Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அது என்ன அக்னிபாத் திட்டம்? நாடு முழுக்க பரவிய போராட்டம்.. இந்த 10 பாயிண்ட்ஸ் படிங்க ஈஸியா புரியும்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக நாடு முழுக்க பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், பீகார், ஹரியானா, டெல்லி, மேற்கு வங்கம், தெலுங்கானா என்று நாடு முழுக்க பல மாநிலங்களில் போராட்டங்கள் நடக்கின்றன.

ஒரு பக்கம் காங்கிரஸ் சார்பாக போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இன்னொரு பக்க இளைஞர்கள் பலர் இந்த திட்டத்தை விமர்சனம் செய்து தன்னிச்சையாக போராடி வருகிறார்கள். அது என்ன அக்னிபாத் திட்டம் பார்க்கலாம்.

 என்ன திட்டம்?

என்ன திட்டம்?

1. இந்திய ராணுவத்தில் இதுவரை நேரடி தேர்வு முறை மூலம் வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அவர்கள் பணிக்கு சேர்ந்து 60 வயது வரை பணியில் இருக்க அனுமதிக்கப்படுவார்கள். அதாவது ரிட்டையர் ஆகும் வரை பல்வேறு ரேங்குகளில் பணியில் இருக்க முடியும்.

2. ஆனால் இந்த அக்னிபாத் திட்டத்தின் கீழ் ஒருவர் 4 ஆண்டுகள் ராணுவத்தில் குறுகிய கால வீரராக (முப்படையில் ஏதாவது ஒன்றில்) சேர முடியும். 4 வருட பணியில் 6 மாதம் இவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும்.

3. பெண்கள், ஆண்கள் இரு பாலினரும் சேர முடியும் 17.5 - 21 வயது கொண்டவர்களுக்கு மட்டும் அனுமதி. 10 அல்லது 12 வது வரை குறைந்தபட்சம் படித்து இருக்க வேண்டும்

அக்னிபாத்

அக்னிபாத்

4. இந்த திட்டத்தின் மூலம் சேரும் வீரர்களுக்கு முதல் வருடம் மாதம் 30 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். வருடம் செல்ல செல்ல சம்பளம் உயர்த்தப்படும். கடைசி வருடம், அதாவது 4வது வருடம் 40 ஆயிரம் ரூபாய் மாதம் சம்பளம் தரப்படும்.

5. மொத்தமாக 4 வருடங்கள் கழித்து இந்த வீரர்களில் 25 சதவிகிதம் பேர் வரை ராணுவத்தில் நிரந்தரமாக 15 வருட ஒப்பந்தத்தில் சேர அனுமதிக்கப்படுவார்கள். விருப்பம் இல்லை என்றால் 4 வருடத்திற்கு பின் வெளியேறலாம் விருப்பம் உள்ளவர்கள் நிரந்தரமாக சேர விண்ணப்பிக்கலாம். ஆனால் அங்குதான் ஒரு செக் உள்ளது.

தகுதி என்ன?

தகுதி என்ன?

6. இதில் தகுதியானவர்கள் மட்டுமே 4 வருடத்திற்கு மேல் நிரந்தரமாக 15 வருடம் பணியாற்ற தேர்வு செய்யப்படுவர். இவர்கள் ஆபிசர் அல்லாத ரேங்கில் நிரந்தர பணிக்கு அமர்த்தப்படுவார்கள் என்று மத்திய பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.

7. 4 வருடத்தில் முதல் 6 மாதம் பயிற்சி அளிக்கப்படும். அதற்கு சம்பளம் உண்டு . தனிப்பட்ட இன்சூரன்ஸ், மெடிக்கல் இன்சூரன்ஸ் வழங்கப்படும். இந்த 4 வருட ராணுவ பணி காலத்தில், ஏதாவது ராணுவ சண்டையில் காயங்கள் ஏற்பட்டால் அதற்கு 44 லட்சம் ரூபாய் வரை, காயத்தை பொறுத்த நிவாரணமாக வழங்கப்படும். 4 வருடம் முடித்து செல்லும் போது அவர்களுக்கு 11.7 லட்சம் ரூபாய் மொத்தமாக தரப்படும்.

 ஏன் போராட்டம்

ஏன் போராட்டம்

8. சரி நன்றாகத்தானே இருக்கிறது. இதற்கு ஏன் போராட்டம் என்று கேட்கலாம்.. இதை காங்கிரஸ் எதிர்க்க காரணம். ராணுவத்தில் ஒப்பந்த வீரர்கள் வந்தால் ராணுவத்தின் திறன் பாதிக்கப்படும். ராணுவ வீரர்களின் திறன் பாதிக்கப்படும். இந்த திட்டம் காரணமாக ராணுவத்தில் ஒழுங்கு கெட்டுவிடும். அதேபோல் 4 வருடத்திற்கு பின் வெளியே வரும் அக்னி வீரர்கள் வேலை இன்றி கஷ்டப்படுவார்கள். இவர்களை தீவிரவாத இயக்கங்கள் அணுக வாய்ப்பு உள்ளது. பாதுகாப்பு ரீதியாகவும், வேலைவாய்ப்பு ரீதியாகவும் பல சிக்கல்களை இது ஏற்படுத்தும் என்று கூறி உள்ளனர்.

9. இளைஞர்கள் இதை எதிர்க்க காரணம் நிறைய உள்ளது. 4 வருடம் கழித்து இந்த இளைஞர்கள் என்ன வேலை பார்ப்பார்கள்? அவர்கள் எங்கே போவார்கள் என்ற கேள்வி. அதே சமயம் இவர்களுக்கு பென்ஷன் இல்லை. அதனால் 4 வருடம் வேலை பார்த்தும் புண்ணியம் இல்லை. இதில் வருமானம் குறைவாக இருப்பதும் ஒரு காரணம்.

மாற்றம் செய்யப்பட்டது

மாற்றம் செய்யப்பட்டது

10. இதில் வயது வரம்பு 21 வரை இருந்ததை எதிர்த்தும் இளைஞர்கள் நேற்று போராட்டம் செய்தனர். இதையடுத்து அக்னிபாத் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் சேர்க்கப்படுவதற்கான வயது வரம்பு 23 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் 2022ம் ஆண்டு நியமனத்திற்கு மட்டுமே இந்த வயது வரம்பு பொருந்தும் என்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வடஇந்தியாவில் தொடர்ந்து வரும் போராட்டங்களுக்கு இடையில் வயது வரம்பு உயர்த்தப்பட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+