"சீனாவில் பரவுவது ஒரு வைரஸ் இல்லை.. பல வைரஸ்களின் காக்டெய்ல்!" அலர்ட் தரும் மத்திய சுகாதார துறை
டெல்லி: சீனாவில் திடீரென சுவாச நோய்ப் பாதிப்பு மின்னல் வேகத்தில் அதிகரித்துள்ள நிலையில், இது தொடர்பாக மத்திய அரசு வட்டாரங்கள் முக்கிய விளக்கம் ஒன்றை அளித்துள்ளது.
கடந்த 2019இல் சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா ஒட்டுமொத்தமாக உலகைப் புரட்டிப் போட்டது. அதன் பிறகு நாம் அதில் இருந்து மீண்டு வரவே சில ஆண்டுகள் வரை ஆனது. இதனால் ஏற்பட்ட உயிரிழப்புகளும் பொருளாதார இழப்பும் ரொம்பவே அதிகம்

கொரோனாவின் தோற்றமே இதுவரை மர்மமாகவே இருந்து வரும் நிலையில், சீனாவில் புதுவித பாதிப்பு பரவ தொடங்கியுள்ளது. சீனாவில் பெய்ஜிங் மற்றும் லியோனிங் ஆகிய இரு பகுதிகளிலும் நிமோனியா பாதிப்பு அதிகரித்துள்ளது.
சீனா பாதிப்பு: இதனால் அங்கே மீண்டும் மருத்துவமனைகளை நோக்கி மக்கள் படையெடுக்க ஆரம்பித்துள்ளனர். இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பும் கூட சீனாவிடம் விளக்கம் கேட்டது. இருப்பினும், சீன மருத்துவர்கள் அசாதாரண பாதிப்பு எதுவும் இல்லை என்று தெரிவித்தனர்.
சீனாவில் இப்படி சுவாச நோய்ப் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், இது குறித்து மத்திய அரசு இப்போது விளக்கம் கொடுத்துள்ளது. சீனாவில் குழந்தைகளிடையே ஏற்பட்டுள்ள H9N2 பாதிப்பு குறித்து உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இகு குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சீனாவில் ஏற்பட்டுள்ள பறவைக் காய்ச்சல் மற்றும் சுவாச நோய்கள் பாதிப்பு ஆகிய இரண்டாலும் இந்தியாவுக்கு ஏற்படும் ஆபத்து மிகக் குறைவு.. எதாவது சிக்கல் ஏற்பட்டாலும் அதைச் சமாளிக்க இந்தியா தயாராகவே உள்ளது" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
வைரஸ்கள் காக்டெய்ல்: மேலும், இது தொடர்பாக சுகாதார வட்டாரங்கள் கூறுகையில், "சீனாவில் இப்போது இருக்கும் சூழல் குறித்து ஆய்வு செய்து வருகிறோம். எங்களுக்குக் கிடைத்த தகவல்களை வைத்து பார்க்கும் போது, அவை வைரஸ்களின் காக்டெய்ல் போல இருக்கிறது. இதுவே சீனாவில் அதிகப்படியான பேருக்குப் பாதிப்பு ஏற்படக் காரணமாக இருக்கிறது. கொரோனா வைரஸ் போல இது ஜூனோடிக் வைரஸ் இல்லை" என்றார். அதாவது ஒரு வைரசால் மட்டும் சீனாவில் திடீரென நிமோனியா பாதிப்பு அதிகரிக்கவில்லை. பல வகை வைரஸ்கள் ஒரே நேரத்தில் பரவுவதே இதற்குக் காரணம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்,
அதென்ன ஜூனோடிக் வைரஸ்: அதாவது கோவிட் 19ஐ ஏற்படுத்திய கொரோனா வைரஸ் என்பது விலங்கிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவிய ஒரு வைரஸ் ஆகும். அதைத்தான் ஆய்வாளர்கள் ஜூனோடிக் வைரஸ் என்று அழைக்கிறார்கள். சீனாவில் இப்போது திடீரென நிமோனியா பாதிப்பு அதிகரித்த நிலையில், எங்கு மீண்டும் கொரோனாவை போன்ற பாதிப்பு ஏற்படுமோ என்று ஆய்வாளர்கள் அஞ்சினர். இருப்பினும், அவை கொரோனா போன்றது இல்லை என்று இப்போது மத்திய அரசு வட்டாரங்கள் கூறியுள்ளது.
கடந்த சில வாரங்களாகவே சீனாவில் திடீரென சுவாச நோய்கள் பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக குழந்தைகளிடையே இந்த பாதிப்பு மிக மோசமாக இருந்துள்ளது. அதேநேரம் அங்கே அசாதாரணமான நோய்க்கிருமி அல்லது எதிர்பாராத பாதிப்புகள் எதுவும் இதுவரை அந்நாட்டு மருத்துவர்கள் கண்டறியவில்லை. உலக சுகாதார அமைப்பிடமும் அவர்கள் இதையே கூறியுள்ளனர்.
இது ஒரு பக்கம் இருக்க அங்கே கடந்த மாதம் முதல் H9N2 எனப்படும் பறவை காய்ச்சலும் அதிகரித்துள்ளது. இவை குறித்து சமீபத்தில் மத்திய அரசு அதிகாரிகள் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்ற நிலையில், அதன் பின்னரே இந்த விளக்கத்தை மத்திய அரசு கொடுத்துள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications