Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அதென்ன "ஆர்டிகிள் 142.." சண்டிகர் மேயர் தேர்தல் வழக்கில் உச்சபட்ச பவரை பயன்படுத்திய சுப்ரீம் கோர்ட்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: சண்டிகர் மேயர் தேர்தல் முடிவுகள் செல்லாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் 142வது பிரிவைப் பயன்படுத்தி இருக்கிறது. அதென்ன 142வது பிரிவு.. இது ஏன் தனித்துவமானது என்பது குறித்து நாம் இதில் பார்க்கலாம்.

சண்டிகரில் கடந்த மாதம் மேயர் தேர்தல் நடந்த நிலையில், அதில் ஆம் ஆத்மி- காங்கிரஸின் இந்தியா கூட்டணி வேட்பாளராக குல்தீப் குமார் களமிறக்கப்பட்டார். அவருக்கு எதிராக பாஜக சார்பில் மனோஜ் சோன்கர் போட்டியிட்டார்.

What is article 142 that supreme court exercised in chandigarh mayor election

இதில் இந்தியா கூட்டணிக்குத் தேவையான கவுன்சிலர்கள் ஆதரவு இருந்ததால் அவர் எளிதாக வெல்வார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், தேர்தல் முடிவுகள் வெளியான போது அனைவருக்கும் அதிர்ச்சி.. ஏனென்றால் பாஜக வேட்பாளர் மனோஜ் சோங்கர் வென்றதாக அறிவிக்கப்பட்டது.

தேர்தல் முடிவு: ஆம் ஆத்மி கட்சி கவுன்சிலர்கள் 8 பேரின் வாக்குகள் செல்லாது என அறிவிக்கப்பட்ட சூழலில், பாஜக வேட்பாளர் மனோஜ் சோங்கர் 4 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார் என்று தேர்தல் நடத்தும் அதிகாரி அனில் மசிஹ் அறிவித்தார். தேர்தலில் முறைகேடு நடந்ததாக ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கூறிய நிலையில், இது தொடர்பாக குல்தீப் குமார் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று மிக முக்கியமான தீர்ப்பை வழங்கியது. தேர்தல் அதிகாரி அனில் மசிஹ் அறிவித்த தேர்தல் முடிவை ரத்து செய்த சுப்ரீம் கோர்ட், ஆம் ஆத்மி மேயர் வேட்பாளர் குல்தீப் குமார் வென்றதாக அறிவித்தது.

அரிய நிகழ்வு: பொதுவாக இதுபோன்ற வழக்குகளில் நீதிமன்றம் மறுவாக்கு எண்ணிக்கைக்குத் தான் உத்தரவிடும். ஆனால், அரிய நிகழ்வாக உச்ச நீதிமன்றமே சண்டிகர் மேயர் தேர்தலில் பாஜக வேட்பாளரின் வெற்றி செல்லாது என்றும் ஆம் ஆத்மி வேட்பாளர் குல்தீப் குமார் வென்றதாக உச்ச நீதிமன்றம் அறிவித்து. இந்திய அரசியலமைப்பின் 142வது பிரிவின் கீழ் முழு அதிகாரத்தைப் பயன்படுத்தி உச்ச நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியது.

அரசியலமைப்பின் இந்த குறிப்பிட்ட 142ஆம் பிரிவு என்பது சுப்ரீம் கோர்ட்டிற்கு மட்டும் இருக்கும் தனித்துவமான அதிகாரம் ஆகும். நாட்டில் வேறு எந்த நீதிமன்றத்திற்கும் இந்த 142ஆம் பிரிவைப் பயன்படுத்த அதிகாரம் இல்லை. இந்த பிரிவு பாதிக்கப்பட்ட தரப்பிற்கு "முழுமையான நீதியை" வழங்க உச்ச நீதிமன்றத்திற்கு வழிவகை செய்யும் ஒரு தனித்துவமான அதிகாரத்தை வழங்குகிறது. சில வழக்குகளில் சரியான தீர்வு வழங்க முடியாத சூழல்களில் இந்த விதி பயன்படுத்தப்படும்.

சட்டப்பிரிவு 142: இதுபோன்ற வழக்குகளில் சுப்ரீம் கோர்ட் இந்த 142ஆம் பிரிவைப் பயன்படுத்தி உண்மை எதுவோ அதற்கேற்ப பொருந்தக்கூடிய வகையில் தீர்ப்பு அளித்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும். இந்த 142ஆம் பிரிவைப் பயன்படுத்தித் தீர்ப்பு வழங்கப்படுவது இது முதல்முறை இல்லை. ஏற்கனவே கடந்த காலங்களிலும் பல முறை இந்த 142ஆம் பிரிவைப் பயன்படுத்தி சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது.

இருப்பினும், பொதுவாக இதுபோன்ற வழக்குகளில் நீதிமன்றம் மறுவாக்கு எண்ணிக்கைக்கே உத்தரவிடும் நிலையில், நேரடியாக சுப்ரீம் கோர்ட் 142ஆம் பிரிவு தனக்கு வழங்கிய அதிகாரத்தைப் பயன்படுத்தி சண்டிகர் மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி வேட்பாளர் குல்தீப் குமார் வென்றதாக அறிவித்துள்ளது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+