இனி தட்கல் டிக்கெட் எடுப்பது ரொம்பவே ஈஸி..பயணிகள் செம குஷி..ஆனா கடைசியில் பாருங்க ஒரு சின்ன ட்விஸ்ட்
டெல்லி: ரயில் பயணிகளுக்குப் பேருதவியாக இருக்கும் வகையில் ஒரு அட்டகாசமான முன்னெடுப்பை ரயில்வே நிர்வாகம் எடுத்துள்ளது.. இது ரயில் பயணிகள் அனுபவத்தை மேம்படுத்தும் என்பதில் சந்தேகமே இல்லை.
இப்போது நம்மில் பெரும்பாலானோர் ரயில் டிக்கெட்களை ஆன்லைன் மூலமாகவே முன்பதிவு செய்கிறோம். ஆனால், ஒரு டிஆர்சிடி தளத்தில் ஒரு டிக்கெட் எடுப்பது ஒன்னும் அவ்வளவு ஈஸியான காரியம் இல்லை.

அதுவும் குறிப்பாகப் பொங்கல், தீபாவளி உள்ளிட்ட நாட்களில் தட்கலில் டிக்கெட் போட வேண்டும் என்றால் நாம் தலைகீழாக நின்று தண்ணீர் குடிக்க வேண்டி இருக்கும். அந்தளவுக்கு ரயில் டிக்கெட் முன்பதிவு கடினமான ஒன்றாகவே இருக்கிறது
ரயில் டிக்கெட்: மிக விரைவில் ரயில் டிக்கெட்களை முன்பதிவு செய்யவும் ரயில்கள் எங்கே இருக்கிறது.. சரியான நேரத்தில் ரயில்கள் பயணிக்கிறதா என்பதைக் கண்காணிக்கவும் ஒரே செயலி வரவுள்ளது. இப்போது ரயில் டிக்கெட்களை மொபைலில் முன்பதிவு செய்ய ஐஆர்சிடிசி தளம் பயன்படுத்தப்படுகிறது. அதேநேரம் ரயில்கள் எங்கே இருக்கிறது என்பதைக் கண்டறிய என்டிஇஎஸ் என்ற செயலியைப் பயன்படுத்துகிறோம்.
இப்படி இந்தியன் ரயில்வே பல செயலிகளைக் கொண்டுள்ளது. இதற்கிடையே இந்த பல செயலிகளின் வேலையை ஒருங்கிணைத்து 'சூப்பர் ஆப்' ஒன்றை இந்தியன் ரயில்வே அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. இது குறித்து மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், "டிக்கெட் எடுக்கத் தனி செயலி, ரயில் எங்கே இருக்கிறது என்பதைக் கண்டறியத் தனி செயலி என ஒவ்வொரு சேவைக்கும் இப்போது ரயில் பயணிகள் தனித் தனி செயலிகளைப் பதிவிறக்கம் செய்ய வேண்டி உள்ளது.
சூப்பர் ஆப்: ஆனால், இந்த சூப்பர் ஆப் அந்த பிரச்சினையைச் சரி செய்துவிடும்.. அனைத்து வகையான ரயில் சேவைகளையும் ஒருங்கிணைத்து ஒரே இடத்தில் தருவதன் மூலம் இது பயணிகள் அனுபவத்தை மேம்படுத்த எடுக்கப்படும் முயற்சி.. இதன் மூலம் ஒரு இடத்தில் பல சேவைகளை நாம் பெற முடியும். இந்த ஒருங்கிணைந்த செயலியை ரயில்வே அமைச்சகத்தின் தகவல் தொழில்நுட்பப் பிரிவான CRIS டெவலப் செய்யும்.
இந்த செயலிகளில் ஐஆர்சிடிசி செயலி தான் பிரபலமானது. ரயில் டிக்கெட்களை முன்பதிவு செய்யப் பயன்படும் இந்த செயலியை இதுவரை 100 மில்லியனுக்கும் அதிகமானோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். பயணிகள் புகார் அளிக்கப் பயன்படும் Rail Madad, உள்ளூர் ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்யப் பயன்படும் UTS, ரயில் இடத்தை கண்காணிக்க உதவும் என்டிசிஎஸ் என அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்கும்.
பல சேவைகள்: அதேபோல PortRead, Satark, TMS-Nirikshan போன்ற சேவைகளையும் ஐஆர்சிடிசி ரயில் கனெக்ட், ஐஆர்சிடிசி இகேட்டரிங், ஐஆர்சிடிசி ஏர் ஆகிய முக்கிய சேவைகளும் இந்த ஒரே இடத்தில் ஒருங்கிணைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது குறித்து அதிகாரிகள் மேலும் கூறுகையில், "பயணிகளிடம் கருத்துகளைக் கேட்ட பிறகே இந்த ஒருங்கிணைந்த செயலியை உருவாக்குகிறோம். அதேபோல விளம்பரங்களுக்கும் இதுபோன்ற ஒரே செயலி பேருதவியாக இருக்கும். இந்த சூப்பர் செயலியை வடிவமைக்கும் போது, செயலியில் விளம்பரம் மூலம் எந்தளவுக்குப் பணத்தைச் சம்பாதிக்க முடியும் என்பதற்கே அதிக முக்கியத்துவம் கொடுப்போம். இது ரயில் பயணிகளுக்கு ரொம்பவே முக்கியமானதாக இருக்கும்" என்றார்.
கடைசியில் ட்விஸ்ட்: அதேநேரம் இந்த செயலி உடனடியாக எல்லாம் பண்பாட்டிற்கு வராதாம். இதை உருவாக்கக் குறைந்தது ஓரிரு ஆண்டுகள் ஆகுமாம். இந்த மொத்த பிராசஸுக்கும் சுமார் ரூ.90 கோடி செலவாகும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. ஆன்லைன் முன்பதிவுகளில் 50% ஐஆர்சிடிசி இணையதளம் மூலம் வந்துள்ள நிலையில், மீது 50% சுமார் 2.8 லட்சம் புக்கிங் இந்த ரயில் கனெக்ட் என்ற ஒரு செயலி மூலம் மட்டுமே வந்துள்ளது. எனவே, இந்த ஒருங்கிணைந்த செயலி முக்கியமானதாக இருக்கும்.












Click it and Unblock the Notifications