பட்டு பட்டுனு சரியும் இளைஞர்கள்.. மாரடைப்பு அதிகரிக்க உண்மையில் என்ன காரணம்? மன்சுக் மாண்டவியா பரபர
டெல்லி: சமீப காலமாக இளைஞர்கள், நல்ல நிலையில் உள்ளவர்களுக்கும் திடீர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு வருகிறது. கொரோனா பாதிப்பே இதற்குக் காரணம் என்று சொல்லப்பட்ட நிலையில், இது குறித்து சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
கடந்த 2020 இறுதியில் பரவ தொடங்கிய கொரோனா பாதிப்பு, அதன் பின்னர் உலகெங்கும் காட்டு தீ போலப் பரவியது. அமெரிக்கா தொடங்கி ஆஸ்திரேலியா வரை அனைத்து நாடுகளும் கொரோனாவால் பாதித்தது.
ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளால் உலக நாடுகள் மிகப் பெரிய நஷ்டத்தை எதிர்கொண்டது. இந்த பாதிப்பில் இருந்து நாம் இப்போது தான் மெல்ல மீண்டு வருகிறோம்.

கொரோனா
கொரோனா வேக்சின் உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகள் காரணமாகவே நாம் இப்போது வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளோம். இந்தியாவில் கடந்த சில காலமாகவே கொரோனா பாதிப்பு கட்டுக்குள் தான் இருந்தது. தினசரி வைரஸ் பாதிப்பு சில நூறுக்கும் குறைவாகவே இருந்தது. ஆனால், கடந்த சில நாட்களாக நிலைமை மெல்ல தலைகீழாக மாறி வருகிறது. இன்று மட்டும் தினசரி வைரஸ் பாதிப்பு 3038ஆக உயர்ந்துள்ளது. அதேபோல ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கையும் 21 ஆயிரத்தை எட்டியுள்ளது.

மன்சுக் மாண்டவியா
இது பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது மீண்டும் ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகள் வருமோ என்று மக்கள் அச்சத்தில் உள்ளனர். இதனிடையே அதிகரிக்கும் கொரோனா குறித்து மத்திய சுகாதார துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். பிரபல ஆங்கில ஊடகத்திற்கு அவர் அளித்த பேட்டியில், "கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாறிக் கொண்டே வருகிறது. இந்தியாவில் இதுவரை 214 வேரியண்ட்கள் கண்டறியப்பட்டுள்ளது. இப்போது கொரோனா அதிகரிக்கும் நிலையில், அதைச் சமாளிக்க அரசு தயாராகவே இருக்கிறது.

தயார் நிலை
ஐசியு படுக்கைகள், ஆக்ஸிஜன் சப்ளை உள்ளிட்ட தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து தரப்பையும் தயார்நிலையில் இருக்க அறிவுறுத்தியுள்ளோம். இது குறித்து வாராந்திர கூட்டங்களும் நடந்து வருகிறது. கொரோனா எப்படி நடந்துகொள்ளும் என்பதைக் கணிக்க முடியாது. இருப்பினும், இப்போது வைரஸ் பாதிப்பை அதிகரிக்கும் துணை வேரியண்ட்கள், எந்தவொரு மோசமான பாதிப்பையும் ஏற்படுத்தாது. அவை ஆபத்தானவை இல்லை" என்று அவர் தெரிவித்தார்.

மாரடைப்பு
சமீப காலமாக இளைஞர்கள், நல்ல நிலையில் உள்ளவர்களுக்கும் திடீர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு வருகிறது. கொரோனா பாதிப்பே இதற்குக் காரணம் என்று சொல்லப்பட்ட நிலையில், இது குறித்த கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர், "கொரோனா வைரஸ் காரணமாக மாரடைப்பு அதிகரிக்கிறதா என்பதைக் கண்டறிய ஆய்வுகளை நடத்தி வருகிறோம். கொரோனாவுக்கும் இளைஞர்கள் மத்தியில் மாரடைப்பு அதிகரிப்பிற்கும் இடையே இருக்கும் தொடர்பைக் கண்டறிய ஆய்வுக் குழுவை அமைத்துள்ளோம். இரண்டு, மூன்று மாதங்களில் இதில் எங்களுக்கு அறிக்கை கிடைக்கும்.

ஆய்வு
பல இளைஞர்கள், விளையாட்டு வீரர்கள் மேடையிலேயே சரிந்து விழுந்து உயிரிழப்பதைப் பார்த்துள்ளோம். இது குறித்துப் பல இடங்களில் இருந்து அறிக்கைகள் வர ஆரம்பித்துள்ளன. இந்த விஷயத்தில் விரிவான ஆய்வு செய்யவுள்ளோம்" என்றார். தொடர்ந்து 4ஆம் கொரோனா அலை குறித்துப் பேசிய அவர், "நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய அவசியம். கடைசியாக ஓமிக்ரான் BF.7 துணை வேரியண்ட் காரணமாகவே கொரோனா அலை ஏற்பட்டது. அடுத்து இப்போது XBB1.16 காரணமாக வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளது. ஆனால், இந்த வேரியண்ட் மிகவும் ஆபத்தானது இல்லை

வேக்சின்கள்
புதிய வேரியண்ட்கள் கண்டறியப்பட்டால், அதைத் தனிமைப்படுத்துகிறோம். அதன் பிறகு, அந்த குறிப்பிட்ட வேரியண்டிடம் வேக்சின்கள் எந்தளவுக்குப் பலன் தருகிறது என்பதை ஆய்வு செய்கிறோம். இதுவரை, அனைத்து வேரியண்ட்களுக்கு எதிராகவும் நமது வேக்சின்கள் வேலை செய்துள்ளன. கோவின் தளத்தில் வேக்சின் பணிகள் குறித்த அனைத்து டேட்டாக்களும் உள்ளன. இவை நமக்குப் பெரியளவில் உதவுகிறது. நீண்ட காலம் கொரோனா இருப்பவர்களுக்குப் பக்கவாதம் ஏற்படும் ஆபத்து குறித்து ஆய்வு செய்து வருகிறோம்" என்றார்.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications