அன்லாக் 2.0!.. ஜூலை 31 வரை பள்ளி, கல்லூரிகளுக்கு தடை.. நோ சினிமா.. நோ என்டர்டெயின்மென்ட்
டெல்லி: நாடு முழுவதும் இன்று முதல் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த சேவைகளுக்கு தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் ஜூலை 31-ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டது. அப்போது சில தளர்வுகளையும் மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அது போல் சில சேவைகளுக்கு தொடரும் தடைகளையும் வெளியிட்டுள்ளது.

எந்தெந்த சேவைகளுக்கு தடைகள் தொடரும், எந்தெந்த சேவைகளுக்கு தளர்வுகள் என்பதை பார்ப்போம்.
ஜூலை 31ம் தேதி வரை பள்ளி, கல்லூரிகள் செயல்பட தடை.
மத்திய மற்றும் மாநில அரசின் பயிற்சி மையங்கள் வரும் ஜூலை 15 ம் தேதியில் இருந்து செயல்பட அனுமதி அளிக்கப்படும். மெட்ரோ ரயில்கள் இயங்காது. மத்திய அரசு அனுமதித்ததை தவிர சர்வதேச விமான போக்குவரத்துக்கு தடை தொடரும். சினிமா ஹால்கள், ஜிம்னாசிசம்ஸ், நீச்சல்குளம், பார்க்குகள், தியேட்டர், பார்கள், ஆடிட்டோரியம், கூட்டம் நடக்கும் இடங்கள் ஆகியவற்றுக்கு தடை தொடரும்.
அது போல் அரசியல் கூட்டம், விளையாட்டுகள், விழாக்கள் , கலாச்சார நிகழ்வுகள், மதக்கூட்டங்களுக்கு தடை தொடரும். இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை பொதுமக்கள் வீட்டை வெளியே வர தடை. 65வயதுக்கு மேல் உள்ளவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள் வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
கட்டுப்பாட்டு பகுதிகளில் அடிப்படை விஷயங்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படும். கட்டுப்பாட்டு பகுதிகளில் மக்கள் கடுமையான கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும். மாநிலங்களில் இருக்கும் நிலவரங்களை பொருத்து மாநில அரசுகள் கட்டுப்பாட்டு பகுதிக்கு வெளியிலும் கட்டுப்பாடுகளை கொண்டு வரலாம். இதுவரை அனுமதிக்கப்பட்ட சிறப்பு ரயில்கள், சிறப்பு விமானங்களுக்கு அனுமதி தொடரும். அலுவலகங்களில் ஆரோக்ய செயலியை பயன்படுத்துவது கட்டாயம் என தெரிவித்துள்ளது.
-
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
2047ல் இந்தியா வல்லரசு.. வாய்ப்பில்லை ராஜா! இன்னும் 34 வருஷமாகும்.. உண்மையை உடைத்த ஆய்வறிக்கை! -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா












Click it and Unblock the Notifications