நித்தியானந்தா சாமியாரின் உடல்நிலை பற்றிய வதந்தி! உறவினர் மறுப்பு
டெல்லி: கைலாசாவில் இருப்பதாக சொல்லப்படும் நித்தியானந்தா சாமியாரின் உடல்நிலை குறித்து உறுதி செய்யப்படாத தகவல்கள் பரவிய நிலையில் அவை வதந்தி என அவருடைய உறவினர் மறுத்துள்ளார்.
திருவண்ணாமலையைச் சேர்ந்த நித்தியானந்தா, கர்நாடக மாநிலம் பிடதிக்குச் சென்று ஆசிரமம் அமைத்தார். பல்வேறு இடங்களில் ஆசிரமங்களை நிறுவிய அவர், ஒரு நடிகையுடன் தனிமையில் இருந்ததாக வீடியோ வெளியானதால் சர்ச்சையில் சிக்கினார். பின்னர், பெண் சீடர்களைத் தவறாக நடத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. பெங்களூரில் பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், அவர் தலைமறைவானார்.

கைலாசா என்ற தனித் தீவை உருவாக்கியிருப்பதாக அறிவித்த நித்தியானந்தா, அங்கு இந்துக்களுக்கான நாடு என்றும், தனி கரன்சி, பாஸ்போர்ட், கொடி ஆகியவற்றை உருவாக்கியிருப்பதாகவும் தெரிவித்தார். தொழில் தொடங்க வருமாறு தமிழக மக்களுக்கு அழைப்பு விடுத்தார்.
கடந்த 5 ஆண்டுகளாக சத்சங்க வீடியோக்களைக் குறைத்த நித்தியானந்தா, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கூட அவர் ஜீவசமாதி அடைந்துவிட்டதாக வதந்திகள் பரவின. ஆனால், அவர் மீண்டும் வீடியோ வெளியிட்டார்.
சிவராத்திரி விழாவில் அவர் பேசிய வீடியோ வைரலானது. எனினும், அது பழைய வீடியோ என பலர் கருத்து தெரிவித்ததால், அந்தப் பிரசங்கம் நிறுத்தப்பட்டது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அது நிறுத்தப்பட்டதாகக் கூறப்பட்டது.
இந்நிலையில், நித்தியானந்தாவின் உடல்நிலை குறித்து இன்று காலை முதலே உறுதிப்படுத்தப்படாத பல்வேறு தகவல்கள் பரவின. இந்த நிலையில் அவை வதந்தி என நித்தியானந்தாவின் உறவினர் தெரிவித்துள்ளார்.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications