எல்கே அத்வானி டிஸ்சார்ஜ்.. எய்ம்ஸில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.. அட்மிட்டானது ஏன்?
டெல்லி: பாஜக மூத்த தலைவரும், முன்னாள் துணை பிரதமருமான அத்வானி உடல்நலக் குறைவால் நேற்று இரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் தான் சிகிச்சை முடித்து அவர் இன்று மதியம் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் தான் அவருக்கு என்ன பிரச்சனை ஏற்பட்டது? என்பது பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.
பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவர் எல்கே அத்வானி. இந்தியாவில் பாஜக வளர மிகவும் முக்கியமாக இருந்த தலைவர்களில் இவரும் ஒருவர். இவர் தற்போது பாகிஸ்தானில் உள்ள கராச்சி நகரில் பிறந்தவர்.

ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் தீவிரமாக செயல்பட்ட அத்வானி பாஜகவின் தேசிய தலைவராக நீண்டகாலம் பதவி வகித்தவர். அயோத்தி ராமர் கோவில் பிரச்சனையில் ரதயாத்திரையை அத்வானி தான் தலைமையேற்று நடத்தினார். வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது இவர் துணை பிரதமராக பொறுப்பு வகித்தார்.
தற்போது டெல்லியில் வசித்து வருகிறார் எல்கே அத்வானி. 96 வயது நிரம்பிய எல்கே அத்வானிக்கு கடந்த 2019 லோக்சபா தேர்தலில் பாஜக சீட் வழங்கவில்லை. வயது முதிர்வு காரணமாக தீவிர அரசியலில் இருந்து அவருக்கு ஓய்வு வழங்கப்பட்டது. இதையடுத்து எல்கே அத்வானி டெல்லியில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார்.
இத்தகைய சூழலில் தான் திடீரென்று நேற்று எல்கே அத்வானிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் உடனடியாக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டெல்லி எய்ம்ஸ் மருத்துவக் குழுவினர் அத்வானிக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில் தான் எல்கே அத்வானி உடல்நலம் குறித்த முக்கிய அப்டேட் கிடைத்துள்ளது.
அதாவது எல்கே அத்வானிக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் சிறுநீரகவியல் துறையை சேர்ந்த டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்போது எல்கே அத்வானியின் உடல்நலம் சீராக உள்ளது. தொடர்ந்து அவர் மருத்துவக்குழுவால் கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் எந்த மாதிரியான உடல்நலக்குறைவால் அத்வானி பாதிக்கப்பட்டுள்ளார் என்பது பற்றிய விபரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
சிறுநீரகவியல் துறையை சேர்ந்த டாக்டர்கள் எல்கே அத்வானிக்கு சிகிச்சை அளித்து கண்காணிக்கின்றனர் என்பது மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது எல்கே அத்வானி எய்ம்ஸ் மருத்துவமனையின் முதியோருக்கு சிகிச்சை அளிக்கப்படும் தனிப்பிரிவில் டாக்டர்கள் கண்காணிப்பில் இருந்தார்.
இந்நிலையில் தான் இன்று மதியம் மருத்துவமனையில் இருந்து எல்கே அத்வானி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். அவர் உடல்நல பாதிப்பு சரியான நிலையில் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுபற்றி எய்ம்ஸ் மருத்துவமனை தரப்பில், ‛‛எல்கே அத்வானி வயது முதிர்வு தொடர்பான பிரச்சனைகளால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது உடல்நலம் தேறிய நிலையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்'' என தெரிவித்துள்ளது.
மருத்துவ சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ள எல்கே அத்வானிக்கு 2015ல் பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டுள்ளது. சமீபத்தில் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. அத்வானிக்கு வயது முதிர்ந்துள்ள நிலையில் ஜனாதிபதி திரெளபதி முர்மு, பிரதமர் மோடி ஆகியோர் நேரடியாக வீட்டுக்கே சென்று எல்கே அத்வானிக்கு பாரத ரத்னா விருது வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications