிடம் அந்த நபர் தகாத முறையில் நடந்து கொள்ளப் பார்த்தார். அந்த நபருக்கு ஏர் அந்தியா ஊழியர்கள் அதிகப்படியான மதுவைக் கொடுத்தனர். அவர் குடிபோதையில் இருப்பது தெளிவாகத் தெரிந்தும் கூட அவர்கள் மதுவைக் கொடுத்துக் கொண்டே இருந்தனர். அவர் போதையில் இருந்ததால்.. மது கொடுப்பதை நிறுத்தியிருக்க வேண்டும். ஆனால், குழுவினர் அப்படிச் செய்யவில்லை..

 என்ன நடந்தது

என்ன நடந்தது

விமானத்தில் இருந்த பொழுதுபோக்கு சாதனம் வேலை செய்யவில்லை. இதனால் தூங்கிவிட்டான். அவன் விழித்தபோது, ​​​​பின்னால் அமர்ந்திருந்த பெண் குடிபோதையில் இருந்த நபர் சிறுமியிடம் அத்துமீற முயல்வதைப் பற்றிக் கூறினார். என் மகளின் அருகில் அமர்ந்திருந்தவர் அளவு கடந்து குடித்திருந்தார். அவர் என் மகளைத் தவறான இடங்களில் தொட முயன்றார்.. எனது மகளுக்கு மிக அருகே அமர்ந்திருந்தார். இதைக் கண்டு கோபமடைந்த எனது மகன் அந்த நபரிடம் கேள்வி எழுப்பினார். உடனே அந்த நபர் எனது மகனையும் மகளையும் திட்ட ஆரம்பித்தான். ஏர் இந்தியா ஊழியர்களிடமும் இது குறித்து எனது மகன் தெரிவித்தான்.

 உதவவில்லை

உதவவில்லை

ஆனால், அவர்கள் எந்த செய்யவில்லை. எனது மகனிடம் குடிபோதையில் அந்த பயணி அத்துமீற முயல்வதைப் பெண்தான், எனது மகனையும் மகளையும் வேறு இருக்கைக்கு மாற்ற உதவினார்" என்று புகார் கூறப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த விவகாரத்தில் முறையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பை வழங்கி வருவதாகவும் ஏர் இந்தியா தெரிவித்துள்ளது. ஏற்கனவே மதுபோதையில் சக பயணி மீது சிறுநீர் கழித்த விவகாரம் பூதாகரமாகியுள்ள நிலையில், இதுவும் ஏர் இந்தியாவுக்குத் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+